முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு தேசிய இனத்தை முற்றிலுமாக அழிப்பது எப்படி...?

Subbiahpatturajan

ரு தேசிய இனத்தை முற்றிலுமாக அழிப்பது எப்படி...?

ரொம்ப ஈஸி..!

ஒரு தேசிய இனத்துக்கு 4  அடையாளங்கள் இருக்கும்.


முதலாவது #நிலம்

அந்த இனத்தவர்கள் குடியிருக்கும்  நிலப்பகுதியில் அந்நிய குடியேற்றங்களை ஊக்குவிக்க வேண்டும். பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய குடியேற்றங்களைப் போல. திபேத்தில், சீன அரசு, சீனர்களைக் குவித்து திபேத் மக்களை சொந்த மண்ணில் சிறுபான்மையினராக ஆக்கியதைப்போல ஆக்க வேண்டும்.
இன்னும் எடுத்துக்காட்டு வேண்டுபவர்கள் இலங்கையைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம்.


அடுத்த அடையாளம் #மொழி

அந்த மொழியைக் காலி பண்ண வேண்டும். "உன் நீஷபாஷை தோன்றியதே என்மொழியில் இருந்துதான். உன் மொழிக்கு இலக்கணம் வகுத்ததே நான்தான். எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தது நான்தான்" என்றெல்லாம் சொல்வது மிகவும் உத்தமம்.

திபேத்திய மொழியை வைத்து ஒரு ஆணியும் புடுங்க முடியாது. புத்தரை மட்டும் கும்பிடலாம்’ என்று சீனர்கள் கூறியது போல கூறி, அந்த தேசிய இனத்தின் மொழியைச் சிதைக்க முயல வேண்டும்.


மூன்றாவதாக, #பண்பாடு

இந்தப் பண்பாடும், கலைகளும் இருக்கும் வரைக்கும் ஒரு தேசிய இனம், போர்க்கொடியைத் தூக்கிக் கொண்டே தான் இருக்கும். அதனால் கலாச்சாரம், பண்பாடுகளை காலியாக்க வேண்டும். "நீ ஒரு தனியினமே அல்ல. நம்ம இனம்" என்று கூறி அடுத்துக் கெடுக்க வேண்டும். ‘திருதராஷ்டிர ஆலிங்கனம்’ செய்ய வேண்டும்.



துருக்கியில் வாழும் குர்து இன மக்களை துருக்கி அரசு ஒரு தனியினமாக ஏற்பதேயில்லை, "அட...! நீங்க மலைநாட்டு துருக்கியர்கள்ப்பா" என்று கூறுவது துருக்கியின் வழக்கம்.

இதுபோன்ற சூப்பர் ஃபார்முலாக்களைக் கடைபிடிக்க வேண்டும். இறுக்கி அணைச்சு இல்லாமல் ஆக்க வேண்டும்.

நான்காவதாக #பொருளாதாரம்


மண் சார்ந்து வாழும் இனத்தின் வளங்களைச் சுரண்டி சூறையாடி, வேளாண்மைத் தொழில் செய்பவர்களை, தென்ஆப்பிரிக்க ஸ்டைலில், சுரங்கத் தொழிலாளர்களாகவே கூலித் தொழிலாளர்களாகவோ மாற்ற வேண்டும்.

சோமாலியா போல, வேளாண் தொழிலை வேரோடு அறுத்து, விளிம்பு நிலைக்குத் தள்ளி, அவர்களை போராளிகளாகவோ, கடற்கொள்ளையர்களாகவோ மாற்ற வேண்டும்.

அப்புறம் ரொம்ப சுலபம்... பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி அவ‌ர்க‌ளை எளிதாக அழித்தொழித்து விடலாம்.

அவ்வளவு தான், matter over..!
சிந்திக்க சிந்திக்க


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...