Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajanஎல்லா சூழ்நிலைகளிலும் எதிர்மறையாக
எல்லா சூழ்நிலைகளிலும் எதிர்மறையாக சிந்தித்தால் அவர்களை இறைவனாலும் கூட காப்பாற்ற முடியாது...
சிலருக்கு நினைத்தது எல்லாம் நடக்கிறது....
காரணம் என்ன?
எண்ணங்கள்.
நேர்மறையான சிந்தனைகள்...
விடாமுயற்சி
நடக்கும் என்ற நம்பிக்கை...
இறைவன் அருள்
இவைகள் தான்..
உங்கள் ஆழ் மனம் நீங்கள் சொல்வதை அப்படியே கேட்கும்... முழுமையாக நம்பும்.. நடத்தியும் காட்டும்...
உண்மையில் சொல்லப்போனால் இந்த பிரபஞ்சத்தில் இவருக்கு
இது கிடைக்காது என்று எதுவும் இல்லை .
யாருடைய நிலை வேண்டுமானாலும் எந்த நொடியில் வேண்டுமானாலும் மாறலாம்.
தெளிவான எண்ணம்
ஒருவர் ஒரு குறிப்பிட்ட எண்ணத்தை ஆழமாக அழுத்தமாக நம்பும் பொழுது அது அவருக்கு உண்மையாக நடக்கும்.
முதலில் நம்புங்கள். நம்பிக்கை மட்டுமே உங்களை உங்கள் வாழ்வின் அடுத்தடுத்த நிலைக்கு இழுத்துச் செல்லும்...
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.
எந்த அளவுக்கு நீங்கள் நேர்மறையாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களைத் தேடி நேர்மறையான செய்திகள் மட்டுமே வரும்...
வெளி உலகில் நடக்கும் செயல்களையும் வெளி உலகில் உள்ள பொருட்களையும் வைத்து எதிர்மறையாக சிந்திக்காதீர்கள்...
அவையெல்லாம் நிலையற்றவை..
உங்கள் மனம் அதில் வாழும் இறைவன் இவை நிரந்தரமானவை..
மகிழ்ச்சியும் நிம்மதியும் இவற்றால் நிர்ணயிக்கப்பட்டால் நிலையானதாக இருக்கும்.
உங்கள் கைகளில் தான் உள்ளது
உங்கள் ஆழ்மனம் உங்கள் வாழ்வையே மாற்றக்கூடிய வல்லமை படைத்தது ...
அது எப்படி மாற்ற போகிறது என்பது உங்கள் கைகளில் தான் உள்ளது..
நேர்மறையாக சிந்திப்போம்.. நிச்சயமாக வாழ்க்கையும் நேர்மறையாக அமையும்....
உங்கள் எண்ணங்களால்
உங்கள் வாழ்க்கை அழகாகட்டும்.
அனைத்து உயிர்களும் இன்பங்களை அனுபவிப்பதற்காகவே
இறைவன் உலகைப் படைத்தார்.
ஆனால் மனிதர்களாகிய நாம் தேடித்தேடி கவலைகளை சுமக்கின்றோம்.
இந்த உலகில் கவலைகள் இல்லாதவர்கள் எவருமில்லை..
கவலைகள் எதுவும் நிரந்தரமும் இல்லை....
எவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்தாலும் உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொண்டு
உங்களுக்கு நீங்களே ஆறுதல் சொல்லிக் கொள்ளும் மனநிலைக்கு வந்து விட்டால்
உங்களுக்கு வேறு யாருடைய ஆறுதலும் தேவையில்லை..
எப்பொழுதும்... எல்லா சூழ்நிலைகளிலும் நேர்மறையாக சிந்திக்க முடிந்தால்
உங்களை யாராலும் அசைக்க கூட முடியாது...
எதிர்மறையாக சிந்தித்தால்
எல்லா சூழ்நிலைகளிலும் எதிர்மறையாக சிந்தித்தால் அவர்களை இறைவனாலும் கூட காப்பாற்ற முடியாது...
உண்மையில் நேர்மறையாக சிந்திக்கும் நல்ல எண்ணங்கள் நிறைந்த மனதிலேயே இறைவன் குடி கொண்டுள்ளார்..
ஆகவே முடிந்தவரை எல்லா சூழ்நிலைகளிலும் எல்லாவற்றிற்கும் நேர்மறையாக சிந்திக்க முயற்சி செய்யுங்கள்...
அப்பொழுது உங்கள் வாழ்க்கை சிறப்பாக மாறுவதை உங்களால் கண்கூடாக பார்க்க முடியும்...
நேர்மறையாக சிந்தித்து பாருங்கள்
நேர்மறையான சிந்தனைகள் மற்றும் விடா முயற்சியால் உங்கள் வாழ்வில் நீங்கள் நினைத்ததை விட சிறப்பான மாற்றங்களை நிகழ்த்திக் காட்ட முடியும்
முயற்சி செய்யுங்கள்... நிச்சயமாக மாற்றத்தை உணர்வீர்கள்
இறைவனின் அருளால் தங்கள் இல்லத்தில் அனைவருக்கும் நேர்மறையாக சிந்திக்கும் மனம் மற்றும் நிம்மதியான
நிறைவான வாழ்க்கை கிடைப்பதற்கு வாழ்த்துக்கள் 💐
கருத்துகள்