Cinar tamilan

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Latest Posts

"Google Pay PhonePe Paytm support numbers"How to contact. Here are some steps.

Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம்.  இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்:  1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்:  080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...

அன்று காட்டிக் கொடுத்த அந்த வடநாட்டு இளைஞன் இந்தியாவின் பிரதமர்...!!!

Subbiahpatturajan அன்று காட்டிக் கொடுத்த அந்த வடநாட்டு இளைஞன் இந்தியாவின் பிரதமர்... 1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான். சுதந்திரம் கேட்டுப் போராடினாயா "நீதிபதி கேட்கிறார்." இல்லை,... நான் போராட வில்லை என்னை விட்டுவிடுங்கள் என்று சொன்னவன் அத்தோடு நிற்கவில்லை, இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார்! அதே காலகட்டத்தில் தெற்கே தமிழகத்தில் விடுதலைப் போரில் பங்கேற்ற ஒரு இளைஞனை காவல்துறை கைது செய்கிறது! சிறையில் வைத்து சித்ரவதை செய்கிறார்கள். எத்தனையோ கொடுமைகளுக்குப் பிறகும் அவனிடமிருந்து எதையும் பெற முடியவில்லை. போராளிகள் ஒருவரைக்கூட அவன் காட்டிக்கொடுக்கவில்லை! கோபத்தின் உச்சத்தில் அதிகாரி ஒருவன் அந்த இளைஞனின் மீசையை தன் கையிலிருந்த சிகெரெட்டால் சுட்டுக் கருக்குகிறான். அந்த இளைஞனின் நெஞ்சுறுதியை குலைக்க முடியவில்லை.  தண்டனை வாங்கிக் கொண்டு, விடுதலை கனல் நெஞ்சில் எறிய சிறை புகுகிறான் அந்த இளைஞன்! நாடு விடுதலை அடைகிறது...! 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தமண்ணில் தேர்தல் நடக்கிறது. அன்று காட்டிக் கொடுத்த அந்த வடநாட்டு இளைஞன...

R.P.I க்ரிப்டோ கரன்ஸியை அறிமுகம் செய்ய இருக்கிறார்கள்...!?

Subbiahpatturajan க்ரிப்டோ.. ஜெரால்ட் காட்டன் என்கிற பெயரினை எத்தனைபேர்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? இந்த ஜெரால்ட் காட்டன் என்பவர் கனடாவின் மிகப்பெரிய கிரிப்டோ கரன்ஸி எக்ஸேஞ்சான QadrigaCX என்கிற நிறுவனத்தின் சீஃப் எக்ஸிக்யூட்டிவ். வெறும் முப்பதே வயதில் பல பில்லியன் டாலர்கள் பெருமானமுள்ள நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்த ஜெரால்ட் காட்டன், 2018-ஆம் வருடம் இந்தியாவிற்கு அவரது மனைவியுடன் வந்தார். ஹனிமூனுக்காகவும், அனாதை இல்லம் ஒன்றினைத் திறப்பதற்காகவும் அவர் இந்தியா வந்ததாகக் காரணம் சொல்லப்பட்டது என்றாலும் நிச்சயமான வேறு காரணங்களும் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் இந்தியா வந்த ஒரே வாரத்திற்குள் ஜெரால்ட் காட்டன் மர்மமான முறையில் இறந்துவிட்டார். அவர் இறந்ததற்கு உடல்நிலைக் கோளாறு சொல்லப்பட்டாலும், அதன் பின்னனியில் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் நிழலுலகினரின் பங்கு இருந்திருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். இறக்கையில் ஜெரால்டின் வசம் ஏறக்குறைய $215 மில்லியன் டாலர்கள் (ஏறக்குறைய 15,19,50,00,000 ரூபாய்கள்!) இருந்தது. அதற்கான பாஸ்வேர்ட் அவரிடம் மட்டுமே இருந்தது என்பதுதான் முக்கியம். அவரால் ...

வீட்டுக் கடனை அடைக்க 3 சிறந்த டிப்ஸ் ..!!! 3 best tips to pay off home loan .. !!!

Subbiahpatturajan வீட்டுக் கடன் லட்ச லட்சமாக வாங்கிவிட்டு கடனை விட இரண்டு மடங்காக வட்டிகட்டி ஆயுள் முழுக்க EMI ல்  தத்தளிப்பவர்களுக்கு ... சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்! லட்சக்கணக்கான தொகையை மொத்தமாக புரட்டி வீடு வாங்க முடியாது என்பதாலும், திரும்பக்கட்டும் மாதத் தவணைக்கு வட்டி மற்றும் அசலில் வரிச் சலுகை கிடைக்கிறது என்பதாலும் பலர் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்கவே பலரும் விரும்புகிறார்கள். இந்தியாவில் 15, ஆண்டுகள், 20 ஆண்டுகளுக்கு என வீட்டுக் கடன் வாங்கி இருந்தாலும் அதனை சராசரியாக எட்டு ஆண்டுகளில் கட்டி முடித்துவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வீட்டுக் கடனை தேர்ந்தெடுத்த காலம் வரை கட்டினால், கட்டும் வட்டி அதிகமாக இருக்கும். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்க்கலாம். * கடன் தொகை ரூ. 25 லட்சம் * திரும்பக் கட்டும் காலம் 30 ஆண்டுகள் (360 மாதங்கள்) * வட்டி: 10% * மாதத் தவணை ரூ. 21,939 இங்கே வாங்கும் கடனோ ரூ.25 லட்சம் தான். ஆனால், அதற்கு கட்டும் வட்டியோ ஏறக்குறைய ரூ.54 லட்சம். (பார்க்க: அட்டவணை 1) இப்படி கடைசி வரைக்கும் கடனைக் கட்டுவதற்...

கடவுளின் தூதுவன் இவன் தானோ ? நெகிழ்ச் சியான அனுபவம் :Is Ivan the Messenger of God? Flexible experience

Subbiahpatturajan கடவுளின் தூதுவன் இவன் தானோ ? நெகிழ் ச்சியான  அனுபவம் : இங்கே நாம் மூன்று விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்...  1. அந்த வயதான காலத்திலும் தன்னால் உழைத்து உண்ண முடியும் என்ற அபரிமிதமான நம்பிக்கை.  2.நாம் எந்த செயல் செய்தாலும் பிறர் நம்மை என்ன நினைப்பார் என்று நினைப்பது தவறு... ஏனெனில் இங்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு மிருகங்கள்  3.உதவும் பண்பு என்பது நாம் அனைவரிடத்திலும் எதிர்பார்க்க முடியாதது ...  உண்மையில் அந்த சிறுவனின் தாய் தந்தையும் அவனின் அன்பும் பாராட்டக்கூடியது

SCHOOL HOME WORK செய்யலயாம். என் மனைவி மகனுக்காக உதிர்த்த பொன்மொழிகள் ...

Subbiahpatturajan SCHOOL HOME WORK செய்யலயாம்.  என் மனைவி மகனுக்காக உதிர்த்த பொன்மொழிகள் ...  1.படிக்கலேன்னா உருப்படாம தான் போய்டுவ. 2.உழைக்கலேன்னா பிச்சைதான் எடுக்க போகணும்  3.பணம் இல்லாட்டி ஒரு நாய் கூட   உன்னை மதிக்காது. 4.நீ எல்லாம் எச்சில் இலை எடுக்கவும் எச்சில் தட்டு கழுவவும் தான் லாயக்கு. 5.இந்த வாட்டி பரிட்சைல பாஸாகலேன்னா ஸ்ரெய்ட்டா எருமை மாடு மேய்க்கதான் உன்னை அனுப்ப போறேன். ( எருமை மாடு மேய்ப்பது அவ்வளவு எளிதான வேலையா ?) 6.காசு பணம் இல்லன்னா சொந்தக்காரங்க மதிக்க மாட்டாங்க. (எல்லா உறவுகளுமே அப்படித்தான் இருக்கிறார்களா?) 7.அப்பா அம்மா செத்ததுக்கு அப்புறம் நீ பிச்சைதான் எடுக்கப் போற. 8.வீட்டுக்கு அடங்காத பிள்ளையை ஊர் அடக்கும். 9.பணம் என்ன மரத்திலா காய்க்கிறது ? 10.உன்னோட திமிருக்கு நீ அழிஞ்சிதான் போகப் போற. சொல்ல வேண்டியவை : 1.படிச்சா நல்லா வாழலாம்.படிச்சா வாழ்க்கையில முன்னுக்கு வரலாம். 2.உழைத்தால் நிறைய சம்பாதிக்கலாம். 3.நிறைய பணம் சம்பாதித்தால் மதிப்புடன் வாழலாம். 4.படிச்சி முன்னுக்கு வந்து விட்டால் நாலு பேருக்கு வேலை கொடுக்கலாம். 5.நீ இந்த பரிட்சைலயும...

பாவம் இவர்கள் பரம ஏழைகள்..!?யார் முதலில் திருந்துவது.

Subbiahpatturajan பாவம் இவர்கள் பரம ஏழைகள்..!? எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்.. அதேசமயம் Mr.பொதுஜனத்தையும் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். 1.நூற்றைம்பது சவரன் போட்டு மகளுக்கு திருமணம் முடித்தவன் வீட்டில்  கலைஞர் TV ஓடுகிறது.  2.ஊருக்குள் 30 வீடுகள் வாடகைக்கு விட்டவன் #பசுமை வீடு மானியத்தில் வீடு கட்டிக்கொண்டான். 3.இரண்டு மகன்கள் அமெரிக்காவில் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அனாதைப் பணம் 1000 பெறுகிறார்கள்.  4.காரில் சென்று இலவச சேலை பெறுகிறார் ஒரு பெண். 5.IT கம்பெனியில் லட்சத்தில் சம்பளம், ஆனால் ஜாதி படி ரேஷன்கார்டு படி தாலிக்கு தங்கம் பெறுகிறார் இன்னொருவர். 6. 5000 சதுர அடியில் நீச்சல் குளத்துடன் வீடு. ஆனால் வீட்டுவரி ரூ350. அதாவது 20 வருடத்திற்கு முன்இருந்த பழையவீட்டின் வரியே தொடர்கிறது.  7. இது போக ரேசன் பொருளை வசதியானவர்கள் வாங்கி, ஏழைகளுக்கு விற்பது.  மானிய சிலின்டர்களை  கார் பார்ட்டிகளுக்கு விற்பது.  8.பைனான்ஸ்+சீட்கள் நடத்தி கோடியில் விளையாடும் ஒருவர் Income Tax என்றால் என்ன? என்கிறார்.  9...

கார்ப்பரேட் நிறுவனங்களின் சதிவலைக்குள் டாக்டர்களின் ஏமாற்று வேலைகள்..!!!

Subbiahpatturajan  Doctors' scams within the web of corporate companies .. !!! பாருங்க நாம இவ்வளவு நாள் என்ன நினைச்சோம் B.P. யின் அளவு 70-140....  70 கீழ போனா  Low B.P 140க்கு மேல போன High B.P ன்னு.. நினைச்சோம் ... அதுக்கு மருந்து மாத்திரை வாங்கி சாப்டாங்க ....  இதன் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் மருந்து மாத்திரை வியாபாரம் உலகம் பூரா நடக்குது....  ஆனா அந்த பல லட்சம் கோடி போதாதுன்னு இப்ப இந்த B.P அளவை மாத்தி அமைச்சி இருக்காங்க 😣😣😣...  அதாவது இனிமே 130க்கு மேல High B.P.. 80க்கு கீழ இருந்த Low B.P... 😳😳 இதை அமெரிக்க ஆய்வு நிறுவனம் வரையரை செய்து இருக்கு ..  இதன் மூலம் மேலும் 3 கோடி பேர் அமெரிக்காவில் மட்டும் கூடுதலா மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டாகணும்...  அனைத்துக்கும் அமெரிக்காவை உதாரணம் காண்பிக்கும் நம்ம ஊர் டாக்டர்கள் இதை அப்படியே உங்கள் கிட்ட சொல்லி உங்களை B.P. பேசண்டா மாத்துவாங்க ...   பின்ன எப்படிங்க மருந்து கம்பெனிகள் கிட்ட இருந்து கமிஷன் வரும்...                     உண்மையை சொல...

ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கவனித்து அனைவரும் சிரித்து கேலி செய்கிறீர்கள்.

Subbiahpatturajan இரண்டாம் வகுப்பு ஆசிரியை வாய்ப்பாடு ஒன்றை கரும்பலகையில் எழுதினார். இந்த வாய்ப்பாடு எழுத ஆரம்பித்தது முதல்...., வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி தொடர்ந்தது. காரணம், முதல் வரியில் வாய்ப்பாடு பிழையாக எழுதப்பட்டிருந்தது 1×9=7, ❌ 2×9=18, ✔️ 3×9=27, ✔️ 4×9=36, ✔️ 5×9=45, ✔️ 6×9=54 ✔️ 7×9=63 ✔️ 8×9=72 ✔️ 9×9=81 ✔️ 10×9=90 ✔️ * மாணவர்களைச் சிரிக்கத் தூண்டியது. * சமன்பாட்டை எழுதி முடித்து மாணவர்களை பார்த்த  ஆசிரியை....., சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு பேசத் துவங்கினார்... நான் 9வது  வாய்ப்பாட்டை பிழையாக எழுதியிருக்கின்றேன். இதன் மூலம் உங்களுக்கொரு உண்மையை புரியவைக்கப் போகிறேன். இந்த உலகம் உங்களை எப்படி விமர்சிக்கும் என்பதை நீங்கள் இதன் மூலம் புரிந்து கொள்வீர்கள். நான் இங்கு 9 முறைகள் மிகச் சரியாக எழுதியிருக்கின்றேன். அதற்காக நீங்கள் யாரும் என்னைப் பாராட்டவில்லை. ஆனால், நான் பிழையாக எழுதிய ஒரே ஒரு விஷயத்தைக் மட்டும் கவனித்து....... அனைவரும் சிரித்து கேலி செய்கிறீர்கள். நீங்கள் இலட்சம் தடவைகள் விஷயங்களைச் சரியாக செய்த போதிலும்......, இந்த உலகம் உங்களை ஒரு போதும் பார...

இரவில் ஆழ்ந்த தூக்கம் வரவில்லையா? எளிய மருத்துவம் :Many people do not get deep sleep at night Simple medicine:

Subbiahpatturajan குளிர் காலம் ஆரம்பமாகிவிட்டால் Middleage, senior citizens  க்கு  பொதுவாக ஒரு problem வரும். * Cramp *தசைப்பிடிப்பு பெரும்பாலும் இரவு நேரத்தில் வரும். கெண்டைக்கால் சதை, கால் விரல்கள், பாதங்கள், etc ,etc severe தசை பிடிப்பு. சதையும் நரம்புகளும் சேர்ந்து கட்டி போல் ஆகிவிடும். வலி உயிர் போய் விடும். எழுந்திருக்கவும் முடியாது படுக்கவும் முடியாது. யாராவது உதவ வேண்டும்.  அந்த கடின தசை பகுதியை மெல்ல அழுத்தமாக தடவி, சமநிலைக்கு கொண்டு வர வேண்டும். பின் Volini gel ஏதாவது தடவ வேண்டும். இரண்டு நாட்களுக்காவது அந்த வலி லேசாக இருக்கும். Cramp வரும் போது, தூக்கத்தில் இருந்தாலும், அலறி அடித்துக் கொண்டு எழுந்து  அழ ஆரம்பித்து விடுவார்கள்.Pain Uncontrollable. பொதுவாக Evion tablets 10 நாட்கள் சாப்பிட சொல்வார்கள். அப்போதைக்கு சரியாகிவிடும். பின் மீண்டும் வரும். ஆயுர்வேதம், வர்மம்  பயின்ற என் நண்பர் ,எளிமையான ஒரு தீர்வு கூறினார். வலது பக்கத்தில் Cramp வந்தால், இடது கையை காதோடு ஒட்டி மேலே தூக்குங்கள். இரண்டு அல்லது மூன்று நிமிடம் அந்த positionலேயே இருங்கள். Cramp ச...

மாஞ்சோலை சுற்றுலா செல்ல விருப்பமுள்ளவர்கள் கவனத்திற்கு...

Subbiahpatturajan மாஞ்சோலை சுற்றுலா செல்ல விருப்பமுள்ள பயணிகள் கவனத்திற்கு... இப்போது வனத்துறையினர் சார்பில் மாஞ்சோலை சென்று வர அனுமதி அளித்துள்ளனர் . விருப்பமுள்ளவர்கள் சென்று வரலாம். Manjolai நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் மணிமுத்தாறு அணைக் கட்டிற்கு மேலே உள்ள மாஞ்சோலை எனும் சொர்க்க பூமியான கோடை வாஸ்தலம். சிறப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம், பாபநாசம், காரையாறு, களக்காடு மற்றும் பாண தீர்த்தம் போன்ற சிறு அருவிகள், அணைக்கட்டுகள், பறவைகள் சரணாலயங்கள் என எத்தனையோ இயற்கை சூழ்ந்த இடங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன. இவற்றிற்கெல்லாம் மகுடமாகத் திகழ்வது மாஞ்சோலை. எப்படி போகலாம்? திருநெல்வேலியிலிருந்து 3 மணி நேரப் பயணம். கல்லிடைக்குறிச்சி , மணிமுத்தாறு அணை, Manimutharu அருவி வழியாகப் பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட, குறுகலான மலைப்பாதையின் வழியாகச் சென்று, 3500 அடி உயரத்தில் உள்ள மாஞ்சோலையை அடையலாம்.  அதற்கு மேல் 1000 அடி உயரத்தில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, கோதையாறு (மேல் அணை) போன்ற இடங்களில் தேயிலைத் தோட்டங்களும், பசுமை மாறாக் கா...

நீங்கள் அழிவை வேடிக்கை பார்க்கும் சமூகம் என்பதை மறந்து விடாதீர்கள் ?

Subbiahpatturajan இந்தியாவின் அடர்த்தியான காடுகளில் மேற்கு தொடர்ச்சி மலை முதலிடம். அடிக்கடி எங்கள் ஊர்காரர்கள், வயதான நண்பர்கள் சொல்லுவார்கள்..  நாங்கள் எல்லாம் பெரும்புயல் பார்த்தது கூட இல்லை.... இது வறண்ட கந்தகபூமி என்பார்கள். கந்தக பூமி என்பது இங்குள்ள முதலாளிகள் செய்தது. இயற்கையல்ல. ஆனால் புயல் வராமல் நம்மை காப்பது மேற்கு தொடர்ச்சி மலை தான். இந்த மேற்கு தொடர்ச்சி மலை...  தென்மாவட்டங்களை காக்கும் பெரிய அரணும் இதுதான். மழை தப்பி செல்வதற்கும் காரணம் இதுதான்.  உலகில் மிகப்பழமையான மலை இதுதான்.  இமயமலை சிவன் தோன்றிய பழைய மலை என விடும் கதைகளை அறிவியல் புறந்தள்ளி இம்மலையை கொண்டாடுகிறது. இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் ஜெனடிக் மரபணு மரங்கள் அதிகம் கொட்டிக்கிடக்கிறது. அதாவது வயதே கண்டு பிடிக்க முடியாமல்... இருக்கும் மரங்கள் ஒர் பக்கம்.. இன்னொரு பக்கம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மரம் அதன் விதை என தொடர்கிறது. இந்த மலை ஒரு பேரதிசயம் என்கிறது யுனஸ்கோ. செங்கோட்டை  குற்றாலம் பக்கம் மூலிகைகள் நிறைந்திருக்கும் இந்த காடு, தேனிப்பக்கம் நெருங்கும் போது தன்னை மாற்றிக்கொள்கிறது. இடையில...

திருப்பித் தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் If you give for free not to refund ...?!

Subbiahpatturajan *பணமே* உனக்குத் தான் எத்தனைப் *பெயர்கள்* !... பணம் பற்றிய கருத்து  அர்ச்சகருக்குக் கொடுத்தால் தட்சணை என்றும்... கோயில் உண்டியலில் செலுத்தினால் காணிக்கை என்றும்... யாசிப்பவருக்குக் கொடுத்தால் பிச்சை என்றும்...   கல்விக் கூடங்களில் கட்டணம் என்றும்... திருமணத்தில் வரதட்சணை என்றும்...  திருமண விலக்கில் ஜீவனாம்சம் என்றும்... விபத்துகளில் இறந்தால் நஷ்டஈடு என்றும்... ஏழைகள் கேட்டுக் கொடுத்தால் தர்மம் என்றும்... நாமாக விரும்பி ஏழைகளுக்குக் கொடுத்தால் தானம் என்றும்... திருமண வீடுகளில் பரிசாக மொய் என்றும்...       திருப்பித் தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால் அது  கடன் என்றும்... திருப்பித் தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் அது அன்பளிப்பு என்றும்... விரும்பிக் கொடுத்தால் நன்கொடை என்றும்...       நீதிமன்றத்தில் செலுத்தினால் அபராதம் என்றும்...        அரசுக்குச் செலுத்தினால் வரி என்றும்... அரசுப் பொது தர்ம ஸ்பானங்களுக்கு கொடுத்தால் அது நிதி என்றும்...        செய்த வேலைக்கு மாதந்தோறும் கிட...

*நாட்டைப் பாதுகாக்க கொலை செய்வது எங்கள் தொழில்.*

Subbiahpatturajan ராணுவ தலைமை தளபதி விபின் ராவத்  தனக்கு கீழுள்ள படைகளுக்கு அறிவுறுத்தும் சிறந்த பொன்மொழிகள்... ✍️👇 👇இதனை,  ஒவ்வொரு இந்தியரும்...  கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்... என ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் கூறியுள்ளார். இராணுவப் பொன்மொழிகள்   1.   *′′உங்களுக்கு வாழ்நாளின் அசாதாரண சாகசம் என்னவோ...* *அதுவே,* *எங்களின் அன்றாட வாழ்க்கை′′* - லே-லடாக் நெடுஞ்சாலையில், இந்திய ராணுவம் வைத்துள்ள வாசகம்.    2. *′′காற்று வீசுவதால் எங்கள் கொடி பறக்கவில்லை...* *தன் உயிரை தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரரின் இறுதி மூச்சுடன் பறக்கிறது"* - இந்திய ராணுவம்   3. *'′′நான் மூவர்ண கொடியை 'ஏந்தி' கொண்டு...*  *அல்லது*  *மூவர்ண கொடியைப் 'போர்த்தி' கொண்டு வருவேன்...*  *கண்டிப்பாக வருவேன்"* - கேப்டன் விக்ரம் பத்ரா, இறுதி வீர சக்கரம்.    4. *′′என் வீரத்தை நிரூபிக்கும் முன் என் மரணம் வந்தால்...* *நான் மரணத்தைக் கொல்வேன்...*   *என்று சத்தியம் செய்கிறேன்"* - கேப்டன் மனோஜ் குமார் பாண்டே, பரம் வீர் சக்ரா,  1/11 கூர்க்கா ரைபிள்...

தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் தமிழ் தெரியாத வடநாட்டு இளைஞர்கள் ..!?

Subbiahpatturajan தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் தமிழ் தெரியாத வடநாட்டு இளைஞர்கள் ..!? தமிழ் உறவுகளே உலகத் தமிழர்களே ..  அனைவருக்கும் வணக்கம்.    தமிழ்நாட்டில் அனைத்து வேலைகளிலும் தமிழே தெரியாதவர்கள் வட நாட்டுக்காரர்கள். இந்திக்காரர்கள் தமிழ்நாட்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும்  மருத்துவமனைகளிலும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் . இதற்கெல்லாம் காரணம் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் மாநில அரசுகள் இயங்கிக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் வருகிறது .  மாநில அரசின் வேலையில் தமிழ் தெரியாத வடநாட்டு இளைஞர்களை மருத்துவமனையில் மருந்து கொடுக்கும் பொறுப்பில் வைத்திருக்கிறார்கள்.  பணியில் தவறுதலாக மருந்து கொடுத்தாலோ...இந்தி தெரியாத டாக்டர் தமிழில் கூறினாலோ... தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது.  அப்படி அசம்பாவிதங்கள் நடந்தால் யார் பொறுப்பு ஏற்பது ... சரி இது தனியார் மருத்துவமனை என்றே வைத்துக் கொள்வோம் மருந்து வாங்க வரும் முதியவர்களுக்கு ஆங்கிலத்தில் சொன்னாலும் புரியாது...இந்தியில் சொன்னாலும் புரியாது...கடைசியில் மருந்து வாங்கி சாப்பிடுபவர்களுக்கு பக்க விளைவு வந்தாலும்...ஆ...

இணையதளத்தை நன்கு புரிந்து கொண்டவர்கள் இந்த முதலீட்டில் தலை வைத்து கூட படுக்க மாட்டார்கள்!!!

Subbiahpatturajan க்ரிப்டோ கரன்ஸி வாங்கலாமா வேண்டாமா..?! தமிழகத்தில் பெருகி வரும் க்ரிப்டோ கரன்ஸி செயல்பாடுகள். *  பெருநகரங்களில் மாத்திரம் அல்லாமல். தமிழகத்தின் பல பகுதிகளில் புற்றீசல் போல க்ரிப்டோ கரன்ஸி பெயரில் முதலீட்டு திட்டங்கள் ஆங்காங்கே தொடங்கப்பட்டு பலரும் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதனை புரிந்து கொள்ள ஆதியோடு அந்தமாக இந்த விஷயத்தை ஒரு பறவை பார்வையில் பார்த்து விடுவோம்.... க்ரிப்டோ கரன்ஸி என்பதை டிஜிட்டல் கரன்ஸி யாக  பலர் புரிந்து கொண்டாலுமே கூட *நிஜத்தில் இவைகளை  விருச்சுவல் கரன்ஸி யாகவே மதிப்பீடு செய்கிறார்கள்.* இங்கு விருச்சுவல் என்பது *இல்லாத ஒன்றை உருவகம் செய்து கொள்ளவது.* அல்லது இருப்பதாக கொள்வது.  VFX விஷுவல் எஃபெக்ட் எனும் திரைப்படத்தில் வரும் மாயாஜாலக் காட்சி போல. இங்கு இந்த விருச்சுவல் என்பதின் பொருளாக நாம் கொள்ள வேண்டும். ஆனால் விருச்சுவல் கரன்ஸி எனும் இதனை கணினி தொழில்நுட்பத்தின் மூலம் வேறோர் விதமாக கட்டமைப்பு செய்து வைத்து இருக்கிறார்கள்.  கணினி மென்பொருள் ஊடாக உள்ளீடு செய்வதென்பது இன்றளவும் 0,1 எனும் எண்கள் மட்டுமே. அதாவது கணித...

நம்மை ஏடிஎம் மெஷின்களாக மாற்றி வைத்திருக்கிறார்கள்..!?

Subbiahpatturajan நம்மை ஏடிஎம் மெஷின்களாக மாற்றி வைத்திருக்கிறார்கள்..!? ஒரே தலைவலி. மருந்துக் கடைக்குச் சென்றேன். மருந்துக் கடையில் இருந்த வேலைக்காரப் பையன் தலைவலிக்கான மாத்திரை ஸ்டிரிப் ஒன்றைத் தந்தான். உனது ‘ஓனர்’ எங்கேப்பா என்று கேட்டேன். அவருக்குச் சரியான தலைவலி. அதோ அந்தக் காப்பிக் கடையில் காப்பி சாப்பிடப் போயிருக்கிறார் என்றான் அவன்! என் கையிலிருந்த தலைவலி மாத்திரை ஸ்டிரிப் என்னைப் பார்த்து ‘ஏளனமாக" சிரித்தது. அம்மாவுக்கு பிபியும் (BP) ஷுகரும் ஏறி விட்டது. ஆகவே அலறி அடித்துக் கொண்டு டாக்டரைப் பார்க்க காலையிலேயே அம்மாவுடன் கிளம்பினேன். டாக்டர் யோகா செய்து கொண்டிருந்தார். முக்கால் மணி நேரம் காத்திருந்தோம் . அம்மாவை செக் பண்ணிப் பார்த்த டாக்டர் மருந்துகளை இன்னும் கொஞ்சம் அதிகப் படுத்த வேண்டும் என்றும் வேளாவேளைக்குச் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். அவர் எழுதித் தந்த அதிகப்படியான 5, 6 மாத்திரைகள் கொண்ட சீட்டை வாங்கிக் கொண்டேன்.  ஆர்வமிகுதியால்,ஒரு கேள்வி கேட்டேன்... “டாக்டர், நீங்கள் யோகா செய்கிறீர்களா?” என்று கேட்டேன். 15 வருடமாகச் செய்து வருவதாகவும் அ...

பாகிஸ்தானில் பொருளாதார வீழ்ச்சி இரண்டு மூன்றாக உடையும் அபாயத்தில்...?

Subbiahpatturajan பாகிஸ்தானில் பொருளாதார வீழ்ச்சி இரண்டு மூன்றாக உடையும் அபாயத்தில்...? உலக அரங்கில் ஒரு கப்பல் முழுக்க நீர்புகுந்து மூழ்கும் தருவாயில் இருக்கின்றது இனி அது அப்படியே மூழ்குமா இல்லை இதர கப்பலின் உதவியால் அதன் ஆயுள் நீட்டிக்கபடுமா என்பதுதான் இப்போது எழும் கேள்வி அந்த கப்பலின் பெயர் பாகிஸ்தான் இந்தியா எனும் வளமான நாட்டில் இருந்து அந்நாடு பிரிக்கபட்டதே இந்தியா எக்காலமும் பலம்பெற்றுவிட கூடாது என்பதன்றி வேறல்ல‌ ஆப்கானியரின் மொகலாயர் இந்தியாவினை ஆண்ட காலங்களில் அது உலகின் முதல் இட நாடாக இருந்ததை வியாபாரியாக வந்த வெள்ளையன் கவனித்தான் அவன் ஆளும்பொழுதும் இந்திய செல்வத்தின் வளம் அவனுக்கு புரிந்தது இந்நாட்டை அப்படியே விட்டு செல்லாமல் இதற்கு தலையடி கொடுத்து இந்நாடு தன் காலடியில் விழுந்து கிடக்க வழிதேடித்தான் பாகிஸ்தானை உருவாக்கி கிழக்கே வங்கத்தை உடைத்து அதையும் கொடுத்து சிட்டகாங் என துறைமுகத்தையும் கொடுத்தான் ஒருவகையில் கராச்சி சிட்டகாங் என இருபெரும் துறைமுகங்களுடன் பெரும் எதிர்காலம் பாகிஸ்தானுக்கு இருந்தது ஆனால் ஒருவித முரட்டு எதிர்ப்பில் பிரிந்த நாடு என்பதால் இஸ்லாமியருக்கு தனிநாட...

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...

மூலப்பத்திரம் என்றால் என்ன மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?"

` `எங்களுடைய பரம்பரைச் சொத்துக்கு பட்டா மட்டுமே உள்ளது. அதற்குப் பத்திரம் பதிவுசெய்வது எப்படி?" ``பரம்பரைச் சொத்துக்குப் பட்டா மட்டுமே இருந்தால் கவலையில்லை. ஏதாவது பத்திரம் வேண்டுமென்றால், குடும்பத்துக்குள்ளேயே ஒருவருக்கு அடமானம், குத்தகை போன்ற ஆவணம் எழுதி, பதிவு செய்தால், உங்களின் பெயருக்கு வில்லங்கம் மாறிவிடும். சில நாள்கள் கழித்து, பதிவான அடமானம் அல்லது குத்தகையை ரத்து செய்து பத்திரம் பதிவு செய்தால், வில்லங்கச் சான்றில் மீண்டும் உங்கள் பெயர் பதிவு இடம்பெறும்.'' பத்திரம் ``பத்திரப் பதிவில் மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?" ``ஆம். ஒருவருக்கு தாய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு தாய்ப்பத்திரம் சொத்துக்கு முக்கியம். தாய்ப்பத்திரம் இல்லாத சொத்து அநாதைதான். தாய்ப்பத்திரம் இல்லாவிட்டால், சொத்தின் மீது ஒரு நடவடிக்கை (மனைவி அல்லது மகள் அல்லது மகள் மீது தானப் பத்திரம்போல) எடுத்து ஒரு பத்திரம் பதிவு செய்தால், அதுவே தாய்ப்பத்திரமாக மாறிவிடும்." ``தாம்பரம் வரதராஜபுரத்தில் பெரும் நிலப்பரப்பு விற்கப்பட்டது. 3,600 சதுர அடி நிலத்தை நான் 1980-ல் வாங்க...

பாத்ரூம் கதவை சும்மா சாத்தி வைங்க, தாழ் போடவேண்டாம்...!?

Subbiahpatturajan 60/65 வயதிற்கு மேற்பட்ட  இருபால் அன்பர்களுக்கும் சில முக்கியமான டிப்ஸ்:- 1.பாத்ரும் செல்லும் பொழுது(வீட்டில்) கதவை சும்மா சாத்தி வைங்க, தாழ் போடவேண்டாம். 2.வீட்டை தண்ணீர் கொண்டு தரையை துடைக்கும்பொழுது நடக்கவேண்டாம். 3.ஸ்டூல்,நாற்காலி,பெஞ்ச் போன்றவற்றின் ‌.மீது ஏறி பொருட்களை எடுப்பது,சுத்தம் செய்வது, துணிகளை காயப்போடுவது, போன்ற வேலைகளை தவிர்க்கவும். 4.கார் இருந்தால் தனியாக ஓட்டவே கூடாது.கூட யாராவது கண்டிப்பாக இருக்க வேண்டும். 5.மாத்திரை மருந்துகளை வேளா வேளைக்கு தவறாமல் எடுத்துக் கொள்ளவும்.. 6.உங்களை எந்தவிஷயம் சந்தோஷப்படுத்துமோ அதை யாருக்காகவும், காம்ப்ரமைஸ் செய்ய வேண்டாம். 7.வங்கிக்கு பணம் எடுக்கச்சென்றால் தனியாகச்செல்ல வேண்டாம்.துணையுடன்செல்லவும். 8.வீட்டில் தனியாக இருக்கும் பொழுது அறிமுகமில்லாதோர் யாராவது வந்தால் கூடியவரை அச்சூழலை தவிர்க்கவும்.அல்லது மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவும். 9.கூடியவரை படுக்கையறை, குளியலறை, கழிப்பறை  ஆகியவற்றில் காலிங் பட்டன் அவசியம். அசாதாரண சூழலில் அழைப்பதற்கு உதவும். 10.சைக்கிள் முதல் கார் ...

உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள் இதோ..⁉️

Subbiahpatturajan விவசாயிகள் மட்டுமின்றி,  உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள் இதோ..⁉️ 1️⃣ எதற்காக அதானி குழுமம் 9.5 லட்சம் டன் உணவு தானிய சேமிப்பு கிடங்குகளை தயாராக வைத்துள்ளது..? இப்படி ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது மோடிக்கு அவரது அறிவுரையா..?? 2️⃣ அத்தியாவசிய உணவுப்பொருள்கள் பட்டியலை மாற்றியது ஏன்..? 3️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒரு சிறு விவசாயி எப்படி ஒப்பந்தம் போட முடியும்..?? அவன் சொன்ன இடத்தில்தானே கையெழுத்துப் போடவேண்டும். 4️⃣ மாநில அரசுகள் இதில் தலையிட முடியாது என்றால் யாருக்கு லாபம் ..?? 5️⃣ விற்பனைத் தொகையில் இப்படித் தவணை முறையில் தந்தால் எந்த விவசாயியால் பிழைக்கமுடியும்..?? 6️⃣ PDS system  என்னாவது ..?? 7️⃣ Food Corporation of India வின் நிலை என்ன..?? அவர்கள் நாடெங்கிலும் ஏற்படுத்தி உள்ள வசதிகள் யார் கையில் ஒப்படைக்கப்படும் என்பதை ஊகிப்பதில் சந்தேகம் உள்ளதா ..?? 8️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களால் மாநில இளநிலை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொள்வது அவ்வளவு கடினமா ..?? 9️⃣ ஒரு நாட்டில் உழவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் நீதி மன்றம் செல்லமுடியாது என்பது உண்மையில்...

As your habits are, there will be people who behave with you in the same way.

Subbiahpatturajan நல்ல பழக்கவழக்கங்களே ஒருவருடைய நடத்தையை நிர்ணயம் செய்யும்..* _ உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே..  எங்கு பார்த்தாலும் மனித மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் சிந்தனை வயப்பட்டதாகவே தோன்றுகிறது._  _*இறுக்கமான மனிதர்களாகவும், எந்திரகதியான மனிதர்களாகவுமே தென்படுகின்றனர். எண்ணக் குவியல்களின் கலவைகளையும், சிந்தனை ரேகைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் காணும் திசை எல்லாம் பார்க்க முடிகிறது.*_ _சகமனிதனைக் கண்டு மகிழும் உள்ளமோ, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ இல்லாமல் தனியொரு உலகில் சிந்தனைகளோடு பயணிக்கும் உலகமாக மாறி விட்டது._  _*இதற்கெல்லாம் அடிப்படை என்ன என்று சிந்தித்தால் அவரவருக்கான தனிப்பட்ட எண்ணங்களே ஆகும்.*_ _எண்ண ஓட்டங்கள் தவறாக இருக்கும் போது அங்கே வாழ்வியல் நெறிகளில் மாற்றம் ஏற்படுகிறது. மனித நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங்களுக்கே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை_ _ *நமது செயல்கள் அனைத்தும் நம் எண்ணத்தின் பிரதிபலிப்பே ஆகும். ஒருவரின் எண்ணம் நல்லவிதமாக இருந்தால் செயலும் நல்லவிதமாக இருக்கு...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* கோரானா கேள்வி பதில்கள்

Subbiahpatturajan *கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* 1. *நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?*  இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை *(Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை *அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போதோ)* க்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை.  2. *கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?*  இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந...

முன்னொரு காலத்தில் பெண் சுதந்திரம் என்பது

Subbiahpatturajan #பெண்சுதந்திரம் காஞ்சிபுரத்திற்கு பக்கத்தில் உள்ள கிராமம் தான் நான் வளர்ந்தது. என் வீட்டில் எல்லாம்  எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது ஆனா அக்கம் பக்கத்து வீடுகளில் பெண்களோட அடிப்படை உரிமைகள் கூட அவங்க பெற்றோர்களாலேயே பறிக்கப்படுவதை நேரில் பார்த்து வெறுத்துப் போய் இருக்கிறேன். பொட்ட புள்ளைங்க விளையாடக்கூடாது. பூமி அதிர நடக்கக்கூடாது.வாய்விட்டு சிரிக்க கூடாது . சமையல்கட்டு உள்ளேயே முடங்கி கிடக்க வேண்டும் . ஆனால் இந்த கட்டுப்பாடு எல்லாம் ஆம்பளை பசங்களுக்கு கிடையாது .அதை விட கொடுமை சாப்பாடு விஷயம் தான். ஆண்பிள்ளை பசங்களுக்கு நிறைய சாப்பாடு போடுவாங்க பொம்பளை பசங்களுக்கு கம்மிதான் சொந்த அம்மா அப்பாவே இதை பண்ணா எப்படி இருக்கும் ஆம்பளையாகட்டும் பொம்பளையாகட்டும் வயிறு ஒன்றுதானே . அப்பவே எங்க அம்மாகிட்ட ஏம்மா இப்படி பண்றாங்கன்னு சண்டை போட்டு இருக்கேன். அதுல எங்க அம்மா நம்ம வீட்டில இப்படி இல்லை மத்தவங்க வீட்ல நடக்கிற தான் நாம எப்படிமா கேட்க முடியும் என்று சொல்லுவாங்க. நீங்களும் அந்த கொடுமைக்கு ஆளாகி இருக்கீங்களா...? அந்த சமயத்துல அம்மா அப்பாவை எதிர்த்து ஒன்றும் பண்ண...

ஆப்பிள் இந்தியா வந்த வரலாறு தெரியுமா உங்களுக்கு...!!? Do you know the history of Apple India ... !!?

Subbiahpatturajan மெல்ல அழிந்த #இயற்கை உணவுகள்..!! ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா?.. இறைவன் சில விஷயங்களை மிக அழகாக செய்திருக்கின்றான்...  குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்.. தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதனீர் அப்படியானது, அது உடலுக்கு குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிர்வரை உடலுக்கு ஏற்றது.. அரேபிய #பேரீட்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது.. ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்க படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்த கனி. #ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது.. மா பலா வாழை என தனக்கு சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது.. இங்கு வெள்ளையன்  வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாரை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை. வெள்ளையன் மிளகை தேடித்தான் வந்தான்... வந்...

தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே...???

Subbiahpatturajan ஏன்? எதற்கு? என, சிந்தித்துண்டா? தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட் டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே  நல்ல வேலைக்கு போகவா? ஆங்கிலம் சரளமாக பேசவா? குடும்பக் கௌரவத்தைக் காக்கவா?? ஏன்? எதற்கு? என்று சிந்தித்ததுண்டா?? 11TO12 200000 லட்சம் ஆக மொத்தம் Pre kg 25000 ல் துவங்குகிறது  Lkg 40000 Ukg 50000 1st.60000 2ND 70000 3D. 80000 4TH 90000 5TH 100000 6TO8 1.20000 9TO10. 150000 9,85,000 ரூபாய்  இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்புதான்.  சிட்டியில் இருக்கின்ற பெரிய பள்ளியில 20 லட்சத்தில இருந்து 40லட்சம் வரை வாங்குறாங்க. சரி! இதெல்லாம் இருக்கட்டும், இவ்ளோ செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா? உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும் அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்யமுடியும் உங்களால்.?  ஒன்றை நினைவில் வையுங்க...