முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு ஏன் மத்திய அரசை எதிர்க்கிறது...?🤔

Subbiahpatturajan

கல்வி கற்பது எப்படி என்ற அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் சொல்லக்கூடாது, ...


இந்தியாவின் எல்லா மாநிலங்களும் அமைதியாக இருக்க தமிழ்நாடு மட்டும் ஏன் மத்தியரசை இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறது?

அதுக்கு இரண்டு காரணம்,
1) ஒன்னு இங்கிருக்கும் Inclusive Growth
2) இரண்டு மத்தியரசின் கொள்கைகள் எவ்வகையிலும் தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமைக்கு தொடர்பில்லாமல் இருப்பது

சமீபத்திய உதாரணம் புதிய கல்வி கொள்கை, 2019.

மத்திய அரசு நடத்திய உயர்கல்வி நிலையங்களுக்கான கணக்கெடுப்பு - AISHE 2018-19 அறிக்கை கீழே இருக்கு.

இதன் படி. . .
தமிழகத்தில் உயர்கல்வி ஆசிரியர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 இலட்சம்!
வேற எந்த மாநிலமும் அந்த எண்ணிக்கைக்கு பக்கத்துல கூட இல்ல!!

நம்மை விட 3 மடங்கு மக்கள் தொகை கொண்ட உத்திர பிரதேசத்தில் 1.4 இலட்சம்

இந்தியாவின் பொருளாதார தலைநகரமாக கருதப்படும் மகாராஷ்டிராவில் 1.6 இலட்சம்

போலி போட்டோஷாப்புகள் மூலம் வளர்ந்த மாநிலமாக காட்டப்படும் குஜராத்தில் வெறும் 57 ஆயிரம்!
~~~

இப்போ நான் சொன்ன Inclusive Growth என்பதற்கு வருவோம்.

மொத்தம் ஆசிரியர் எண்ணிக்கையில் பெண்கள் மட்டும். . .

தமிழ்நாடு  - 48%
மகாராஷ்டிரா - 40%
உ.பி - 32%
குஜராத் - 40%

மொத்தம் ஆசிரியர் எண்ணிக்கையில் OBC/SC/ST வகுப்பினர் மட்டும். . .

தமிழ்நாடு  - 82%
உ.பி - 36%
மகாராஷ்டிரா - 35%
குஜராத் - 29%

இந்தியளவிலான மொத்த எண்ணிக்கை ஒப்பீட்டில். . .

OBC

தமிழ்நாடு  - 30%
மகாராஷ்டிரா - 7.8%
உ.பி - 8.5%
குஜராத் - 2.3%

SC

தமிழ்நாடு  - 17%
மகாராஷ்டிரா - 14%
உ.பி - 9%
குஜராத் - 2.6%

ST

தமிழ்நாடு  - 1.3%
மகாராஷ்டிரா - 7%
உ.பி - 0.9%
குஜராத் - 7%

தமிழ்நாட்டின் ST Reservation என்பதே 1% தான் என்பதை கவனத்தில் கொண்டால், Open Competition மூலம் நாம் ST நுழைவை சாத்தியப்படுத்தியிருப்பது புரியும்.

சீரான வளர்ச்சி, பரவலான வளர்ச்சி என்பதெல்லாம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் மட்டும் சாத்தியமாகியிருக்கு என்பதை இந்த பட்டியலே சொல்லுதா?

இதர தென்மாநிலங்களோ, ஏன் நீண்டகாலம் கம்யூனிஸ்ட்கள் வசமிருந்த மேற்கு வங்கத்திலோ கூட இப்படியான சீரான, பரவலான வளர்ச்சி சாத்தியமாகவில்லை என்பதை இந்த பட்டியல் உங்களுக்கு உணர்த்தும்.

அப்போ, நமக்கான கல்விக் கொள்கையை வகுக்க இந்தியாவில் யாருக்கேனும் தகுதி இருக்கிறதா?
அதிலும் குறிப்பாக குஜராத் கூட்டத்துக்கோ, அதன் வழி நிற்கும் மத்தியரசுக்கோ தகுதி இருக்கிறதா என்று நீங்களே முடிவு செய்துக்கோங்க.

மத்த மாநிலங்கள் எல்லாம் காலம் காலமா தன்னிடம் இருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை தராம, தட்டு தடுமாறி தத்தி தவழ்ந்து படித்து மேல ஏற முயற்சிப்பவனிடமும் Merit, தகுதி, திறமை என்று எகத்தாளம் பேசி, தன்னிலை உணராமல் அவன் தங்களுக்கு அடிமையாகவே இருக்கனும் என்று இந்துத்துவாவை திணித்து,
வளர்ச்சி என்பதை ஒரு குறிப்பிட்ட குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே வைத்துக் கொண்டிருக்கின்றன.


ஆனா நம்ம தமிழ்நாடு அப்படியில்லை என்பதை தான் மத்தியரசின் புள்ளியியல் விவரங்கள் நமக்கு சொல்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய ஒன்று. . .இதில் அரசு & தனியார் துறை ஆசிரியர்கள் மொத்த பேரும் கணக்கில் எடுக்கப்பட்டிருக்காங்க. அதனால Reservation மூலம் மட்டுமே எல்லாரும் மேல வந்துட்டாங்கன்னு யாரும் ஒப்பாரி வைக்க முடியாது. காரணம் தனியார் கல்லூரிகளில் Reservation மூலம் யாரும் வேலைக்கு சேர்ந்துவிட முடியாது.

எந்த தேர்வு வைத்தாலும் முதல் மதிப்பெண் வாங்கும் ஒரு மாணவனுக்கு, கடைசி மதிப்பெண் பெறும் மாணவன் கல்வி கற்பது எப்படி என்ற அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் சொல்லக்கூடாது, சொல்ல முடியாது என்பதை அனைவரும் உணர்ந்தால் சரி.🥰🥰🥰🥰🥰


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...