முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தென்னகத்தின் மான்செஸ்டர் என்ற பெருமை கொண்டது நமது ஊர்....!!!

Subbiahpatturajan




அன்பார்ந்த கோவை வாழ் தமிழர்களே...

தென்னகத்தின் மான்செஸ்டர் என்ற பெருமை கொண்டது நமது ஊர்

இந்தப் பெருமை நமக்கு எப்படி வந்தது?

நம்முடைய அயராத உழைப்பால்!
அதனால் விளைந்த உற்பத்தியால்!
நம்முடைய உடைக்க முடியாத ஒற்றுமையால்!!
அதனால் விளைந்த நிம்மதியான வாழ்க்கைச் சூழலால்!
நம்முடைய பாசமிகு மொழியால்!
அதனால் விளைந்த உயர்ந்த பண்பாட்டால்!

இது தான் வடநாட்டவன்களுக்கு, வடநாட்டு ஆரியன்களுக்கு, வடநாட்டு பனியாக்களுக்கு வயிற்றெரிச்சலைக் கொடுத்தது. நம்மை எப்படியாவதும் தோற்கடிக்க வேண்டும் என்ற வெறியைக் கொடுத்தது. நேரடியாக மோதினால் அவனை நிர்மூலமாக்கிவிடுவோம் என்று அவனுக்குத் தெரியும். அதனால், வஞ்சனையால், சூழ்ச்சியால் நம்மைச் சீர்குலைக்கத் திட்டமிட்டான்.

அன்று, குண்டு வெடிப்பு என்ற கோர நாடகத்தை நடத்தி, பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் தொழில் செய்யப் பயப்படும் நகரமாகக் கோவையின் நெற்றியில் கட்டங்கரேல் என்று ஒரு பொட்டு வைத்தான். பெங்களூரைப் போல், சென்னையைப் போல், ஹைதராபாத்தைப் போல், மும்பையைப் போல் வளர்ந்து செழித்திருக்க வேண்டிய நமது கோயம்புத்தூர் வைத்த குழியிலேயே வாடி நிற்கிறது!

நேற்று, ஜிஎஸ்டி என்னும் மலைகல்லைத் தூக்கி நம் தலைமீது வைத்தான். கோவை மட்டுமல்ல, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் எல்லாம் தொழிலின் பொலிவிழந்து நலிந்து நாவறண்டு திக்கற்றுத் தெருவில் நிற்கிறது.

இன்று, மதவாதிகளாக நம்மைச் சித்தரிக்கப் பார்க்கிறான். சாதிவெறியன்களாக நம்மைக் கட்டமைக்கப் பார்க்கிறான். இவன் ஊர்வலம் நடத்த நமது கடைகளை அடைக்கச் சொல்லிக் கல்லாலே அடிக்கிறான்!

நன்றாக எண்ணிப் பாருங்கள். நமது பெருமைகள் நமக்குச் சும்மா கிடைத்துவிடவில்லை. அரும்பாடுபட்டுச் சம்பாதித்தோம். நமது உண்மைக்கும், உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும், ஒற்றுமைக்கும் கிடைத்த சன்மானங்களே நமது வெற்றிகளும் பெருமைகளும். நாம் நமது வெற்றிகளைத் தனியாகச் சம்பாதிக்கவில்லை. தனியொருவராகச் சாதிக்கவில்லை. இங்கே வாழும் நம் அனைவருக்குமே இதில் பங்குண்டு.

கவுண்டராய், அருந்ததியராய், பறையராய், நாயுடுக்களாய், நாய்க்கர்களாய், முதலியார்களாய், நாடார்களாய், வண்ணார்களாய், நாவிதர்களாய், பள்ளர்களாய், ஒக்கலிகர்களாய், போயராய், ஒட்டராய், ரெட்டியார்களாய், படுகராய், தோடராய், முஸ்லிம்களாய், கிறிஸ்தவர்களாய், செட்டியார்களாய், குயவர்களாய், குறவராய், தேவர்களாய், வன்னியர்களாய், ஜங்கமர்களாய் (விடுபட்டோர் மன்னிக்க🙏) தனித்தனியாகப் பிரிந்து நின்று வெற்றிபெறவில்லை. எல்லோரும் இணைந்து, ஒற்றுமையாய், ஆனைக்கு ஆனை கைதூக்கி விட்டது போல் ஆளுக்கொரு கைகொடுத்து உதவிக்கொண்டு மேலெழுந்து கோவை மண்டலத்தின் பெருமையை உலகமே வியக்கும்படி கொண்டு சேர்த்தோம். அவினாசித் தேரை அலுங்காமல் குலுங்காமல் வடம்பிடித்து நிலை சேர்ப்பது போல் கைகோர்த்து நின்று சேர்த்தோம்.

அந்த ஒற்றுமையில் தான் இப்போது பிளவு உண்டாக்கப் பார்க்கிறான் வடநாட்டான். 

காவிக் கோவணத்தைப் பறக்க விட்டுக் கொண்டு நம்மைச் சாதிகளாகப் பிரித்து ஆளப்பார்க்கிறான். வயிற்றுப் பிழைப்பிற்கு நம் வாசல் தேடி வந்த வடநாட்டு ஏழைத் தொழிலாளிகளை வைத்தே நமது கண்களைக் குத்தப் பார்க்கிறான். நமது வியாபாரத்தை, தொழிலை, கெடுத்துக் குட்டிச் சுவராக்கப் பார்க்கிறான். நமது அடிமடியிலேயே கைவைக்கப் பார்க்கிறான்.

நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்,

காவிக்கொடி நமது கோவையில் உயர்ந்து பறக்கும் பொழுது, நமது மானமும் மரியாதையும் தாழ்ந்து போயிருக்கும்

ஓம்காளி ஜெய்காளி என்று அவன் உரக்கக் கூவக் கூவ, நமது ஒற்றுமையும், வாழ்வும் உருக்குலைந்து போகும்

அவனது தலைவர்கள் நமது ஊருக்குத் திரும்பத் திரும்ப வருகைதரும் போது, நமது தொழில் வாய்ப்புகள் தொலைந்து தரித்திரம் வந்து சேர்ந்துவிடும்

ஆனதுக்குப் புத்தி சொன்னா அறிவுமுண்டு நெனவுமுண்டு
ஈனதுக்குப் புத்தி சொன்னா இல்லெடத்தையுந் தோக்கும் 
என்பார்கள்.

நாம் ஆனதா? ஈனதா? என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இல்லிடமான நமது கோவையை எதிரிகள் ஆளும்படி செய்துவிடாதீர்கள்🙏🙏🙏🙏🙏

கொங்கு செழிக்க எங்கும் செழிக்க

ஆதரிப்பீர் ...

#நாம்தமிழர்கட்சி
#சீமான்
#வெல்லப்போறான்விவசாயி
மே 2ல் அனைவரும் சேர்ந்து சொல்வோம் நாம் தமிழர்....




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...