முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சொரனை இருக்கிறதா❓ சோற்றில் உப்பு போட்டு தின்கிறீர்களா❓

Subbiahpatturajan





*அன்பான பாஜகவினர்க்கு, ஒரு இந்துவின் கேள்வி....* 
❓
நீங்கள் பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள் உண்மையான இந்துவே இல்லை, என நேரிலும், சமூக வலைதளங்களிலும், மிகவும் கீழ்தரமாக விமர்சிக்கிறீர்கள்..‼️

நாங்கள் இந்து இல்லை என்பதை, எதை வைத்து நீங்கள் அளவீடு செய்கிறீர்கள்❓

பாஜக சொல்லித்தான் நாங்கள் கடவுளை வணங்குகிறோமா❓
*அல்லது*
RSS-காரர்கள் சொல்லித்தான் கோவிலுக்கு செல்கிறோமா❓
*அல்லது*
பெரியார் சொன்னதற்காக கடவுளை வணங்குவதை நிறுத்திவிட்டோமா.. !
இல்லையே....❓
எப்போதும் மிகச் சரியானதையே, தேர்தெடுப்பவர்கள் நாங்கள்...‼️

ஒட்டுமொத்த இந்துக்களையும் உங்களுக்கு "பத்திரம்" போட்டு யாரும் எழுதி கொடுத்தார்களா❓

நீங்கள் வருவதற்கு முன், நாங்கள் என்ன நிர்கதியாகவா இருந்தோம்❓

பாஜக என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமே..‼️

முடிந்தால் மக்களுக்கு நன்மை செய்து மக்கள் மனங்களை வெல்ல முயற்சி செய்யுங்கள்..‼️
மாற்று மதத்தை சேர்ந்தவர்களே உங்களை ஆதரிப்பார்கள் அதை விட்டுவிட்டு பாஜகவை ஆதரிக்கவில்லை, என்கிற ஒரே காரணத்திற்காக..
என் இந்து மக்களை, சூடு சொரனை இருக்கிறதா❓
சோற்றில் உப்பு போட்டு தின்கிறீர்களா❓என விமர்சிப்பதும் சந்தேகிப்பதும் மிகவும் கீழ்தரமானது.
நாங்கள் உப்புபோட்டு உண்பதை, நேற்று வந்த வடமாநில கட்சியான உங்களிடம் நிரூபிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை..❗

நடுநிலை நக்கிகள் என்கிறீர்களே❓

உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம்,
முகத்திற்கு நேராக இந்த வார்த்தையை பயன்படுத்த முடியுமா❓

இதுதான் உங்கள் அரசியலா❓
இவ்வளவுதான் உங்கள் நாகரீகமா❓

பன்வாரிலால் புரோகித் தமிழக கவர்னராக பொறுப்பேற்ற பின் மாநில அரசின் பரிந்துரை இல்லாமல், மத்திய அரசின் வழிகாட்டுதலோடு தமிழகத்தில் கீழ்கண்ட உயர்பதவிகளை நியமனம் செய்தார்..
*1.* மதுரை பல்கலைக்கழகம் - எம் கிருஷ்ணன்..
*2.* அண்ணா பல்கலைக்கழகம் - சூரப்பா.
*3.* தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழகம் - சுதா சேஷய்யன்
*4.* தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் - பிரமிளா குருமூர்த்தி
*5.* தமிழ்நாடு கால்நடை பல்கலைகழகம் - C பாலச்சந்திரன்
*இவற்றில் 80 சதவிகிதம் பிராமணர்கள்..*
அதாவது தமிழ்நாட்டில் வெறும் 1.5 சதவீதம் மட்டுமே இருப்பவர்கள்.. மீதம் 98 சதவிகிதம் இருக்கும் முதலியார், பிள்ளை, நாடார், செட்டியார் கவுண்டர், வன்னியர்,பள்ளர்,பறையர், நாயுடு, யாதவர் போன்ற சமூகங்களிலிருந்து யாருமே இல்லையே ? நாங்கள் இந்துக்கள் இல்லையா❓

அப்படி என்றால் இந்துக்கள் என்றால் பிஜேபி ஆர்எஸ்எஸ் பார்வையில் வெறும் பிராமணர் மட்டும்தானா❓

தேர்தல் வேலை செய்வது , வாக்களிப்பது, போராட்டம் செய்து கோர்ட்டுகளில் கேஸ்களுக்கு அலைவது நாங்கள்...‼️
அதன் மூலம் கிடைக்கும் பதவி அதிகாரத்திற்கு பிராமணர்கள்..‼️
அந்த பிராமணர்கள் யாரும் தேர்தல்களிள் வாக்களிப்பது கூட கிடையாது.
இதுதான் RSS பிஜேபியின் இலக்கணமா❓

அப்படியெனில்...!
"எங்கள் வாக்கு"
உங்களுக்கு நிச்சயமாக இல்லை..❗
நீங்கள் எப்போதும்போலவே,
நோட்டாவுக்கு கீழேதான்..❗
*இப்படிக்கு....* 
*(சோற்றில் உப்பு போட்டு உண்ணும் மானமுள்ள தமிழன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...