முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தென் தமிழக மாவட்டங்கள் 17 ஆண்டுகளுக்கு பிறகு அதிகமழையை சந்திக்க போகிறது.

Subbiahpatturajan

தென் தமிழக மாவட்டங்கள்
17 ஆண்டுகளுக்கு பிறகு அதிக மழையை சந்திக்கும் 

தென் தமிழக மாவட்டங்கள் 17 ஆண்டுகளுக்கு பிறகு அதிக மழையை சந்திக்கும்

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி மன்னார்வளைகுடா தென் தமிழக கடல் பகுதி வழியாக குமரி கடல் நோக்கி நகரும். இந்த காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில்  அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி இராமநாதபுரம் விருதுநகர் மதுரை தேனி திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் சில இடங்களில் மிக கனமழையும் மாஞ்சோலை போன்ற மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்புள்ளது

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களை பொறுத்தவரை கன்னியாகுமரி முதல் கோவை திருப்பூர் நீலகிரி வரை உள்ள மாவட்டங்களிலும் மாலை நேரத்தில் கனமழை பெய்யும். ஈரோடு சிவகங்கை புதுக்கோட்டை திருச்சி உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும். இன்று தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை அரியலூர் பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். 

பலத்த காற்று வீசும் எச்சரிக்கை :

பலத்த காற்று வீசும் எச்சரிக்கை :

தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழையின் போது தரைக்காற்று பலமாக வீசும். கடுமையான இடி மின்னல் இருக்கும் என்பதால் பொதுமக்கள் மழையின் போது திறந்த வெளியில் நிற்க வேண்டாம். மரங்கள் மற்றும் மின்கம்பங்களுக்கு அருகிலும் செல்ல வேண்டாம்.அடுத்த 4 நாட்களை பொறுத்தவரை குறிப்பாக மாலை இரவு நேரத்தில் தான் மழை பெய்யும்.பகலில் வெயிலின் தாக்கம் இருக்கும். 

17 ஆண்டுகளுக்கு பிறகு அதிக மழையா? 

ஏப்ரல் மாத்தில் பொதுவாக தென் தமிழக மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் அதிகமழையை பெறும் .ஏப்ரல் மாதத்தை பொறுத்தவரை 2005 ஆம் ஆண்டு தென் தமிழக மாவட்டங்கள் வரலாறு காணாத மழையை சந்தித்தது. 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நெல்லை மாவட்டம் 181 மிமீ மழையும் தூத்துக்குடி மாவட்டம் சராசரியாக 167 மிமீ  மழையையும் பெற்றது.  ஏப்ரல் 4,2005 அன்று மாஞ்சோலை ஒரே நாளில் 405 மிமீ மழையை பெற்றது. 

தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு அதிகமழையை சந்திக்க போகிறது தென்மாவட்டங்கள். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நெல்லை தூத்துக்குடி விருதுநகர் இராமநாதபுரம் மதுரை தேனி தென்காசி கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்கள் இயல்பை விட அதிக மழையை சந்திக்கும் கோவை நீலகிரி திருப்பூர் சிவகங்கை திண்டுக்கல் ஈரோடு சேலம் ஆகிய மாவட்டங்களிலும் ஓரளவு நல்ல மழையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  
விவசாய பெருமக்கள்  கவனத்திற்கு தாங்கள் பயிர் செய்யும் முன்

என்ன பயிர் விதைக்கலாம் 

 ஆகவே விவசாய பெருமக்கள்  கவனத்திற்கு தாங்கள் பயிர் செய்யும் முன் என்ன பயிர் விதைக்கலாம். விதைகள் முன்பே வாங்கி வைத்துக் கொள்வது அவசியம் மேலும் வாழை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள்
தங்கள் அருகில் உள்ள விவசாய பண்ணை அதிகாரியிடம் தொடர்பு கொண்டு விபரம் கேட்டு வாழை நடவு செய்யலாமா வேண்டாமா என்பதை உறுதி செய்யவும். காற்று பலமான வீசும் காலம் என்பதால் வாழைக் கன்று நடவு செய்யலாம்.ஆனால் வளர்ச்சி அடைந்த வாழைகளை பாதுகாப்பு செய்ய சவுக்குக் கம்பு ஊன்றி வைக்கலாம்.

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் சார் நல்ல பயன் உள்ள முறையில் உள்ள தகவல் முதல் முறையாக தெறிவித்தமைக்கு நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...