முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தி கற்றிருந்தால் நமது மாநிலம் இன்னும் முன்னேறியிருக்கும் என்று சொல்லும் அப்பாவிகளுக்கு

Subbiahpatturajan

இந்தி கற்றிருந்தால் நமது மாநிலம் இன்னும் முன்னேறியிருக்கும் என்று சொல்லும் அப்பாவிகளுக்கு?!

இந்தி கற்கவிடாமல் நம் மாநிலத்தை பின்தங்கவைத்துவிட்டார்கள் என்கிற நண்பர்களே...!

#இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த பீஹாரின் #நிலையை பாருங்களேன்
பீஹாரின் தாய்மொழி போஜ்புரி மற்றும் மைத்திலி.

# இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த ஒரு மாநிலம்தான் அதன் முன்னேற்றத்தையும் நண்பர்கள் ஆய்வு செய்துகொள்ளுங்கள்
வடமேற்கு உ.பியின் தாய்மொழி பிரஜ் பாஷா, தென்மேற்கு உ.பியின் தாய்மொழி புந்தேல்கண்டி வடகிழக்கு உ.பி யின் #தாய்மொழி போஜ்புரி,பிரதாப்கர்  போன்ற மத்திய உ.பி யில் பேசப்படுவது ஆவ்தி,பிறகு கன்னோஜி என்கிற மொழியும் பேசப்படுகிறது

அடுத்ததாக #உத்தராகண்ட் மாநிலத்தின் ஆட்சிமொழியும் ஹிந்திதான் போதாதற்கு சமஸ்கிருதம் additional அலுவலக மொழி.
ஆனால் உத்ராகண்டின் உண்மையான தாய்மொழி கடுவாலி மற்றும் குமோனி

அடுத்து ஹரியானா மாநிலத்தின் அலுவலக மொழியும் இந்திதான் ஆனால்  தாய்மொழி ஹரியாணி

#ராஜஸ்தானில் ஆட்சி மொழி ஹிந்தி ஆனால் தாய்மொழி கள் ராஜஸ்தானி,மார்வாரி,மேவாரி,

#மத்தியப்பிரதேசத்தின் ஆட்சி மொழி இந்தி ஆனால் தாய்மொழிகள் உருது,மால்வி,நிமதி,அவதி,பகேலி

#காஷ்மீர் தாய்மொழி காஷ்மிரி மற்றும் உருது, ஜம்முவின் தாய்மொழி டோக்ரி,பாடி, லடாக்கின் மொழி லடாக்கி,ஆட்சிமொழியாக இந்தி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது

#சத்திஸ்கர் மொழி  தாய்மொழி  சட்டீஸ்கரி,கோர்பா, ஆனால் ஆட்சிமொழியாக ஹிந்தி,

#ஜார்கண்ட் தாய்மொழி  ஜார்கன்ஷி,சந்த்தலி
ஆட்சி மொழி இந்தி

மேற்கூறிய  மாநிலங்களில் அவர்களின் #தாய்மொழியில் இலக்கியங்களோ படைப்புக்களோ வருவதில்லை வரிவடிவமற்ற வெறும் பேச்சு மொழிகளாக அவை சுருங்கிவிட்டன

#இந்தி மொழி வந்து ஆளுமை பெற்றதால் உண்மையான தாய் மொழிகள் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாமல் அழியும் நிலையை எட்டிவிட்டன ஏனென்றால் தாய்மொழி அவர்களுக்கு அவசியமற்றதாகிவிட்டது அவர்கள் தாய்மொழியில் படித்தால் அவர்கள் ஊரிலேயே வேலை கிடைக்காது என்பதால் தாய்மொழி
வெறும் வாய்மொழியாக கற்பிக்கப்படுவதோடு சரி கல்விநிலையங்களில் கற்பிக்கப்படுவதில்லை.

சரி மேற்கூறிய மாநிலங்களில் இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொண்டதால் பொருளாதார வளர்ச்சி கிடைத்துவிட்டதா என்றால் இல்லை
தாய்மொழியை ஆட்சி மொழியாகக்கொண்ட தமிழகத்தைவிட பின்தங்கியே உள்ளன.
சரி கல்வியளிப்பதிலாவது வளர்சியடைந்துள்ளதா என்றால் அதிலும் தமிழகத்தைவிட பலமடங்கு பின்தங்கியே உள்ளன

பிறகெதற்கு நம்மீது மும்மொழிக் கொள்கை என்று இந்தியைத் திணிக்கிறார்கள் என்றால் இந்தி பேசும் மாநிலத்தினருக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பைப் பெறுவதும்,தொழில் மேற்கொள்வதும் ஏன் தேர்தல்  பிரச்சாரம் செய்வதும்கூட எளிமையாக இருக்கவேண்டுமல்லவா

*நான் உன்னோடு தொடர்புகொள்ள எனக்குச்  சிரமமாக இருக்கிறது அதனால் நீ என் மொழியை கற்றுக்கொள் என்பது எவ் வளவு திமிரான சர்வாதிகாரம் அந்தச் சர்வாதிகாரம்தான் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது* புதிய. கல்விக் கொள்கை வாயிலாக

ஆங்கிலமும் உலகப் பொதுமொழி அல்ல உண்மைதான்
உலகின் பொதுமொழி technologyதான் ஆனால்
உலகத்தின் பொது அறிவு,மருத்துவம், விஞ்ஞானம்,வரலாறு  அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன,அதனால் ஆங்கிலம் கற்பது அவசியமாகிறது.

ஆனால்
இந்தியில் அப்படி எந்த ஒரு அறிவுப் பொக்கிஷமோ,இலக்கியச் செழுமையோ, வரலாற்று பின்னணியோ இல்லை
இந்தி படிப்பது பானிப்பூரிக் காரர்களிடம் பேசிக்கொள்ளமட்டுமே பயன்படலாம்

என் நண்பன் ஒருவனுக்கு சீனத்தில் சில ஆண்டுகள் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது
அவன் சீனமொழி தெரிந்தவனுமல்ல
ஆனால் அவன் ஒரு software engineer

அவனிடம் technology இருந்ததால் சீனமும் அவனை ஆரத் தழுவி வரவேற்றது
வெறும் மொழியை மட்டும் தெரிந்திருந்தால் அவனால் தமிழக எல்லையைக்கூட தாண்டியிருக்க முடியாது.
எனவே தொழில்தான் நமது சர்வதேச மொழி ஒரு மருத்துவர் எந்த நாட்டுக்குப் போனாலும் மருத்துவராக வேலை செய்யலாம்
ஒரு பொறியாளர் எந்த நாட்டுக்குப் போனாலும் பொறியாளராக வேலை செய்யலாம்
ஏன் ஒரு கொத்தனாரும் கூட எந்த நாட்டுக்கும் சென்று கொத்தனாராக வேலை செய்யமுடியும்

ஆனால் ஒரு மொழியைப் படித்து அதில் பட்டம் பெற்றால் அந்த மொழி உள்ள தேசத்தில் மட்டுமே பணிபுரியமுடியும்
அதுவும் இந்தியில் படித்து வட இந்தியாவுக்கு வாத்தியார் வேலைக்குச் சென்றால் அங்கே நம்மைவிட திறமையான பிறப்பிலிருந்தே இந்திபேசும் பண்டிட் காத்திருப்பான் நமக்குப் போட்டியாக...

இந்தி படித்தால் இந்தியாவெங்கும் வேலை கிடைக்குமென்றால் இந்தி படித்த பானிப்பூரிக்காரனுக்கு ஏன் கிடைக்கவில்லை,

விரும்பிக் கற்றால் இந்தியோ வேற்று மொழியோ கற்க
மூன்றுமாத spoken class கோர்ஸ் போதுமானது.
நமது பிள்ளைகளை இளமையிலேயே இந்தி படிக்கச் சொல்வது அவர்களுக்கு அது தேவையற்ற சுமைதான்.
தேவையில்லாம அதை ஒரு subject டா வச்சு அதுக்கொரு தேர்வு வச்சு அதுக்கொரு 😳வீட்டுப்பாடம்னு வச்சு பிள்ளைகள உசுர வாங்குவானுக
அப்படி கற்பதால் பெரிய பயனும் இல்லை
கற்காததால்  பெரிய நட்டமும் இல்லை
இதற்காக பிள்ளைகளை மூன்று வயதிலிருந்தே கஷ்டப்படுத்தத் வேண்டாமே
அவர்கள் தம் கல்வியை  விளையாட்டாக கற்கட்டுமே விளையாட்டோடு.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...