முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உங்கள் தெருவில் நிற்கும் வார்டு கவுன்சிலர் கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரரா?

Subbiahpatturajan
ஒரு வேட்பாளர் வெற்றி பெற்று நகராட்சி உறுப்பினர் ஆனால் என்ன பணிகளெல்லாம் அவரால் செய்யமுடியும்? 
உங்கள் தெருவில் நிற்கும் வார்டு கவுன்சிலர் கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரரா?

பொது சுகாதாரம் - துப்புரவு, கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி, திடக்கழிவு மேலாண்மை 
  • மக்கள் உடல்நலம் மற்றும் நோய்த்தடுப்பு 
  • குடிநீர் வழங்கல் 
  • தெரு விளக்கு வசதி மற்றும் கல்வி மேம்பாடு  
  • கட்டிடங்கள் மற்றும் கட்டுவதை ஒழுங்குசெய்தல் 
  • தொழிற்சாலைகள் மற்றும் தொழில்கள் ஏற்படுத்துவதை உரிமம் வழங்கி முறைப்படுத்துதல் 
  • பிறப்பு/இறப்பு பதிவு 
  • மயானங்களை ஏற்படுத்தி பராமரித்தல். 
  • சாலை வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் பராமரித்தல் 
  • பூங்காக்கள் மற்றும் கட்டிடங்கள் பராமரிப்பு 
  •  மாநில, மத்திய அரசுகளின் திட்டங்களை செயல்படுத்துதல்
இன்னும் பல..

இதற்கான வருவாய் ஆதாரங்கள்: 

  • சொத்து வரி
  • தொழில் வரி
  • கேளிக்கை வரி
  • விளம்பர வரி
  • பயனீட்டாளர் கட்டணம்
  • நிறுவனத்தின் மீதான வரி
  • நுழைவு வரி
  • வணிக வளாகங்கள் வாடகை
  • பூங்காங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் வருவாய்
  • அரசு மானியம்
  • மாநில நிதி பகிர்வு
  • மத்திய அரசின் திட்டங்கள் மூலமான நிதி
மேலே குறிப்பிடப்பட்ட அனைத்தும், நகராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லோருக்கும் பொருந்தும், அவர் ஆளும் கட்சியா  இல்லை எதிர் கட்சியா என்ற கேள்விக்கு இடம் இல்லை.! 
*உண்மையான மக்கள் நலம் விரும்பும் ஒர் வார்டு கவுன்சிலர், தனது வார்டுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த நகராட்சியின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் பணியாற்ற முடியும்!*
நகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி நிர்வாகத்தோடு இணைந்து அதனது சுய விருப்பு வெறுப்புகளை களைந்து ஊரின் வளர்ச்சிக்கு கிராம வளர்ச்சிக்கும், வார்டு மக்களின் நலனுக்கும் துணை நிற்பதே உண்மையான மக்களின் சேவகர்.
ஆளும் கட்சி வேட்பாளரும், சுயேட்சை வேட்பாளரும் வார்டு மக்களால்  நேரடியாக வாக்களித்து தான் தேர்வு செய்யப்படுகிறார். 
தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர், நகராட்சி தலைவரால் பதவிப்பிரமாணம் செய்யப்பட்டு பதவி ஏற்கிறார். அது முதல் அவர்களது பணி தொடங்குகிறது. வேறெந்த  வேற்றுமையும் அவர்களுக்கிடையே இல்லை! 
  1. *உங்கள் தெருவில் நிற்கும் வேட்பாளர் களபணி செய்பவரா?*
  2. *நீங்க நினைத்த நேரத்தில் அவரை அனுகமுடியுமா?*
  3. *பெரியண்ணன் மனப்பான்மை இல்லாதா, சகோதர குணம் உடையவரா?*
  4. *கறைபடியாத கரங்களுக்கு சொந்தகாரரா?*
  5. *உங்கள் பகுதி கோரிக்கைக்களை நகர மன்றத்தில் உரக்க சொல்லக் கூடிய தகுதி உடையவரா?*
என பார்த்து வாக்களிக்களித்தால் மட்டுமே நம் தேவைகள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நிறைவேறும்!

சிந்திப்போம்! வாக்களிப்போம்!👆

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
அட போப்பா எல்லாம் களவாணி பயல் உள்ள கூட்டம் ஒரு ஓட்டுக்கு ஐநூறு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு இவனுவ கோடி ரூபாய் சம்பளத்தில் திளைப்பானுவ

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...