முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Punith Rajkumar alias Appu The Real Hero..!

Subbiahpatturajan

Punith Rajkumar alias Appu


புனித் 
=====
புனித் ராஜ்குமாரை 'கன்னடத்தின் விஜய் ' எனலாம். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே வயது. 'பவர் ஸ்டார்' என்பது தமிழ்நாட்டில் கொஞ்சம் காமெடியான பட்டம். அங்கே கர்நாடகாவில் பவர் ஃபுல்லான பட்டம். ஒட்டுமொத்த மாநிலமே 'அப்பு' என்று செல்லமாக அழைக்கும் பாசக் குழந்தை அவர்.

46 வயதில் அவரது மரணம் பல்வேறு விஷயங்களை நம்மை யோசிக்க வைத்து இருக்கிறது. எந்த நேரத்திலும் மரணம் வந்து 'நலமா, என் பழைய நண்பனே!' என்று நம் கதவைத் தட்டக் கூடும் என்பதை இந்த மரணம் மீண்டும் நிரூபித்து இருக்கிறது.

'நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெருமையை இந்த உலகம் தன்வசம் வைத்துள்ளது' என்னும் வள்ளுவப் பாட்டனின் வாய்மொழியும் நிரூபணம் ஆகி இருக்கிறது.

மூன்று நாட்கள் முன்பு வரையிலும்  பர்த்-டே பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு ஜாலியாக, உற்சாகமாக சிரித்துக்கொண்டே  நடனமாடிக் கொண்டு இருந்திருக்கிறார் புனித்.  காலை எழுந்து வழக்கம் போல ஜிம்மில் உடற்பயிற்சிகள் செய்திருக்கிறார். உடனடி Cardiac arrest ஏற்பட்டு சில நிமிடங்களில் மரணம். பிரிந்து பல காத தூரம் கடந்து சென்று விட்ட உயிரை மீண்டும் உடலில் ஒட்ட வைக்க முடியாதா என்று போராடி இருக்கிறது மருத்துவமனை. நண்பகல் 12 மணியளவில் கை விரித்து மரண அறிவிப்புச் செய்து இருக்கிறார்கள்.

எந்த வித முன்னறிவிப்பும் தராமல் 'இனிமேல் துடிக்க மாட்டேன்' என்று இதயம் திடீரென ஸ்ட்ரைக் செய்து ஏனோ நின்று போய் விடுகிறது.
நல்ல மனசு கொண்ட புனித்திற்கு
இனிமேல் துடிக்க மாட்டேன் என்று
💓 சொல்லாமல் மொளனித்தது ஏனோ...

 massive cardiac attack. இதற்கான சரியான காரணங்கள் இன்னும் வரையறுக்கப் படவில்லை என்றே தெரிகிறது. சும்மா நம் ஆறுதலுக்காக 'unhealthy lifestyle' என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறோம். ஆனால்  இறுதி நிமிடம் வரை புனித்  'fit as fiddle' ஆகத் தான் இருந்திருக்கிறார். 

வாடகை வீட்டில் இருப்பவர் குறைந்தது ஒரு மாதம் முன்பாக 'நான் காலி செய்யப் போகிறேன்' என்று ஓனருக்கு  நோட்டிஸ் தரவேண்டும் என்பார்கள். உடம்பென்னும் வாடகை வீட்டில் தங்கி இருக்கும் உயிர் அப்படி எந்த நோட்டிசும் தருவதில்லை. 'Interval' கார்டை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கையில் 'The End' கார்டு காட்டிப் பாதியில் அபத்தமாக நின்றுவிடும் ஒரு சுவாரஸ்யத் திரைப்படம் போல திடீரென்று விலகி விடுகிறது உயிர்!

இது தத்துவமோ வேதாந்தமோ, எதிர்மறை உணர்ச்சிப் பிரச்சாரமோ அல்ல. இதில் positive ஆகச்  சிந்திக்கவும் சில  விஷயங்கள் உள்ளன.

ஆயிரம் வருடங்கள் இங்கே இருப்பது போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அத்தனை சுயநலத்தோடு, அத்தனை பகைமையோடு, அத்தனை காழ்ப்புணர்ச்சிகளோடு! முதுகுக்குப் பின்னால் மரணத்தை வைத்துக்கொண்டு முப்பது ஆண்டுகளுக்குத் தேவையான திட்டங்களைப் போட்டுக் கொண்டு இருக்கிறோம். இந்த விஷயங்களைக் கொஞ்சம் யோசிப்போம்.

- பகை, போட்டி, பொறாமை, பேராசை, ஈகோ இவை எல்லாம் தேவை இல்லாத baggage கள். எப்போது யார் போய்ச் சேருவார்கள் என்று தெரியாது. அப்புறம் 'ச்சே, நேத்து கூடப்  பார்த்தேனே, பழசை எல்லாம் மறந்துட்டு கொஞ்சம் சிரிச்சுப் பேசி இருக்கலாமே' என்று அங்கலாய்ப்பதில் பொருள் இல்லை.

- நிகழ்காலத்தில் வாழ்வது. மேலே சொன்னது போல நாம் போடும் 'முப்பது வருடத்  திட்டத்தைப்' பார்த்து மெல்லப் புன்னகைக்கிறது முதுகின் பின் ஒளிந்து கொண்டிருக்கும் நம் மரணம். 

-  தொலையாத கவலைகள். உலகின் பாரத்தை எல்லாம் நம் தோள் மீதி ஏற்றியது போலத் தூக்கிச் சுமக்கும் கவலைகள்.  'செத்ததற்கு அப்புறம் என் குடும்பம் என்ன செய்யும்?' என்பது போன்ற கவலைகள். reality என்னவென்றால் 'they will be just fine!'.  நம்மால் தான் எல்லாம் நடக்கிறது என்ற நினைப்பைத் தூரப் போடுவோம்.'

-  பற்றின்மை:  

பொருட்களை நாம் உபயோகிக்கலாம். பொருட்கள் நம்மை உபயோகிக்கத் துவங்கும் புள்ளியை அறிந்து கொண்டு ஒரு கும்பிடு போட்டு விலகி நின்று விட வேண்டும். இந்த நிமிடம் மரணம் வந்து அழைக்கும் போது 'சரி, வா, போகலாம்' என்று உதறி விட்டுச் செல்லும் பக்குவம் வேண்டும்.

- நன்றி உணர்ச்சி: 

 நிலையற்ற வாழ்வில் நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு மகத்தான பரிசு தான் என்று தோன்றுகிறது. 'இன்று நான் படுக்கையில் இருந்து எழுந்து விட்டேன், வரவிருக்கும் இந்த நாளுக்கு நன்றி' என்று எழுந்திருக்கும் போதும், 'இன்று ஒரு நாளை நான் கடத்தி விட்டேன், இன்றைய நாளுக்கு நன்றி' என்று இறைவனுக்கோ, பிரபஞ்சத்துக்கோ நன்றி சொல்லத் தெரிந்திருத்தல். ஒவ்வொரு தினத்தையும் வாழ்வின் கடைசித் தினம் போல வாழப் பழகிக் கொள்ளுதல்.

*- Last but not the least:* பகிர்ந்து கொள்ளுதல்,  உதவி செய்தல், தேவைப் படுபவர்களுக்குக்  கரம் நீட்டுதல், உயிர்களிடத்தில் அன்பு

மரணத்தின் போது ஒரு நிமிடத்தில் நம் வாழ்க்கை முழுவதும் நம் கண் முன்பு ஒரு திரைப்படம் போல பிளாஷ் ஆகுமாம். அப்போது அந்தத் திரைப்படம் பார்ப்பதற்குச் சிறந்த ஒரு *'feel-good movie'* யாக இருக்க வேண்டாமா? யோசிப்போம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...