முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

We conduct marriage and all ceremonies Rituals in Tamil culture..!!!

Subbiahpatturajan

திருமணம் மற்றும் அனைத்து  சடங்குகளையும் தமிழ் முறையில் நடத்தி வருகிறார்கள்.

திருமணம் மற்றும் அனைத்து  சடங்குகளையும் தமிழ் முறையில் நடத்தி தரப்படும்...

தமிழ் மந்திரங்கள் ஓதி சடங்குகளை செய்வோம் 

உங்கள் இல்லங்களில் தமிழ் அந்தணர்களைக்கொண்டு, தமிழ் மா மந்திரங்கள் ஓதி சடங்குகள் நடத்த வேண்டுமா?

சென்னை அம்பத்தூரில் "மங்கையர்க்கரசியார் திருக்கோவில் தெய்வத்தமிழ் வழிபாட்டு மன்றம்"
என்ற பெயரில் திருக்கோவில் பணிகள், வீடுகளில் ஆன்மீகச்சடங்குகளை தமிழில் செய்யும் அமைப்புள்ளது.

இந்த அமைப்பின் தலைவர் செந்தமிழ் ஆகம அந்தணர் சிவ.மு.சுகுமாரன் அவர்கள்.
செயலாளர் செந்தமிழ் ஆகம அந்தணர் த.கே.சங்கர், பொருளாளர் செந்தமிழ் ஆகம அந்தணர் சிவ. மு. கன்னியப்பன். 
இந்த அமைப்பினர் ஆலய குடமுழுக்கு முதல் வீட்டில் நடக்கும் திருமணம் மற்றும் அனைத்து  சடங்குகளையும் தமிழ் முறையில் நடத்தி வருகிறார்கள். 

பன்னிரு  திருமுறைகளை பயன்படுத்தி தமிழ் மந்திரங்களை உருவாக்கி கணபதி வேள்வி, திருமுறைப்படி திருமணச்சடங்கு மஞ்சள் நீராட்டு விழா புதுமனை புகுவிழா, கோவில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) வருட முழுக்கு, போன்ற அனைத்து சடங்குகளையும் நடத்திவருகிறார்கள்,

 மரணம் அடைந்தவர்களுக்கு திருவடிப்பேறு, பதினாறாம் நாள் வழிபாடு, சிவ ஆகமப்படி நல்லடக்கம் போன்ற அனைத்து விதமான பணிகளையும் செய்து வருகிறார்கள்.

 தமிழ்க்குடிகளைச்சேர்ந்த பயிற்சி பெற்ற அந்தணர்கள் தமிழ் மாமந்திரங்கள்  ஓதி இந்த சடங்குகளை செய்வதால் நமக்கு எளிதில் புரிவதுடன் நாமே முழு ஈடுபாட்டுடன் இறைவழிபாடு செய்யும் மன நிம்மதி நமக்கு கிடைக்கிறது. 

புரியாத மொழியில் எவனோ வாகா வாகா என சத்தம் போட்டு இறைவனுக்கும் நமக்கும் உள்ள இடைவெளியை அதிகப்படுத்தும் செயலை விடுத்து நம் மாெழியில் நமது சொந்தங்கள் நமக்காக இறைவனிடம் தமிழ் மா மந்திரங்களை ஓதி நம் இன்னல்களை தீர்க்க  செய்யும் இந்த தமிழ் பூசனையை தமிழர்கள் தங்கள் இல்லங்களில் செய்ய இப்போது நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்களோ அதைவிட குறைந்த செலவில் (சென்னையில்) இந்த அமைப்பினர் செய்து தருகிறார்கள். 

சென்னையை விடுத்து தமிழகம் முழுவதும், ஏன் இந்தியா முழுவதும் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் இந்த தமிழ்வழிச்சடங்குகள் செய்யப்படும். 
போக்குவரத்துச் சிலவுமட்டும் அதிகரிக்கும். 

தமிழர்களே தமிழர்களே தமிழ் வழிபாட்டுக்கு தமிழ் மந்திரங்கள் சொல்லி தமிழர்கள் செய்யும் வேள்வி, பூசை, குடமுழுக்கு வருட முழுக்கு, கோவில் காெடைவிழா திருவிளக்கு பூசை போன்ற அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அந்தணர்களை அழைத்து தமிழ் மந்திரங்களை ஓதி பூசனை செய்து பயனடையுங்கள். தொடர்புக்கு
 *9944299513*
 *9790875684*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...