முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

#Ruralgame கிராமத்து விளையாட்டுகள்... தேங்காய் சண்டை

Subbiahpatturajan

#Ruralgame

#Ruralgame




முன்பெல்லாம் ஆனி மாதம் முடிந்து ஆடி மாதம் ஆடிப்பெருக்கு , ஆடி அமாவாசை ஆரம்பிக்கும் போதே நெல்லை பகுதி கோயில் மந்தை திடல்களில் நடக்கும் தேங்காய் போர் படு பிரசித்தம். 

அது என்ன தேங்காய் போர்...தெரியாதவர்களுக்காக..


சேவல் சண்டை, எருது விடுதல் (சல்லிக்கட்டு) மாதிரி
 போர் கிராமங்களில் நடக்கும் படு சுவாரசியமான அதே நேரம் வில்லங்கமான விளையாட்டு.

ஆம் தோல்வியடைந்து செல்பவர்களை ஜெயித்தவர்  கிராமத்துக்கே உரிய நக்கல் , நையாண்டியோடு கேலி செய்யும் போது தேங்காய் போரால் பல மண்டைகள் உடைந்த சம்பவங்களும் நடந்ததுண்டு.. 

தேங்காய்ப்போர் இதனை போர் விடுதல் என்ற பெயரிலும் அழைப்பார்கள் .. இருவர் கலந்து கொள்ளும் விளையாட்டு.. எதிரெதிர் திசையில் சம இடைவெளியில் இருவர் நின்று கொண்டு அவரவர் கையில் இருக்கும் தேங்காயினை உருட்டி ஒன்றோடொன்று மோத செய்வார்கள்.. 


யார் தேங்காய் உடைந்தோ அல்லது தண்ணீர் கசிந்தோ காணப்பட்டால் அவர் தோல்வியடைந்தவராக கருதப்படுவார்.. வெற்றி பெற்றவர் உடைந்த தேங்காயை எடுத்து கொள்வார்.சில இடங்களில் தேங்காயின் மீது பந்தய பணமும் கட்டப்பட்டு தேங்காய்ப்போர் நடப்பதுண்டு.. 


அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேங்காயின் கடினமான ஆண்சிரட்டை மூக்கு பகுதி எதிரணி வீரரின் தேங்காயை தாக்கும் படி விடுவார்கள். 

போர் தேங்காயை வாங்குவதற்காகவே நெல்லை,  தூத்துக்குடி பகுதியை சேர்ந்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி என்ற ஊருக்கு சென்று பிடித்த தேங்காயை அதிக விலை கொடுத்து வாங்கி நெல் வயல் சேற்றில் மூன்று நாட்கள் மூழ்க வைத்து பதப்படுத்தி தேங்காய் போர் விளையாட்டுக்கு பயன்படுத்துவார்கள். 

தமிழ் நாட்டில் விளையும் தேங்காய்களில் கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதி தேங்காயின் சிரட்டையும் தேங்காய் பருப்பும் அதிக அடர்த்தி கொண்டதால் அத்தனை மவுசு அந்த பகுதி தேங்காய்க்கு..

உடைந்த தேங்காயை சோகத்தோடு  தோல்வியடைந்தவன் பார்க்கும் போது.. ஏலேய் ஒன்னோட மண்ட (தலை) உங்கக்காவோட மண்ட  மாதிரியே ஒன்னோட தேங்காயிலும் ஒண்ணுமில்லையேடேய் மாப்ளேய் ன்னு  கிண்டலடித்த மச்சானின் மண்டையை மைத்துணன் பிளந்த சம்பவங்கள் கிராமங்களில் முன்பு நிறைய உண்டு. 


கிராமத்து விளையாட்டுகள் அத்தனை சுவாரசியமானவை.. ஜெயிக்க வேண்டும் என்ற வெறியோடு கடைசி வரை உணர்வை விட்டு கொடுக்காமல் விளையாடும் கபடி,  சிலம்பம், அடிமுறை சுவடு, தேங்காய் போர் என்ற எத்தனையோ கிராமத்து விளையாட்டுக்கள் இன்றும் கிராமங்களில் நடப்பு நகரத்து இளம் தலைமுறைகளுக்கு தெரியாமல்  இருக்கின்றன..


கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
ம்ம் கலக்கல் அறிவு சார்ந்த மற்றும் வியக்கத்தக்க மறந்து போன கலைகளை ஞாபாகப் படுத்துதல் இந்த பதிவு

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...