முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

The Western Ghats are in danger of extinction

Subbiahpatturajan

மேற்கு தொடர்ச்சி மலை அழியும் அபாயகட்டத்தில் நிற்கின்றன...!?

மேற்கு தொடர்ச்சி மலை அழியும் அபாயகட்டதில் நிற்கின்றன...!?


குஜராத்தின் தபதி நதியிலிருந்து ஆரம்பித்து தமிழத்தின் பொதிகை வரை கால் பரப்பி பறந்து விரிந்து காணப்படும் "மேற்கு தொடர்ச்சிமலை " ஒரு உலக அதிசயம்.

இமயமலையில் பனி உருகுவதால் வற்றாத ஜீவநதிகள் உருவாகிறது. ஆனால் பனியே இல்லாமல் ஜீவ நதிகளை உருவாக்கும் சோலைக்காடுகளை தன்னகத்தே கொண்டிருப்பது மேற்கு தொடர்ச்சி மலை.

பல்லுயிர் வாழும் அற்புத சோலைக் காடுகளைக்கொண்டது. உலகிலுள்ள அடர்ந்த காடுகளின் வரிசையில் இதிலுள்ள "சைலண்ட் வேலி "இடம் பெற்றுள்ளது சிறப்பு..

மேற்கு தொடர்ச்சி மலையின் அங்கமான "நீலகிரி "சுற்றுலா துறை கிழக்கு தொடர்ச்சி மலை சங்கமிக்கிறது.

தொட்டபெட்டா, ஆனைமுடி என்னும் இரண்டு உயர்ந்த சிகரங்களைக் கொண்டது. இதில் ஆனைமுடி அதிக உயரமானது.

"#வரையாடு " என்னும் அரிய உயிரினம் வாழும் அபூர்வ சூழல் அமைப்பை கொண்டது 
இம்மலையின் சிகரங்களில் பசுமை போர்த்திய புல்வெளிகள் உள்ளன..
இவை மழை நீரை தன்னகத்தே பிடித்து வைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டது.
அபூர்வ வன விலங்குகள், பல்லுயிரிகள், பறவைகள், பூச்சியினங்கள் வாழும் சூழலியலைக் கொண்டது.

ஆனைகட்டி மலைப்பகுதியில் "பறவைகள் சரணாலயம்" உள்ளது.

உலகின் அதிசய மலரான, பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறைபூக்கும் "#குறிஞ்சி_மலர் " நீலகிரி மலையில் பூக்கிறது.

இங்குதான் முதுமலை விலங்குகள் சரணாலயம் உள்ளது.

களக்காடு, முண்டந்துறை புலிகளின் சரணாலயமும் மேற்கு தொடர்ச்சி மலையின் "பொதிகையில் " அமைந்துள்ளது.

திரிகூட ராசப்ப கவி வியந்துபாடிய "#குற்றாலமும் "இங்குதான் உள்ளது.

ஆன்மீக வழிபாட்டின் புனித தீர்த்தமான "#பாணதீர்த்தம் " இங்குதான் உள்ளது.

"#ஜோக்_பால்ஸ் " என்னும் அழகிய அருவி சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கும் கவின்மிகு தலமாக உள்ளது. 

காவிரி அன்னையின் உற்பத்தி கேந்திரமான "குடகின் வனப்புமிகு #தலைக்காவிரியும் உள்ளது.

இன்னும் எண்ணிலடங்கா இயற்கை அதிசயங்களைக் கொண்ட மேற்குதொடர்ச்சி மலையின் சூழலியல் கட்டமைப்பை தகர்த்தது ஆங்கிலேயன் காலத்தில் பயிரிடப்பட்ட தேயிலை என்றால் மிகையாகாது.
பல்லுயிரிகள் வாழும் புகலிடத்தை மனிதர்கள் ப்ரியமாக வாழ்வதற்காக அதன் எழிலை அழித்து ஊட்டி, #வெலிங்டன் என்னும் நகரங்களை உருவாக்கி, இயற்கைச்சூழலியல் சீர்கேட்டுக்கு முதன் முதலில் அச்சாரம் போட்டான்.!

மேற்கு தொடர்ச்சி மலை அழியும் அபாயகட்டத்தில் நிற்கின்றன...!?
பின் வந்தவர்கள் அங்கு ரிசார்ட்டுகள் என்னும் கேளிக்கை விடுதிகளை யானைகளின் வலசைப்பாதையில் அமைத்து தடையேற்படுத்தினான்.

ஆயிரக்கணக்கான வன விலங்குகளின் இருப்பிடத்தை பின் வந்த நம் இனக்கயவர்கள் சூரையாடியதால், அவை மக்கள் வசிக்கும் நகரங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தன!.

விளைவு விவசாயிகளின் விளை நிலங்கள் அழிந்து அவர்களின் வாழ்வாதாரத்திற்குப்பெரும் குந்தகம் ஏற்பட்டது!.

இதன் எதிரொலியாக வனவிலங்குகள் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டது!.

வன விலங்குகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டதில், மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும்பான பகுதிகளை தேயிலை, காப்பித்தோட்டங்கள் ஆக்ரமித்துள்ளன.

இவற்றுக்கு தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பூச்சியினங்களில் ஆபூர்வங்களாக எண்ணப்படும் தேனீக்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகளை அழித்துவிட்டது பெரும் சோகம்  .

சூழலியலில் தகவமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்த வனவிலங்குகளுக்கு போதிய உணவு கிடைக்காமல் காடுகள் சூறையாடப்பட்டு தேயிலை, காப்பி, ரப்பர் போன்ற மரங்கள் ஆக்ரமித்துக்கொண்டன. 

இவ்வகை தாவரங்களின் வேர்ப்பகுதி வலுவற்றதால் பொழியும் மழையினை பிடித்து வைத்துக் கொள்ளும் தன்மையை வெகுவாக இழந்து விட்டன!. 

ஆபூர்வ இனமான யானைகளின் சரணாலயமாக விளங்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் வானளாவிய மரங்கள், சந்தனமரங்கள், தேக்கு மரங்கள், ஈட்டி மரங்கள், செம்மரங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வெகுவாக காடுகள் விஷமிகளால் அழிக்கப்பட்டுவிட்டன.

மேற்கு தொடர்ச்சி மலை என்னும் இயற்கையின் கொடை மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.

வருங்காலங்களில் இதை உயிர்ப்பித்து பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றால் இந்திய வரை படத்தில் "தென் இந்தியா " பாலைவனமாகும் அபாயத்திலிருந்து யாரும் காப்பாற்ற முடியாது !.

மேற்குத்தொடர்ச்சி மலையின் சூழலியலை பாதுகாக்கும் உறுதியை ஒவ்வொருவரும் ஏற்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...