முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் தமிழ் தெரியாத வடநாட்டு இளைஞர்கள் ..!?

Subbiahpatturajan

தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் தமிழ் தெரியாத வடநாட்டு இளைஞர்கள் ..!?

தமிழ் உறவுகளே உலகத் தமிழர்களே ..  அனைவருக்கும் வணக்கம். 

 தமிழ்நாட்டில் அனைத்து வேலைகளிலும் தமிழே தெரியாதவர்கள் வட நாட்டுக்காரர்கள். இந்திக்காரர்கள் தமிழ்நாட்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும்  மருத்துவமனைகளிலும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் .
இதற்கெல்லாம் காரணம் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் மாநில அரசுகள் இயங்கிக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் வருகிறது . 
மாநில அரசின் வேலையில் தமிழ் தெரியாத வடநாட்டு இளைஞர்களை மருத்துவமனையில் மருந்து கொடுக்கும் பொறுப்பில் வைத்திருக்கிறார்கள். 

பணியில் தவறுதலாக மருந்து கொடுத்தாலோ...இந்தி தெரியாத டாக்டர் தமிழில் கூறினாலோ... தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது.
 அப்படி அசம்பாவிதங்கள் நடந்தால் யார் பொறுப்பு ஏற்பது ...
சரி இது தனியார் மருத்துவமனை என்றே வைத்துக் கொள்வோம் மருந்து வாங்க வரும் முதியவர்களுக்கு ஆங்கிலத்தில் சொன்னாலும் புரியாது...இந்தியில் சொன்னாலும் புரியாது...கடைசியில் மருந்து வாங்கி சாப்பிடுபவர்களுக்கு பக்க விளைவு வந்தாலும்...ஆச்சர்யபடுவதற்கு இல்லை .

அந்த இளைஞனிடம் எப்படி கேட்டு மருந்து கொடுப்பாய் என கேள்வி எழுப்ப அவன் Google translate செய்து மருந்து கொடுப்பேன் என்கிறார்.உங்களுக்கு தெரியுமா குகூள் மேப்பில் வழிதேடி குளத்தில் வண்டியை விட்டவர்களில் நானும் ஒருவன்...அது மட்டுமல்ல 100மீட்டர் தூரத்தை கடந்தால் ஊர் வந்திருக்கும் ஆனால் நாம தான் ரொம்ப ஸ்மார்ட் பாய் ஆச்சே ...3 கிலோ மீட்டர் வரை சுற்ற வைத்த பெருமை குகூளையே சேரும்

(மைண்ட் வாய்ஸ்)
என்னடா இது தமிழனுக்கு வந்த சோதனை...இது.

சரி இப்போ நம்ம டாப்பிக் உள்ள வருவோம்


  காரணம் இதை மத்திய அரசு நேரடியாக வலியுறுத்தல் செய்யும் அழுத்தத்தின் காரணமாக மூலமே  மாநில அரசு அடிபணிந்து செயல்படுகிறது .
மாநிலத்தின் உரிமையை இழந்தும் மாநில அரசு இருப்பதனாலேயே இதற்கு காரணம் என என்ன தோன்றுகிறது.
ஊழல் குற்றம் மாநில அரசின் மேல் அதிகம் இருப்பதால் தான். அவர்கள் சொல்வதற்கு அனைத்தையும் கேட்க வேண்டியிருக்கிறது .
இன்னும் எவ்வளவோ காரணம். தமிழர்நாட்டில் தமிழருக்கு வேலை இல்லாமல் தவிக்கிறார்கள் அதனால்தான் வெளிநாடுகள் தேடி போகிறார்கள்.

விழித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே...

உங்கள் பிள்ளைகள் இப்போது மதுவுக்கும் ஆண்ட்ராய்டு போன்களுக்கும் அடிமையாகிப் போய்விட்டனர்...

பச்சையாக ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால்...
நாளைய தலைமுறை தமிழனின் உண்மையான தலைமுறையாக இருக்காதுங்க....மாற்று இனத்தின் கலப்பினமாகத்தான் நாம் இருப்போம்...ஜெர்சி மாட்டினத்தைப் போல....

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
அது தான் இப்போது சட்டம் இயற்றப்பட்டது விட்டது தமிழ் நாட்டில் தமிழருக்கு வேலை என்று

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...