முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான்?

Subbiahpatturajan
பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை நடிகர்களின் ரசிக குஞ்சுகளுக்கு... வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு!
கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான்?
கல்லணை :-
உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்குஇரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை, இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான்?
மாமல்லபுரம் :-
கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும்பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள்.
 மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா?
அங்கோர்வாட் கோயில் :-
உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான்.
 இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது. திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை.
 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். 
இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும்
. இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.
திருநள்ளாறு காரி ஈசன் கோயில் :
 ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. 

 இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால்கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை, கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை, என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.
கடல் நடுவே ராமேசுவரம் :-
கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும்.
 பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.
தஞ்சாவூர் பெருவுடையார் கற்
கோயில்:-
கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
 புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். 
அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
 இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேஸ்கோ அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை.
 இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?
தொல்காப்பியமும் திருக்குறளும்:-
5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது.
 பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.

2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது. ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். 
தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கிலமொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?
அணு :-
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டுஅணுவின் அணுவினை …அணுகவல்லார்க்குஅணுவின் அணுவினை அணுகலுமாமே”-ஆசான் திருமூலர்சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். 

பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள்.

 அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து என்று பாடி உள்ளார்.
சித்தர்கள் :-
சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள், மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. 

கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே எனதமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியானதமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.
வானியல் அறிஞர்கள் :-
பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். 

அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.
பூம்புகார் உலகின் தொன்மையான நகரம் :-
9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. 

பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதர நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார்.

 அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.
உலகை கட்டி ஆண்ட தமிழன்:-
கடல் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித்தேவனே..
 வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே. 
அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது. இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே போதும். இவையணைத்தும் நான் படித்து ரசித்தவையே உங்களது மேலான பார்வைக்கும் பதிந்திருக்கிறேன் நிறைய பகிருங்கள் நமதுவரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய இது உதவும்.. 

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை என்ன அர்புதம் பழந்தமிழ் அரசர்கள் காலத்தில் கட்டிட அமைப்பு மற்றும் தொழில் நுட்பம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...