முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூய நம்பிக்கை எப்போதும் பரிபூரணமாக கிடைக்கும் இடம் இரண்டு ஏங்கே உங்களுக்கு தெரியுமா?!

Subbiahpatturajan

ஒரு சின்ன கதை...படித்ததில் மனதை நெருடிய வரிகள் உங்கள் பார்வைக்கு

தூய நம்பிக்கை  எப்போதும் பரிபூரணமாக கிடைக்கும் இடம் இரண்டு ஏங்கே உங்களுக்கு உங்களுக்கு தெரியுமா?!
ஓர் வார இறுதி விடுமுறைக்குபின்
திங்கட்கிழமை  காலை
வகுப்பினுள் நுழைகிறார்
ஆசிரியை சுமதி.
அவருக்கு ஒரு வழக்கம் இருந்தது.
அது ...
வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப்பார்த்து
'Love you all!' என்று சொல்வது.
தான் சொல்வது பொய்யென்று
அவருக்கே தெரியும்.
ஆம்!
அந்த வகுப்பிலுள்ள
ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்கமுடியவில்லை.
 ஒழுங்காய் உடுத்தாத,
எதிலுமே ஒழுங்காய் இல்லாமல்
சுட்டிக்காட்டுவதற்கு
எந்தவொரு 
சிறப்புத்தன்மையும் இல்லாத
'டெடி'என்கிற தியோடர்!
அவனிடம் மட்டும்
ஆசிரியை சுமதி
நடந்துகொள்ளும் விதம்
வித்தியாசமானது!
எந்தவொரு
தவறான விஷயத்திற்கும்
அவனையே உதாரணம் காட்டினார்.
எந்த நல்ல விஷயத்திற்கும்
அவனை நிராகரித்தார்.
அவ்வாண்டிற்கான
காலாண்டு பரிட்ஷை வந்தது.
முன்னேற்ற அறிக்கைகள்
வகுப்பாசிரியர்களிடமிருந்து
தலைமை ஆசிரியரின் கையெழுத்துக்கு அனுப்பப்பட்டன.
ரிப்போர்ட்டுகளை பார்வையிட்டு கையொப்பமிட்டுக்கொண்டிருந்த தலைமை ஆசிரியர்,
ஆசிரியை சுமதிக்கு
அழைப்பு விடுத்தார்.
அவர் வந்ததும்,
ஒரு பிள்ளையின் முன்னேற்றத்தை அறிவிக்கவேண்டும்.
தன் பிள்ளைக்கும்
ஓர் எதிர்காலம் உண்டென்ற நம்பிக்கையை
பெற்றோருக்கு தரவேண்டும்!
நீங்கள் எழுதியிருப்பதை
பார்க்கும்போது
பெற்றோர் அவன்மீது
நம்பிக்கை இழந்துவிடுவார்கள்!" என்று
தியோடரின் முன்னேற்ற அறிக்கையை
சுட்டிக் காட்டிக்கூறினார்.
ஆசிரியை சுமதியோ
"என்னால் ஒன்றுமே செய்யமுடியாது.
அவனைப்பற்றி எழுதுவதற்கு என்னிடம்
ஒரு நல்ல விஷயம்கூட இல்லை!" என்றார்.
தலைமை ஆசிரியர்
அலுவலக ஊழியர் ஒருவரிடம்
தியோடரின்
கடந்த கால
முன்னேற்ற அறிக்கைகளை
கொண்டு வந்து 
சுமதியிடம் கொடுக்குமாறு பணித்தார்.
அறிக்கைகள்
கொண்டுவரப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டாய்
விரித்துப்படிக்கிறார் சுமதி.
மூன்றாம் வகுப்பு
அறிக்கையில்
'வகுப்பின் மிகத்திறமையான மாணவன் தியோடர்' என
இருந்ததைக் கண்டு
தான் வாசித்ததை நம்பமுடியாமல்
அதிர்ச்சி அடைந்தார் சுமதி.
நான்காம் வகுப்பு
அறிக்கை சொன்னது.
'தியோடரின் தாய் புற்று நோய் முற்றிய நிலையில் உள்ளார்.
அதனால் தியோடர் மீது முன்னர்போல அவரால்
கவனம் செலுத்தமுடியவில்லை.
அதன் விளைவு அவனிடம்
தெரிய ஆரம்பித்திருக்கிறது. 
ஐந்தாம் ஆண்டின் அறிக்கை இவ்வாறு சொன்னது,
'தியோடரின் தாயார் இறந்துவிட்டார்.
அவன் மேல்
அக்கறை காட்டும்
உறவு தேவைப்படுகிறது. இல்லையேல் நாம் அந்தக்குழந்தையை இழந்துவிடுவோம்.!'
கண்களில் கண்ணீருடன்
சுமதி தலைமை ஆசிரியரைப்பார்த்து 'என்ன செய்யவேண்டுமென்று எனக்கு தெரியும்.' என்று
ஓர் உறுதியோடு கூறினார்.

அடுத்த திங்கள் காலை
ஆசிரியை சுமதி
வகுப்புக்கு சென்று
பிள்ளைகளை பார்த்து வழக்கம்போல் 'Love you all 'என்றார்.
இம்முறையும்
தாம் பொய் சொல்கிறோம்
என்று அவருக்குத்தெரியும். ஏனென்றால், தற்போது மற்றக்குழந்தைகளைவிட
டெடி எனும் தியோடர் மீது
அவரது அன்பு அளவுகடந்திருந்தது.
தியோடருனனான
தன் அணுகுமுறையை மாற்றிக்கொள்வதென்று
அவர் தீர்மானித்திருந்தார்.
அதன் பின்னர் ஒவ்வொரு
நல்ல விஷயத்திற்கும்
தியோடரின் பெயர் உச்சரிக்கப்பட்டது. ஒவ்வொரு தவறான உதாரணங்களின்போதும் அவன் பெயர் கவனமாய் தவிர்க்கப்பட்டது.
அவ்வாண்டின்
பள்ளி இறுதிநாள் வந்தது.
எல்லா மாணவர்களும்
தம் ஆசிரியருக்கென
பரிசுகள் கொண்டுவந்திருந்தார்கள். அவற்றிற்குள்
ஒரு பெட்டி மட்டும்
ஓர் பழைய செய்தித்தாளால் சுற்றப்பட்டிருந்தது.
ஆசிரியை சுமதிக்கு
அதை பார்த்ததுமே
அது டெடியிடமிருந்துதான் வந்திருக்கவேண்டுமென உள்ளுணர்வு சொல்லியது.
முதலில் அதையே பிரித்தார். பிரித்ததும்,
அதனுள் பாதி உபயோகித்த
சென்ட் பாட்டில் ஒன்றும்,
சில கற்கள் கழன்று விழுந்த பிரேஸ்லெட் ஒன்றும் இருந்தது.
அந்தப் பொருள்
தியோடருடையது என்று புரிந்துகொண்ட
முழு வகுப்பறையுமே சிரித்தது. ஒன்றுமே சொல்லாமல்
ஆசிரியை சுமதி
அந்த வாசனைத்திரவியத்தை தன்மீது பூசிக்கொண்டார்.
அந்த பிரேஸ்லெட்டை எடுத்து தன் கையில் அணிந்துகொண்டார்.
மெல்லியதாய் ஒரு புன்னகையுடன் தியோடர் சொன்னான்.
"இப்போது உங்களிடம்
என் தாயின் வாசம் வருகிறது. இறக்குமுன் அவர் இறுதியாய் வைத்திருந்த சென்ட் இதுதான்.
இந்த பிரேஸ்லெட்தான்
பெட்டிக்குள் வைக்கும்முன்
அவர் உடலிலிருந்து அகற்றப்பட்டது!”
ஓராண்டு கழிந்தது.
ஆசிரியை சுமதி மேசையில்
ஓர் கடிதம் கிடந்தது. ''
‘I have seen a lot of teachers.But only you are the best of them.
                                             With love                                                               Teddy.
ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஒரு கடிதம் கிடைத்தது. அதே வரிகளுடன்…

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...