Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...
Subbiahpatturajan
பிறகு....ஏன் எங்களைக்
"தூரத்து.....நியாயங்கள்....!
--------------------------------------
இன்றைய
சா(தீ)ய சமூகவியல் .
----------------------------------------------
கோபம் வந்தால்
எம்மையே அடைப் பெயராக்கி...
கொதித்து எழும் கொங்கணங்களே...,
எம்மில் அப்படி என்ன.....குறை
கண்டீர்..?....,,,,
நாங்கள் எவரையும் ஏமாற்றினோமா..?....
எதற்காகவும் பொய்யுரைத்தோமா..?...
எவருடைய பொருளையும்
அபகரித்தோமா...?.... இல்லை....,,,
எவருடைய பெண்டுகளையும்
கற்பழித்தோமா...?.... இல்லை.....,,,,
எவருடைய உரிமையையும்
எடுத்துக் கொண்டோமா....?....,,,
எவருடைய பதவியையும்
பிடுங்கிக்கொண்டோமா....?....,,,,
எவருடைய நிலத்தையும்
அபகரித்தோமா.....?.....,,,,
எந்த வகையிலும்
ஊழல் செய்தோமா...?....,
கள்ள வோட்டுக்கு காசு சேர்த்தோமா ?.....,,,,இல்லை...,,.,
போட்ட வோட்டுக்கு காசு கேட்டோமா....?,,,,,?????????
பிறகு....ஏன் எங்களைக்
கேவலப் படுத்துகிறீர்.....?
உமது பொருள்களைப் பாதுகாக்க
எங்களை நாடுகிறீர்.....!
உங்களின் குற்றக் கதவுகள் திறக்க....
எங்களின் விட்டுக் கதவைத் தட்டுகிறீர்......!
நீங்கள் தின்ற எச்சிலை
நாங்கள் உண்ணத் தருகிறீர்.....!,,,,
இத்தனைப் பெருங்குணம்
கொண்ட எங்களை.....,,,,
குறைத்து மதித்து.....
குரைத்துப் பேசுகிறீர்.....!
ஏனையா ....!....?....இப்படி ...! ?
பேசாதீர்.........அப்படி ...!
எங்கள் நேர்மை ...,,,உங்களுக்குகில்லை !
நாங்கள் காட்டும் .....நன்றி....,,,,
உங்களுக்கு அறவே கிடையாது !
உங்களின் வேடங்கள்....,,,,,
எங்களின் பாசங்களுக்கு முன்னால்....
சோகங்கள் நிறைந்த
தூரத்து......நியாயங்கள்....!!!!!!
கருத்துகள்