முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இதுதான் இன்றைய வாழ்வின் நிஜமாக இருக்கிறது.சங்கடப்படாதீர்கள், மனம் உடைந்து போகாதீர்கள்,

Subbiahpatturajan

இதுதான் இன்றைய வாழ்வின் நிஜமாக இருக்கிறது.

This is the reality of life today.
இராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த
ஒரு துறவியிடம்
நியூயார்க் பத்திரிக்கையாளர் ஒருவா்
பேட்டி எடுப்பதாக இருந்தது.
திட்டமிட்டபடி பத்திரிக்கை நிருபர்
பேட்டியை ஆரம்பித்தார்.
*நிருபர்* :
ஐயா உங்களுடைய முந்தய சொற்பொழிவில் "தொடர்பு" மற்றும் "இணைப்பு" என்பது பற்றி பேசினீர்கள், அது உண்மையிலேயே மிகவும் குழப்பமாக இருந்தது.
சற்று விளக்கி சொல்ல முடியுமா? என்றார்.
துறவி
புன்முறுவலோடு
நிருபர் கேட்ட கேள்வியிலிருந்து
விஷயத்தை  திசைதிருப்புகின்ற விதமாக,
அந்த நிருபரிடம் கேள்வி கேட்டார்?,
நீங்கள் நியூயார்கில்தான் வசிக்கிறீர்களா?
*நிருபர்* : ஆம்.
*துறவி* : வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?
இந்த துறவி 
என் சொந்த வாழ்வைப் பற்றியும்,
தேவையற்ற கேள்விகளையும் கேட்டு
தன்னுடைய கேள்விக்கு பதில் தருவதை
தவிர்க்க முயற்சிக்கிறார், என்று நிரூபா் நினைத்தார்,
இருந்தாலும் துறவியின் கேள்விக்கு
"என் தாயார் இறந்து விட்டார்,
தந்தையார் இருக்கிறார்,
மூன்று சகோதரா்கள் மற்றும் ஒரு சகோதரி இருக்கிறார்,
அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று பதிலளித்தார்
துறவி,..
முகத்திலே புன்னகையுடன்,
நீங்கள் உங்கள் தந்தையுடன் பேசுகிறீா்களா? என்று மீண்டும் கேட்டார்
இப்போது நி்ரூபா்
சற்று எரிச்சலடைந்து விட்டார்.
*துறவி* :
கடைசியாக எப்போது அவரிடம் பேசினீா்கள்?
*நிரூபர்* :
எரிச்சலை அடக்கிக்கொண்டு,
"ஒரு மாதத்திற்கு முன்பு இருக்கலாம்" என்றார்.
*துறவி* :
உங்களுடைய சகோதர சகோதரிகளை
அடிக்கடி சந்திப்பதுண்டா? 
குடும்பமாக சந்தித்தது கடைசியாக எப்போது?
என்றார்.
இப்போது அந்த நிரூபரின் நெற்றியில்
வியர்வை தெரிந்தது.
இதைப் பார்த்தால்
துறவிதான்
நிரூபரை பேட்டி காண்பது போல இருந்தது.
நீண்ட பெருமூச்சுடன்
நிரூபர் சொன்னார்,
"இரண்டு வருடங்களுக்கு முன்
கிருஸ்துமஸ் சமயத்தில் சந்தித்தோம்" என்று.
*துறவி* :
எல்லோரும் சேர்ந்து
எத்தனை நாட்கள் இருந்தீர்கள்?
புருவத்தின் மீது வடிந்த
வியர்வையை துடைத்தவாறே நிரூபர்
"மூன்று நாள்" என்றார்.
*துறவி* :
உங்களுடைய அப்பாவின் அருகில் அமர்ந்து, அவரோடு  எவ்வளவு நேரம் கழித்தீர்கள்?
இப்போது நிரூபர்
பதட்டத்துடனும் சங்கடத்துடனும்
ஒரு  காகிதத்தில் ஏதோ கிறுக்க ஆரம்பித்தார்.....
*துறவி* :
எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து
காலை உணவு, மதிய உணவு அல்லது
இரவு உணவை சாப்பிட்டீர்களா?
அம்மா இறந்த பிறகு
நாட்களை எப்படி கழிக்கிறீர்கள்
என்று அப்பாவிடம் கேட்டீர்களா?
இப்போது நிரூபரின் கண்களில் இருந்து
கண்ணீர் துளிகள் கீழே விழத் தொடங்கியது.
துறவி அந்த நிருபரின்
கைகளை பற்றியவாறு கூறினார்....
"சங்கடப்படாதீர்கள்,
மனம் உடைந்து போகாதீர்கள்,
கவலையும் கொள்ளாதீர்கள்.
தெரியாமல் உங்கள் மனதை
நான் புண்படுத்தி இருந்தால்
என்னை மன்னியுங்கள்.
ஆனால் இதுதான்
நீங்கள்
"தொடர்பு மற்றும் இணைப்பு" பற்றி
கேட்ட கேள்விக்கான பதில்.

நீங்கள் உங்களுடைய
அப்பாவுடன் தொடர்பில் இருக்கிறீர்கள்.
ஆனால் அவரோடு நீங்கள் பேசும்
இணைப்பில் இல்லை.

நீங்கள் அவரோடு
இணைக்கப்படவில்லை.

*இணைப்பு என்பது
இதயத்துக்கும் இதயத்துக்கும்
இடையே இருப்பது.......*

ஒன்றாய் அமர்ந்து, உணவை பகிர்ந்து,
ஒருவர்மீது ஒருவர் அக்கரை கொண்டு, தொட்டுக்கொண்டு, கைகுலுக்கி,
கண்களை நேருக்கு நேர் பார்த்து,
ஒன்றாய் சேர்ந்து ,
நேரத்தை செலவிடுவதுதான்....... இணைப்பு

कनेक्शन है
दिल और दिल को
बीच होना......*
एक साथ बैठकर खाना बाँटना,
एक-एक करके देखभाल करना, छूना, हाथ मिलाना,
सीधे आँखों में देखना,
साथ में,
समय बिताना है...... लिंक
நீங்கள்,
உங்கள் சகோதர சகோதரிகளுடன் தொடர்பில்(contact) இருக்கிறீர்கள்
ஆனால் நீங்கள் யாரும் பேசும்
இணைப்பில் இல்லை என்றார்.
,
आप अपने भाइयों और बहनों के संपर्क में हैं
पर तुम में से कोई नहीं बोलेगा
संबंध में नहीं कहा।

இப்போது நிரூபர்
கண்களை துடைத்துக் கொண்டு,
"எனக்கு அருமையான மற்றும்
மறக்க முடியாத பாடத்தை சொல்லித் தந்ததற்கு மிக்க நன்றி ஐயா" என்றார்.....
இதுதான்
இன்றைய வாழ்வின் நிஜமாக இருக்கிறது.
வீட்டில் ஆகட்டும் அல்லது சமுதாயத்தில் ஆகட்டும் ஒவ்வொருவரும்
நிறைய தொடர்பை வைத்திருக்கின்றனர்.
ஆனால் இணைப்பில் இருப்பதில்லை. எல்லோருமே அவரவர் சொந்த உலகில்
மிகவும் பரபரப்பாக இருக்கின்றனர்......

நாம் இதுபோல வெறும்
"தொடா்பை" பராமரிக்காமல், 
"இணைப்பில்" வாழ்வோமாக. 
நம்முடைய
அன்புக்கு உரிய அனைவரோடும் அக்கரையோடும்,
அன்பை பகிா்ந்து கொள்வதற்காக
நேரத்தை செலவழித்தும் வாழ்வோமாக.....

அந்தத் துறவி வேறு யாருமல்ல,
ஸ்வாமி *விவேகானந்தா்* ஆவார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...