முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இணையதளத்தை நன்கு புரிந்து கொண்டவர்கள் இந்த முதலீட்டில் தலை வைத்து கூட படுக்க மாட்டார்கள்!!!

Subbiahpatturajan

க்ரிப்டோ கரன்ஸி வாங்கலாமா வேண்டாமா..?!

இணையதளத்தை நன்கு புரிந்து கொண்டவர்கள் இந்தமுதலீட்டில் தலை வைத்து கூட படுக்க மாட்டார்கள்.!

தமிழகத்தில் பெருகி வரும் க்ரிப்டோ கரன்ஸி செயல்பாடுகள்.*

 பெருநகரங்களில் மாத்திரம் அல்லாமல். தமிழகத்தின் பல பகுதிகளில் புற்றீசல் போல க்ரிப்டோ கரன்ஸி பெயரில் முதலீட்டு திட்டங்கள் ஆங்காங்கே தொடங்கப்பட்டு பலரும் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இதனை புரிந்து கொள்ள ஆதியோடு அந்தமாக இந்த விஷயத்தை ஒரு பறவை பார்வையில் பார்த்து விடுவோம்....

க்ரிப்டோ கரன்ஸி என்பதை டிஜிட்டல் கரன்ஸி யாக  பலர் புரிந்து கொண்டாலுமே கூட *நிஜத்தில் இவைகளை  விருச்சுவல் கரன்ஸி யாகவே மதிப்பீடு செய்கிறார்கள்.* இங்கு விருச்சுவல் என்பது *இல்லாத ஒன்றை உருவகம் செய்து கொள்ளவது.* அல்லது இருப்பதாக கொள்வது. 

VFX விஷுவல் எஃபெக்ட் எனும் திரைப்படத்தில் வரும் மாயாஜாலக் காட்சி போல. இங்கு இந்த விருச்சுவல் என்பதின் பொருளாக நாம் கொள்ள வேண்டும்.

ஆனால் விருச்சுவல் கரன்ஸி எனும் இதனை கணினி தொழில்நுட்பத்தின் மூலம் வேறோர் விதமாக கட்டமைப்பு செய்து வைத்து இருக்கிறார்கள்.

 கணினி மென்பொருள் ஊடாக உள்ளீடு செய்வதென்பது இன்றளவும் 0,1 எனும் எண்கள் மட்டுமே. அதாவது கணித மொழியில் இரும எண்கள் மாத்திரமே. இதற்கு பைனரி என்று பெயர். இந்த அலகுகளை தான் கணினி மொழியில் பிட் அண்ட் ஃபைட் என்பர். அதாவது கணினிநினைவகத்தில் ஃபைட் (byte)களாகவே நாம் உள்ளீடுபவை சேகரிக்கப்படுகிறது. ஒரு ஃபைட் என்பது 8 பிட் (bit) களை கொண்ட ஒரு தொகுப்பு. அதனால் தான் கணினி நினைவகம் எட்டின் பெறுக்கலாகவே இருக்கிறது. 8,16,32,64.......
இன்று நாம் உபயோகிக்கும் செல்போனில் உள்ள நினைவகம் இந்த அலகில் தான் கணக்கிடப்படுகிறது. 

இன்றைய தேதியில் நாம் அநாயாசமாக பயன்படுத்தி வரும் வார்த்தைகள் 1gb, 2gb என்பதெல்லாம் இதனையே குறிக்கிறது. இங்கு gb என்பது ஜிகா ஃபைட். அதுபோலவே நம் செல்ஃபோனில் உள்ள நினைவகம் 32ஜிபி, 64ஜிபி, 128ஜிபி எட்டு எண்ணின் பெறுக்கலில் இருப்பதை நன்கு கவனித்தால் புரிந்து கொள்ள முடியும்.
அவ்வளவே சமாச்சாரம். 

இப்பொழுது நாம் விஷயத்திற்கு
வருவோம்.

 க்ரிப்டோ கரன்ஸி எனும் இந்த டிஜிட்டல் கரன்ஸி உலக அளவில் ஆனது. இதன் இன்றைய வர்த்தக மதிப்பு மாத்திரமே  ஜஸ்ட் 197 லட்சம் கோடி டாலர்கள் என்கிறார்கள். என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா...

 ஆனாலும்கூட நிஜம் இது தான்.இந்த க்ரிப்டோ கரன்ஸியில் கோலோச்சும் பிட்காயின் தான் இன்று பலரது தூக்கத்தை கெடுத்து வைத்து இருக்கிறது.
இதில் பல க்ரிப்டோ கரன்ஸி இருக்கிறது என்ற போதிலும் இந்த பிட் காயின் மாத்திரமே உலக அளவில் எல்லோருக்கும்  நன்கு பரிச்சயமான முதலில் வெளிவந்த விருச்சுவல் ரூபாய்.நாணயம். டாலர். என எப்படி வேண்டுமானாலும் இதை வைத்துக் கொள்ளலாம்.

நாம் முதலில் பார்த்த கணினி மென்பொருள் மொழியின் நினைவக அலகான பிட்டுடன் இதனை சமன் செய்கிறார்கள். அப்படி புரிந்து கொள்ள சொல்கிறார்கள்.
சரியா... 
இந்த பிட்காயின்
2017 ஆம் ஆண்டு வெளிவந்த சமயத்தில் இதன் சந்தை மதிப்பு நம் இந்தியாவில் 1780 ரூபாய் மட்டுமே..
அதன் இன்றைய மதிப்பு ஐம்பத்தி மூன்று லட்சம் டாலர்கள். அதாவது ஒரு பிட்காயின் மதிப்பு மாத்திரமே இது.எந்த ஒரு தொழில் முதலீடும் இத்தனை பெரிய லாபவிகிதாசாரத்தை தந்திருக்காது. அன்று யார் ஒருவர், ஒரு பிட்காயின் வாங்கி இருந்தாலும் இன்று அவர் கோடீஸ்வரர்.
அவ்வளவு தான்
நம்மவர்களை கேட்கவா வேண்டும்.பித்து பிடித்து அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட ஷேர் மார்க்கெட்டை  விட மோசமான பிஸினஸ் போலவே ஆகியிருக்கிறது. 

நம் இந்தியாவில் இதனை அரசு இன்னமும் அங்கீகரிக்கவில்லை..அங்கீகரிக்கும் உத்தேசமும் இல்லை. ஆனால் இதனை தடை செய்ய முடியவில்லை.

 தடை விதித்த போது உச்ச நீதிமன்றம் வரை சென்று சண்டை பிடிக்க ஒரு கூட்டமே தயாராக நின்றது. ஆதலால் ஸைபர் செக்யூரிட்டி மூலமாக கட்டுப்படுத்த கண்காணிக்க. முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்...... பலன் கிட்டதட்ட பூஜ்யம் தான்.
இது எதுவுமே சரியாக தெரிந்துகொள்ளாமல். இதில் முதலீடு செய்வதாக. செய்து தருவதாக அட்டகாசமான வலைப்பின்னலை வகுத்து செயல் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் தற்போது நம் தமிழகத்தில்..
பங்கு சந்தையை விட மிக ஆபத்தான அபாயகரமான முதலீடு இது....

நாளை எது ஒன்று என்றாலும் கூட புகார் கொடுக்க எந்த ஒரு தடயமும் இல்லாத வகையில் தான் இந்த வலைப்பின்னல் தளங்கள் செயல்படுகின்றன. 
இவற்றை எதனையும் கண்டுக்கொள்ளாமல்.சட்டை செய்யாமல் கிட்டத்தட்ட ஏழாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நம் தமிழகத்தில் மாத்திரமே கடந்த மூன்று மாதங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று சொல்லி அதிர்ச்சி அளித்து இருக்கிறார்கள்.

 இதில் ஈடுபட்டவர்கள். இப்படி முதலீடு செய்த பலரும் படித்தவர்கள், சாமானியர்கள்... நடுத்தர வர்க்கம் என்பது தான் இதில் வேதனை தரும் விஷயமாக இருக்கிறது.

இணையத்தை நன்கு புரிந்து கொண்டவர் இந்த பக்கம் தலைவைத்து படுக்க மாட்டார்கள்.

 காரணம் இதில் புழங்கும் தொகை மருந்துக்கு கூட நல்ல விஷயங்களுக்கு பயன் படவில்லை. சமூக விரோத செயல்களுக்கு தான் பயன்படுத்துகிறார்கள்.
 ஆள் அடையாளம் தெரியாத செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். நேரிடையான காரியங்களாக இருக்கப்போவதில்லை

.கணினி வழி சூதாட்டம் முதல் போதை வஸ்து பரிமாற்றம் வரையிலும் நிழலான காரியங்களுக்கு இந்த க்ரிப்டோ கரன்ஸி பயன் படுத்தப்படுகிறது.


தொழில் முகவர்களை இதில் இழுக்கும் வண்ணம். அவர்களிடம் வரி செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இருக்காது என்பது போன்ற பொய் செய்திகள் பரப்பப்படுகின்றன.

குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்க ஆகும் செலவில் பாதியளவு இந்த வகை க்ரிப்டோ கரன்ஸி கொடுத்தால் போதும் என்பது போன்ற செயல்பாடுகளை இது கொண்டு இருக்கிறது.
ஓர் வளமான சமுதாயத்திற்கு இவையெல்லாம் சாப கேடுகள். தேசத்தின் வளர்ச்சி என்பது அதன் மக்களாகிய நாம் செலுத்தும் வரியில் தான் அடங்கி இருக்கிறது.  அதனை குறுக்கு வழியில் குழி பறிக்கும் வேலை தான் இந்த க்ரிப்டோ கரன்ஸி சமாச்சாரம்.

டிஜிட்டல்பரிவர்த்தனைக்குகுதித்தவர்களுக்கு....கேலிபேசியவர்களுக்கு.இந்த டிஜிட்டல் கரன்ஸி பற்றி தெரியாதிருக்குமா என்ன. ஆனால் மூச்சே விடவில்லை யாரும்.நாம் தான் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். காரணங்கள் எதுவாக இருந்தாலும்.அவைநியாயமானதாகவே இருந்தாலுமே கூட இந்த பக்கம் தலை வைத்து படுத்துவிடாதீர்கள்.

 இதில் முதலீடு செய்கிறேன் பேர்வழி என கிளம்பி விடாதீர்கள். கவர்ச்சி கரமான ஆரம்ப கால லாபம் நிரந்தரமான வீழ்ச்சிக்கு வித்திட்டு வாழ்க்கையை சீரழித்துவிடும்.
வளமான தமிழகம்..
வலிமையான பாரதம் என்பதே நம் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.... அப்போது தான் இது போன்ற விஷயங்களில் மனம் ஈடுபடாதிருக்கும்.

நாம் பார்க்கும் நபர்கள்.... நமக்கு தெரிந்தவர்களை இதில் ஈடுபடாது பார்த்து கொள்வதும் கூட நமது பொறுப்பு தான் தற்போதைக்கு... வேறு வழி இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...