முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

*ஏன் நமக்கு கல்வி மறுக்கப்பட்டது*...

Subbiahpatturajan

*கல்வி மறுக்கப்பட்ட நமக்கு அந்த கல்வி கிடைத்தது எப்படி*

 சினார்தமிழன்

ஏன் நமக்கு கல்வி மறுக்கப்பட்டது*...

கொரோனா உபயத்தில் வீட்டில் ஓய்வில் இருக்கும் நாம் இந்த நேரத்திலாவது இதை படித்துத் தெரிந்து கொள்ளலாமே !!?   சோம்பல் படாமல்  தயவு செய்து படித்துப்பாருங்கள்...

1813 துவங்கி 1833 வரை கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவில் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்காக, வருடம் தோறும் வழங்கிய ஒரு லட்சம் ரூபாய் மானியம் என்ன ஆயிற்று? என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற குழு ஆய்வு நடத்தியது.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, 20 லட்சம் ரூபாய் என்றால் இன்றைய மதிப்பில் எத்தனை பில்லியன் என்று பாருங்கள்!

அவ்வளவு பணமும் இந்திய பொதுமக்களுக்கு போய் சேரவில்லை. கல்வியோ, பொது அறிவோ, முக்கியமாக அறிவியலோ வளரவே இல்லை. அந்த இருபது லட்சத்தையும் வேத பாட சாலை நடத்தி சமஸ்கிருதம் வளர்க்கவும், மதராசாவில் அரபிக் கற்பிக்கவும் தான் செலவாயிற்று என்று தெரிய வந்த போது அது பிரிட்டிஷாருக்கு அதிருப்தியை தந்தது.

காரணம், பிரிட்டனில் கல்வி என்பது மதச்சார்பற்றது. எல்லா மனிதருக்கும் பொதுவானது. முக்கியமாய் பிரிட்டனில் பெண்களும் படிக்க அனுமதிக்கப்
பட்டார்கள்.

ஆனால் இந்தியாவில் பெண்களை விடுங்கள், பிராமணரைத் தவிர வேறு எந்த வர்ணத்தாரும் கல்வி
கற்கவே கூடாது என்கிற விதி இருந்தது.

இந்தியாவின் இந்த விசித்திரமான வழக்கத்தை ஆய்வு செய்யும் பணி தாமஸ் பாபிங்டன் மெக்காலே எனும் ஆங்கேலேய அதிகாரிக்கு வழங்கப்பட்டது.

இந்த தாமஸ் மெக்காலே யார்?

அவர் ஒரு எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர், பல மொழி வித்தகர், அடிமை முறைக்கு எதிரானவர், முற்போக்கு கருத்தாளர்,  பெண்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என்கிற கொள்கை உடைய பிரிட்டிஷ் அதிகாரி.

இந்த லார்ட் மெக்காலே இந்தியாவிற்கு விஜயம் ஆனார். சமஸ்கிருதமும் பர்ஷியனும் கற்றுக்கொண்டார்.  அவருக்கு ஏற்கெனவே கிரேக்கமும், லத்தீனும் அத்துப்படி என்பதால், அதே வேர் சொற்களை கொண்ட சமஸ்கிருதம் அவருக்கு எளிதில் புரிந்துபோனது.

அவருடைய ஆழமான ஆய்விற்கு பிறகு, 1835ல் “இந்தியாவில் கல்வி” என்ற அவருடைய குறிப்புக்களை வெளியிட்டார். இந்த Minute on Indian Education எனும் உரை, பிறகு Macauley’s Minutes என்று பிரசித்தி பெற்றது.

அதில் மெக்காலே சொன்னது என்ன வென்றால்?
1. சமஸ்கிருத நூல்களில் இருக்கும் குறிப்புகள் அனைத்தையும் ஒன்று திரட்டிப் பார்த்தாலும், அவை பிரிட்டிஷ் ஆரம்ப கல்வி நூல்களை விட குறைவான தகவலே கொண்டுள்ளன.
2. இந்தியாவில் இது வரை சமஸ்கிருதத்திலும் அரபிக்கிலும் கற்பிக்கப்பட்டு வந்த பாடங்கள் அறிவியலுக்கு உகந்ததாக இல்லை
3. இந்தியர்கள் இதனாலேயே பிற்போக்கான, காட்டு மிராண்டித் தனமான மூடநம்பிக்கைகளை பின்பற்றுகிறார்கள்
4. அதனால் இந்திய மொழிகளில் பாடம் நடத்துவது வீண் செலவு.  அது அனைவருக்கும் போய் சேரவில்லை.

மெக்காலேவின் எண்ணம் எல்லோருக்கும் கல்வியில் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும். இந்தியர்கள் அனைவரும் வெளிதோற்றத்தில் பழுப்பு நிறத்தவராய் இருந்தாலும், எண்ணத்திலும் நாகரீகத்திலும், நேர்த்தியிலும், ரசனையிலும் பிரிட்டிஷாரை போல முற்போக்காய் இருக்க வேண்டும் எனும் சமத்துவ நிலையை அடைய வேண்டும். அதற்கு ஆகும் செலவை மனிதாபிமான அடிப்படையில் பிரிட்டிஷ் அரசே மேற்கொள்ள வேண்டும் என்றார்.

சில பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இது ஆபத்தான போக்காக தோன்றிற்று. இந்தியர்களை தமக்கு சமமான நாகரீக
நிலைக்கு கொண்டு வர முயல்வது வேண்டாத வீண் செலவு என்றே அவர்கள் நினைத்தார்கள்.


ஆனால் தாமஸ் மெக்காலே பிரிட்டிஷ் வரலாற்று நூல் எழுதியவர் என்பதால் அரச குடும்பத்திற்கு நெருக்கமானவர்.  மிக சிறந்த அறிஞர், நாணயமிக்கவர், மனிதாபிமானி, அப்பழுக்கற்ற அறச்சிந்தனையாளர் என்பதால் யாராலும் அவரை நேரடியாக எதிர்க்க முடியவில்லை.

இதற்கு இடையில் 1833ல் இந்தியாவில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அது வரை கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தில் இருந்த இந்தியா, 1833 முதல் நேரடி பிரிட்டிஷ் காலனியாக அறிவிக்கப்பட்டது.
லார்ட் பில்லியன் பென்டிங் பிரபு என்பவர் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றார்.

அவர் பொறுப்பேற்ற பிறகு இயற்றிய முதல் சட்டம்:

பெங்கால் சதி தடைச் சட்டம்.

ஆங்கிலேயருக்கு இந்தியாவில் ரொம்பவே பிடிக்காத காட்டு மிராண்டித்தனம் ஒன்று உண்டு என்றால் அது “சதி ஏறுதல்” எனும் மிகவும் கொடூரமான சம்பிரதாயம்.

இங்கிலாந்தில் கணவன் இறந்துவிட்டால், மனைவி விரும்பினால் மறுமணம்  செய்து கொள்ளலாம். அல்லது தனி பெண்ணாய் தன் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி சுயமாய் வாழலாம்.

ஆனால் இந்தியாவிலோ கணவன் இறந்தால், அதற்கு மேல் பெண்ணுக்கு மறுமணம் செய்வதில்லை. அந்த பெண்ணை சுயமாக வாழ விட்டாரும் இல்லை. அந்த பெண், கணவனின் சிதையில் தானும் குதித்து செத்தே ஆக வேண்டும் என்பதை கட்டாயமாக்கி இருந்தார்கள்.

பிள்ளைகுட்டி இருக்கிற பெண், இப்படி பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்ட

ு சதியில் குதிப்பதில் என்ன லாஜிக் இருக்கிறது?  அந்த பெண் உயிரோடு இருந்தால் தானே அவள் குழந்தைகளுக்கு அனுகூலம். அப்போது தானே அவள் மரபணுக்களுக்கு லாபம். அவள் கணவனுடைய மரபணுக்களுக்கும் லாபம்.

இதை விட்டுவிட்டு ஆரோகியமான ஒரு இளம் பெண் இறந்து போவதில் யாருக்கு என்ன லாபம் இருக்க முடியும்??

ஆனால் லாபம் இருப்பதாகவே இந்தியர்கள் நம்புவிக்கப்பட்டார்கள்! என்ன லாபம் தெரியுமா? கணவன் அவனுடைய ஈரேழு ஜென்மங்களில் செய்த அத்தனை பாவமும் போய், அடுத்த ஜென்மத்தில் காசியில், புனித நதியாக கங்கையின் கரையில் பிராமணனாக பிறக்கும் நல்வாய்ப்பை பெறுவான். அதனால் தன் கணவனுக்கு இந்த பாக்கியம் கிடைக்க வேண்டி கற்பில் சிறந்த பெண்கள் உடன்கட்டை ஏறுவது அவசியம்!!

அந்த பெண்ணுக்கு வலிக்குமே?
ஆங்! உண்மையான கற்புக்கரசிக்கு வலிக்காது! எல்லாருக்கும் கிடைக்குமா இந்த பாக்கியம். அதுக்கெல்லாம் கொடுப்பினை வேண்டும்!....  என்று சொல்லி, அழகு போட்டி என்று சொல்லி பெண்களை அரை நிர்வாணமாய் நிற்க வைத்து ஆண்கள் கண்களாலேயே வேட்டையாடுவது போல, கற்புக்கரசிக்கான போட்டி. கற்புள்ளவளுக்கு வலிக்காது என்று கதைகட்டி விட்டார்கள் கருட புராணம் எழுதிய பிராமணர்கள்.

இந்த கதைகளை எல்லாம் இந்தியாவில் படிப்பறிவில்லாத முட்டாள்கள் எல்லாம் நம்பி, ஷத்திரிய பெண்களையும், வைஷிய பெண்களையும் மானாவாரியாக உடன்கட்டை ஏற்றி கொன்றுவிட்டார்கள்!

ஆனால் சூத்திர பெண்கள் அதிகமாக உடன்கட்டை ஏறவில்லை. காரணம் சூத்திர பெண்கள் வேலைக்கு போனார்கள். அவர்கள் ஊதியம் ஈட்டினார்கள். உழவு, நெசவு, கொசவு, பூ தொடுத்தல், அரண்மனையில் வேலை செய்வது என்று சூத்திர பெண்கள் குடும்பத்திற்கு தங்கள் வருவாயை கொண்டு வந்ததால், அவர்களை யாரும் உடன்கட்டை ஏற்ற தயாராக இல்லை.

பிராமண, ஷத்திரிய, வைஷிய பெண்கள் வீட்டு வாசற்படியை தாண்டாமல், பொருளாதாரத்தில் பங்கே எடுக்காமல் இருந்ததால், அவர்களுக்கு சமூக மதிப்பு இல்லை. அதனால் அந்த பெண் சதி ஏறி செத்தால், அவளுடைய பிள்ளைகளை தவிர வேறு யாருக்கும் எந்த இழப்பும் தெரியவில்லை.

இந்தியர்கள் இந்த கருட புராண பொய்களை நம்பி இப்படி இளம் பெண்களை கொல்வதை பார்த்த ஆங்கிலேயருக்கு அறசீற்றம் பீறிட்டது. அவர்களுக்கு கங்கை புனித நதி இல்லை, காசி புனித தளம் இல்லை, ஈரேழு ஜென்மம் எனும் நம்பிக்கை இல்லை. பிராமணர் உயர்ந்தவர் என்றோ, பிராமணருக்கு தக்‌ஷனை கொடுத்தால் தான் புண்ணியம் என்றோ அவர்கள் நம்பவில்லை.

பிராமணர் எழுதிய சமஸ்கிருத நூல்கள் பலதை அவர்கள் படித்தார்கள். அந்த நூல்களில் இருந்த சுயநலமும், தந்திரமும், ஏமாற்றுத்தனமும் அவர்களுக்கு அருவருப்பாக இருந்தது.  இந்த சமஸ்கிருதம் வளர்க்க நாம் வேறு இருபது ஆண்டுகளாக மானியம் வழங்கி ஏமாந்திருக்கிறோமே என்கிற கோபமும் இருந்தது !!

சதி தடை சட்டத்தை இயற்றிய கையோடு, லார்ட் மெக்காலேவின் அறிவுரையின் படி, அடுத்த அதிரடி சட்டத்தை இயற்றினார் லார்ட் பென்டிங்: இனி பிரிட்டிஷ் இந்தியா முழுக்க, ஆங்கிலமே கல்விக்கான மொழி! ஒரே ஒரு சாராருக்கான சமஸ்கிருதத்தை இனி ஊக்குவிப்பதில்லை, எனும் ஆங்கிலவழி கல்வி சட்டம் 1835 முதல் அமலானது.

குருகுலம், வேத பாட சாலை, மதார்சா எனும் மத கல்விக்கு அதற்கு மேல் பிரிட்டிஷார் காசு
செல்வழிக்காமல், நேரடியாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பிரிட்டிஷ் தரத்தோடு, பிரிட்டனில் இருக்கும் அதே பாட திட்டத்தோடு இந்தியாவில் பள்ளிக்கூடங்களை ஆரம்பித்தார்கள்.

ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல், அறம், உடல் பயிற்சி என்று சர்வதேச தரம் வாய்ந்த கல்வி இந்தியர்களுக்கு இலவசமாய் கிடைக்க ஆரம்பித்தது.

1835ல் கல்கத்தாவில் ஒரு மருத்துவ கல்லூரி,
அடுத்த ஆண்டே கல்கத்தாவில் பொது நூலகம்,
1847ல் ரூர்கியில் இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி.
1848ல் கல்கத்தாவில் பெண்களுக்கான பிரத்தியேகப்பள்ளி

1835 முதல் ஆங்கில பள்ளிகளில் கற்றுத்தேர்ந்த மாணவர் கல்லூரிக்கு போக வேண்டுமே? அதனால் 1858ல் கல்கத்தா, சென்னை, மும்பாய் ஆகிய நகரங்களில் பல்கலைகழகங்கள் துவங்கப்பட்டன.....

இரண்டாயிரம் ஆண்டுக்கால இடைவெளிக்கு பிறகு இந்தியர்களுக்கு கல்வி எனும் ஆயுதம் கிடைத்தது.

இப்போது சொல்லுங்கள், இத்தனைக்கும் காரணமான அந்த தாம்ஸ் பாபிங்டன் மெக்காலே தான் நமக்கு கல்வி வள்ளல் ..!!

நண்பர்களே இதைப் படித்ததற்கு நன்றி ....   பகிருங்களேன் ..


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...