முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எவன் ஒருவன், ஏ!! இந்துக்களே, வாருங்கள் நாம் இந்துக்களாக ஒன்றிணைவோம்

Subbiahpatturajan

www.cinartamilan.com



2600 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இனம் நகர நாகரீகத்துடன் எழுத, படிக்க, கடல் கடந்து வாணிபம் செய்ய முடிந்தது என்றால்.

அந்த இனம் இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்வி அறிவு பெற்ற இனமாகத்தான் இருந்திருக்க வேண்டும். 

அப்படி கல்வியறிவுடன் முன்னேறியிருந்த இனம் 19ம் நூற்றாண்டின் முதல் பகுதி வரையிலும் படிப்பறிவில்லாமல் இருந்தது ஏன்?!எப்படி!?

*மூட நம்பிக்கை*

*இறை நம்பிக்கை*

*மத நம்பிக்கை*

இந்த மூன்று மந்திரங்களை வைத்து, அரசர்களின் உதவியுடன் ஒரு சிறு நாடோடி குழு, ஒட்டு மொத்த தமிழினத்தையும் 2000 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைப்படுத்தி வைத்திருந்துள்ளது

மன்னர்களிடம் இருந்த நாடு பிடிக்கும் பேராசையை பயன்படுத்திக் கொண்டு

1. இந்த திசையில் சென்றால் வெல்லலாம்

2. இந்த குறிப்பிட்ட நாளில் படையெடுத்துச் சென்றால், எதிரியை தோற்கடிக்கலாம்
 
3. இத்தனை பெண்களை மணமுடித்தால், சாம்ராஜ்யம் பெருகும்

4. இந்த இறைவனுக்கு கோவில் கட்டினால் மகாராஜாவாக ஆகலாம்

5. ராஜாவின் மனைவி அந்த புரோகிதருடன் உடலுறவு கொண்டால், புத்திர பாக்கியம் கிட்டும்

6. அந்த வேதியருக்கு, அந்த பண்டிதருக்கு 5000 வேலி நிலமும் 10 கிராமங்களும் தானமாக கொடுத்தால் உங்கள் தோஷம் தீரும்
என்று அரசர்களை முட்டாள்களாக்கி, அவர்கள் கல்விக் கூடங்கள், மருத்துவ கூடங்கள் அமைக்க விடாது தடுத்து, அறிவு வளர்ச்சியடைந்த ஒரு இனத்தையே 2000 ஆண்டுகள் கல்வியறிவு இல்லாமல் அடிமைப்படுத்தி இன்றைவரை வைத்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்த சேர, சோழ, பாண்டிய பல்லவ மன்னர்கள் யாவரும் கல்வி சாலைகளை திறக்காமல், மருத்துவ வசதிகள் கூடங்கள் இல்லமால், இரண்டு கிலோமீட்டர் இடைவெளியில் கோவில்களை "மட்டுமே" கட்டி, அந்த கோவில்களுக்கு நிலங்களை ஒதுக்கி, அதனை சமஸ்கிருதம் தேவபாஷை என்று கூறி ஏமாற்றி வந்த ஒரு குரூப் இட‌ம் ஒப்படைத்து விட்டனர்.  அதை மீட்க இன்றுவரை நம்மாள் முடியவில்லை காரணம் மூட நம்பிக்கை இன்றுவரை தொடர்கிறது. 

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், சமூகத்தில் உயர்நிலையில் இருப்பதாக கூறிக்கொள்ளும், நிலவுடமைச் சமூகமே இப்பொழுதுதான் கல்வியை உணருகிறது என்றால் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை!!!!????

ஒருவேளை, பிரிட்டிஷ் ஆட்சி அமையாமல் அரசாட்சியே தொடர்ந்திருக்கு
மேயானால் நம் நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்று பாருங்கள். 

ஏன் ஒரு குரூப் , ஆங்கிலேயர்களை திட்டிக்கொண்டே இருக்கின்றனர் என்று இப்பொழுதாவது புரிகிறதா?

மீண்டும் சூழ்ச்சிகள் மூலம் தடைகளை ஏற்படுத்து கின்றனர்.  அன்று அவர்களுக்கு கிடைத்த பேராசை அடிமைகள், சேர, சோழ,பாண்டிய, பல்லவ மன்னர்கள்.

கல்விச் சாலைகள் முழுக்க இராமாயணம், மகாபாரதம் என்று மாறிக் கொண்டிருக்கிறது. மீண்டும் சமஸ்கிருதம் எல்லா துறைகளிலும் எட்டிப் பார்க்கிறது

அதானி, அம்பாணி, பிர்லா, மிட்டல், பஜாஜ், கோத்தாரி, கோத்ரெஜ், வேதாந்தா போன்றவர்கள் நமது நிலங்களை எடுத்துக்கொள்ள ஏற்கனவே சட்டம் இயற்றிவிட்டனர். அடுத்து கல்வி பறிபோகும். அடுத்து உரிமை?!

எவன் ஒருவன், ஏ!! இந்துக்களே, வாருங்கள் நாம் இந்துக்களாக ஒன்றிணைவோம், உலக நாடுகளுக்கு தலைமை ஏற்கலாம் என்று மதத்தை தூக்கிக்கொண்டு வருகின்றானோ, அவன் அடுத்த 500 ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்த போகின்றான் என்று விளங்கிக் கொள்ளுங்கள்

நாம் விழிப்புடன் இருந்து நமது சந்ததியினரின் உரிமைகளை காப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...