முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு கட்டத்தில் சலிப்பு வரத்தான் செய்யும். ஏனென்றால்!,

Subbiahpatturajan





*''சலிப்பு...!"*
............................

வாழ்க்கை சலிப்பூட்டுகிறது என்றால், அதன் உட்கூறுகளான கல்வி, தொழில், பொழுதுபோக்கு, வேடிக்கை பார்த்தல், சும்மா இருத்தல் என இவற்றில் ஏதோ ஒன்று உங்களின் உற்சாகத்தை உறிஞ்சுகிறது என்றுதான் அர்த்தம்.

ஏதாவது ஒரு கட்டத்தில் சலிப்பு வரத்தான் செய்யும். ஏனென்றால்!, நீங்கள் அந்த வேலையை நேசித்து விட்டீர்கள்...

எங்கு நேசம் இருக்கிறதோ, அங்கே சலிப்பு ஏற்பட்டே தீரும். வெளி உலகத் தாக்கங்களுக்கு ஏற்ப மனநிலையில் சலிப்பு ஏற்படுவது இயற்கையானது...

ஆனால்!, “வாழ்க்கை சலிப்படையதான் செய்யும்” என்று அதிக நேரம் அதில் ஆழ்ந்துவிடாமல், சலிப்பிலிருந்து விரைவில் விடுபடுகிறவர் எப்போதும் ஒரு அடி முன்னால் செல்கிறார்...

இந்தச் சலிப்பை வெற்றிகொள்ள...

🔹 ஒன்று!, அனுபவப்பட்ட விளையாட்டு வீரர்களும், புகழ்பெற்ற திரைப்படக்காரர்களும் சொல்வார்களே, அதுதான். “முதன்முதலாக நுழையும்போது எப்படி நுழைந்தேனோ, அதே மனநிலையுடன் ஒவ்வொரு முறையும் காலடி எடுத்து வைப்பேன்! இன்றுதான் முதல் நாள் என்று நினைத்துக் கொள்வேன்...”

இங்கே தொழில் மீதான விருப்பத்தைவிட, அவர்களை அறியாமல் அவர்கள் தவிர்க்க விரும்புவது, அல்லது வெற்றி கொள்ள விரும்புவது, ஒரே மாதிரியான வாழ்க்கை தரும் சலிப்பைத்தான்...!

🔹 இரண்டாவது!, பொழுது போக்குகளில் விருப்பத்துடன் ஈடுபடலாம். முதியவர்களையே விழாவில் ஈடுபட வைத்து சலிப்படையாமல் பார்த்துக்கொண்ட சமூகம் அல்லவா நம்முடையது...

செக்குமாடு மாதிரி ஒரே வேலையை செய்தும், ஒரே மாதிரியான சிந்தனையில் உழன்றும், மன அழுத்தத்தில் சிக்கி மனபலம் இல்லாதவர்களாக காட்சி அளிப்பதோடு அவர்களுக்கு வாழ்க்கையிலும் சலிப்பு ஏற்படுகின்றது...

மகிழ்ச்சியாக இருக்கும் எல்லோரிடமும் சலிப்பு என்பதே இருக்காது. உயிரோட்டமான புன்னகை இருந்து கொண்டிருக்கும். மகிழ்ச்சி வேண்டுமானால், மனநிறைவு இருக்க வேண்டும்...

மனநிறைவு பெறவேண்டுமானால், வாழ்க்கையில் சலிப்பு என்பதே இருக்கக் கூடாது. மகிழ்ச்சியாக இருப்பவர்களால்தான் குடும்பத்தையே மகிழ்ச்சியாக வைத்திருக்கமுடியும்...

*ஆம் நண்பர்களே...!*

🟡 *"நான் செக்குமாட்டு வாழ்க்கை வாழப்போவதில்லை" என்று சொல்லிக் கொள்ளுங்கள்!, 'இப்படியே இருக்கப் போவதில்லை' என்று தீர்மானியுங்கள்...!*

🔴 *"என்னால் எதையும் சமாளிக்க முடியும்" என்று நம்புங்கள், சமாளியுங்கள், அச்சப்படாதீர்கள், இறங்குங்கள். சவால்களை எதிர் கொள்ள தயங்காதீர்கள்...!!*

⚫ *செக்குமாட்டு வாழ்க்கையில் இருந்து சற்றே விலகி, அடைந்திருக்கும் புதிய உற்சாகம் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாது. ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும்...!!!*


🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...