முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சஷ்டி விரதங்கள் எந்த மாதத்தில் இருக்கலாம் உணவு முறை என்ன?

Subbiahpatturajan
சஷ்டி விரதமிருந்து சகலமும் பெறலாம்!
சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும். தீபாவளியை  தொடர்ந்து வருவது மகா சஷ்டி மற்றும் கந்த சஷ்டி என அழைக்கப்படும்.
 கந்தசஷ்டி  காலம் பிரதமை நாளில் ஐப்பசி மாதம் வரும். 

சஷ்டி விரதத்தின் பலன்கள்

எல்லா மாதங்களில் வரும் சஷ்டி விரதங்களில்  மிகச்சிறப்பு வாய்ந்த விரதமாக 6 நாட்கள் கொண்டாடப்படும்  விரதம் கந்த சஷ்டி விரதம் என அழைக்கப்படுகின்றது. குழந்தை  பாக்கியம் கிடைக்க பின்பற்றப்படுகின்றது. 
செல்வம், ஆரோக்கியம், திருமண பாக்கியம் போன்ற நன்மைகள் பின்பற்றப்படுகின்றது. 
 கடுமையாக பின்பற்றப்படும் விரதம் கந்தன் அருள் பெற இவ்விரதத்தைப் பின்பற்றலாம்

விரதங்கள் எந்த மாதத்தில் இருக்கலாம்

நவம்பர் 8, 2021ஆம் தேதி கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகின்றது.
 நவம்பர் 13 ஆம் நாள் வரை இருக்கலாம். கடுமையாக விரதங்களை இந்நாளில் கடைப்பிடிக்க முடியவில்லையெனில் முடிந்தவரை விரதம் இருந்து வழிபடலாம்.
சூரன் சிவபெருமானை கடும் தவம் புரிந்து  சாகா வரம் பெற்றான்.
 கருவிலே உருவாகாத ஒரு குழந்தையின் கையிலேயே இறப்பு வேண்டும் என வரம் பெற்றான். அதன்பின் கர்வத்துடன்  அரக்கத்தனமான செயல்கள் செய்தான்.
 தேவர்களை துன்புறுத்தியதால் சிவபெருமான் முருகனை  நெற்றி பொட்டில் உருவாக்கி சூரனை அழிக்க அனுப்பினார். 
கந்தன் சூரனை வதம் செய்த ஆறு நாட்கள் விரதங்கள் இருந்து கடைப்பிடிப்போர்கள் வேண்டிய வரம் பெற்றனர்.
 காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் இவ்விரதமானது வேண்டியதை கொடுக்கும்.

விரதங்கள் எப்படி இருக்க வேண்டும்

கந்த சஷ்டி காலத்தில் காற்றை மட்டுமே உணவாக கொண்டு விரதம்  இருந்து வாழ்ந்தனர். 
தண்ணீர் மட்டுமே உணவாக கொண்டு  வாழ்வோரும் உண்டு. 
பால் மட்டும் உணவாக அருந்தி வாழ்வோரும் உண்டு.
6 நாட்கள் பழங்கள் சாப்பிட்டு வந்தனர். மசாலா இல்லாத சாப்பாடுகள் சாப்பிட்டு வந்தனர் ஒரு பொழுது உணவு சாப்பிட்டு வந்தனர். நம்மை வருத்தி வாழ்ந்தால் வேண்டியதை பெற்று  உண்டி சுருங்கி வளமோடு வாழலாம். 
தண்ணீர் மட்டுமே அருந்தி இருக்கும் விரதத்தால் கருவில் உள்ள நச்சுகள் வெளியேறும். விரத நாட்களில் கோபப் படக்கூடாது. கந்தனை முழுவதுமாக  நம்பி இருந்தால் கந்தன் அருள் நிச்சயம் பெற்று நித்திய நிம்மதி கிடைக்கும். 
ராஜா அழங்காரத்துடன் கூடிய முருகன் படத்துடன்  கணபதி அருளுடன்  தொடங்க வேண்டும். குலதெய்வத்தை வணங்கி விரதத்தை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.
 6 நாட்கள் கோவில் சென்று முருகனை வணங்க வேண்டும். முடியாதவர்கள் முதல் மற்றும் இறுதி நாளான ஆறாம் நாள் கோவில் சென்று வரலாம். 
சஷ்டி விரதமிருந்து சகல  வாழ்கை  வரமும் பெற்று வளமோடு வாழ நினைப்பவர்கள் பக்தியுடன் ஆறு நாட்கள்  அமைதியுடன் கந்தனை முழுவதுமாக நம்பி கந்த பூராணம் மற்றும் கந்த சஷ்டி கவசம் பாரயணம் செய்து வந்தால் விரும்பியதை பெறலாம்.
நம்பிக்கையோடு செய்து பாருங்கள் நம் கந்தன் அருள் கண்கூடாக பெறலாம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...