முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

VAOs may oppose the renaming of the lease immediately after the deed is registered.

Subbiahpatturajan

“பத்திரப் பதிவு முடிந்தவுடன் கணினி வாயிலாக உடனே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு VAO க்கள் எதிர்க்கிறார்களாம்.” 

VAOs may oppose the renaming of the lease immediately after the deed is registered.

VAO க்கள் தைரியசாலிகளாக இருப்பதைப் பாராட்டித்தான் ஆகவேண்டும் !
அவர்கள் விரும்புவதெல்லாம்,
பத்திரத்தை தூக்கிக் கொண்டு VAO க்களான இவர்கள் முன் போய் கை கட்டி நிற்க, அவர் நம்மை உட்கார வைத்து
முதலில் எந்தவிதமான பட்டா?

முக்கியமான பட்டாவின் வகை

1. Simple Transfer Patta அதாவது வெறும் பெயர் மாற்ற பட்டாவா?
2. RPT பட்டாவா ?
3. Sub-Division பட்டாவா?
என்பதை ஆய்ந்து அதற்குத் தக்கவாறு,

யார் யாருக்கெல்லாம் கமிஷன் 

யார் யாருக்கு எவ்வளவு?
அதாவது VAO க்கு எவ்வளவு, R.I க்கு எவ்வளவு, சர்வேயருக்கு எவ்வளவு, ஹெட் சர்வேயருக்கு எவ்வளவு, A.T க்கு ,D.T க்கு எவ்வளவு, கடைசியாக தாசில்தாருக்கு எவ்வளவு என கூட்டல் கணக்கெல்லாம் நமக்கு கற்றுக் கொடுத்து விட்டு,

அப்பாவியாய் முகத்தைக் காட்டி பேரம் பேசிப் பேசி, சொத்தின் மதிப்புக்கும், விஸ்தீரணத்திற்குத் தக்க லஞ்சத் தொகையை அவர் நிர்ணயம் செய்து நம்மிடம் கோரிக்கை வைக்க, நாமும் உள்ளுக்குள் மனம் நொந்து, வெந்து, சகித்து பணிவுடன் பேரம் பேசி,

அவர்களது மனம் நோகா வண்ணம் சில/ பல ஆயிரங்களைக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு, அழுகையுடன் அட்வான்ஸ் கொடுத்து விட்டு, அவர்களின் பின் நடையாய் நடந்து செருப்பு தேய்ந்த பின் அவர்கள் நம் மீது கருணை காட்டி காசைக் கறாராக கறந்து கொண்டு,  நம் சொத்துக்கு, நம் பெயரில் பட்டாவைத் நம் கையில் திணித்து அனுப்புவதுதான் VAO க்கள் விரும்பும் சிறந்த முறையாம். 

மத்திய அரசின் முடிவு

அதை விடுத்து பத்திரப் பதிவு முடித்த உடன் பட்டாவைக் கைமேல் பெறலாம் என்று மக்களுக்கு வசதி செய்தால், லட்சங்களில் அவர்கள் இழக்கும் லஞ்ச வருவாயை எவ்வாறு ஈடு செய்வது ?

தங்கள் தினசரி வருமானத்தை விட்டுக் கொடுத்து மக்களுக்கு சேவை செய்யும் அளவுக்கா   அரசு ஊழியர்களை தயார் படுத்தி வைத்திருக்கிறார்கள்?
இவர்களுக்குப் இவ்வளவு தைரியம் வந்தது எப்படி?
ஆனாலும் மக்கள் நலனுக்கான அரசு திட்டத்தை லஞ்சம் கிடைக்காது என்ற காரணத்தால் எதிர்க்கும் அளவுக்கு VAO க்கள் தைரியசாலிகளாக இருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும் !
இவர்களுக்குப் இவ்வளவு தைரியம் வந்தது எப்படி?

விழிப்புணர்வு தேவை

மக்களே விழித்துக் கொள்ளுங்கள் !!
நம்மிடம் கொள்ளையடிக்க VAOகளின் வெளிப்படையாக மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை எதிர்க்கிறார்கள். என்றால் யார் ஏமாளிகள் என்று  புரிந்து கொள்ளவேண்டும் *VAO போராட்டத்தை எதிர்த்து குரல் கொடுங்கள். சமூக வலைதளங்களிலும் அதிகம் பகிருங்கள்....*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...