முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலங்கையின் வீழ்ச்சியும் இந்தியாவின் மோசமான பொருளாதார கொள்கையும்

Subbiahpatturajan

இலங்கையின் நிலைமை  இந்தியாவுக்கு வராமல் தடுக்க நமது இந்திய நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்.

இலங்கையின் வீழ்ச்சியும் இந்தியாவின் மோசமான பொருளாதார கொள்கையும்
 உண்மையைக் சொல்ல போனால் நமக்கு தேவையான அனைத்து பொருள்களையும் நம்ம பக்கத்தில் உள்ள நம்ம சொந்தக்காரர்,
 மாமன்,மச்சான் கடைகளில்தான் வாங்க வேண்டும்.
பத்து ரூபாய் விலை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை.
 வெளி நாட்டுக்காரன் திங்கிறத நம்ம ஆளுங்க சாப்பிடட்டும்.
 நம்ம வீட்டு எல்லா  நிகழ்ச்சியிலும் நம்ம சொந்தக்காரர்கள் தான் கலந்து கொள்வார்கள்.
 அமேசான் கம்பெனிகாரனோ பிளிப்கார்டு கம்பேனிகாரனோ எந்த ஆன்லைன் சூப்பர் மார்க்கெட் கம்பெனிகாரனோ உங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
 அரசு வேலை எல்லா மக்களுக்கும் கிடைக்காது.
 கொடுக்கவும் முடியாது.
 சுயமாக தொழில் செய்யும் சின்ன கடைகளிலும் தெருவில் கொண்டு வரும் சிறு வியாபாரிகளிடமும் பொருட்கள் வாங்க வேண்டும்.
 அவர்கள் குடும்பங்கள் வாழ உதவி செய்ய வேண்டும்.

 இலங்கையின் வீழ்ச்சிக்கு காரணம் சீனாவின் கம்பெனிகளே?!

பத்து ரூபாய் விலை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை
 சீனா பொருட்கள் மலிவான விலையில் கிடைத்ததால் இலங்கை மக்கள் சீனா தயாரிப்பு பொருட்களை மட்டுமே வாங்கி மகிழ்ந்தனர்.
 அதனால்  உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்தது.
எந்த நாடாக இருந்தாலும் சொந்த நாட்டின் தொழில்களை ஊக்க படுத்த வேண்டும்.
 பொது மக்கள் சொந்த நாட்டில் தயாரிக்கும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்.
நமது நாட்டின் படிக்காத ஏழை மக்கள் காடுகளில் ஈத்த ஓலை புல்லுகளை சேகரித்து வெளக்குமாறு கட்டி தயார் செய்து தலையில் சுமந்து கொண்டு வீடு வீடாக சென்று விற்பனை செய்து அவர்கள் குடும்பங்கள் வாழ்ந்தார்கள்.
அதையும் சீனாவின் சுற்றுசூழலை மாசு படுத்தும் பிளாஸ்டிக் வெளக்கு மாறை விற்பனையில் இறக்கி அவர்கள் பிழைப்பிலும் மண்ணை அள்ளி போட்டு விட்டார்கள்.
முன் காலங்களில் தென்னை மட்டையில்  கயிறு முறுக்கி கயிற்றால் தயாரிக்க படும் தரை விரிப்புகள் பயன்படுத்தினார்கள்.
 அதை சீனாவின் சுற்றுசூழலை மாசு படுத்தும் ரப்பர் தரை விரிப்புகளை இறக்கி படிக்காத ஏழை மக்கள் தொழிலை இல்லாமல் செய்து விட்டார்கள்.
 ஆற்றில் கோரம் புற்களை சேகரித்து பாய் நெய்து லட்சக்கணக்கான மக்கள் சுயமாக தொழில் செய்து சம்பாதித்து அவர்கள் குடும்பத்தினர் வாழ்ந்தார்கள்.
அதையும் சீனாவின் சுற்றுசூழலை மாசு படுத்தும் பிளாஸ்டிக் பாய்களை இறக்கி அவர்கள் தொழில்களும் நஷ்டம் அடைந்துள்ளன
வெளிநாட்டு கம்பெனிகளிடம் பல கோடிகள் நன்கொடை வாங்கி ஆன்லைன் கம்பெனிகளை ஊக்கப்படுத்துவதை விடுத்து
 சுயமாக தொழில் செய்யும் தொழிலாளிகளை தட்டி கொடுத்து ஊக்க படுத்துங்கள்.
 இல்லை என்றால் இலங்கையை விட இந்தியா மோசமான நிலைக்கு தள்ளபடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
தகவலுக்கு நன்றி இருந்தாலும் நாம் அன்றாட வாழ்வில் தினம் ஏதாவது ஒரு சூழலில் அந்நிய பொருட்களை உபயோகிக்கும் கட்டாயத்தில் தள்ளப் பட்டுள்ளோம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...