Subbiahpatturajan
#HelicopterDefects
ஹெலிகாப்டர் என்ஜின் திடீரென பழுதானால் என்னாகும்..??
மேலே பறந்து கொண்டிருக்கும் போது எஞ்சின் பழுதடைந்தால், ஹெலிகாப்டர் அப்படியே தொபுக்கடீர்(!!) என்று கீழே விழுந்து விடாது. இந்த மாதிரி சமயங்களில், எந்தச் சேதாரமும் இன்றி ஹெலிகாப்டரை தரைக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான வசதிகள் அதில் செய்யப்பட்டுள்ளன.
புரியும் படி சொல்கிறேன்.
ஒரு ஹெலிகாப்டரில் இரண்டு எஞ்சின்கள் உண்டு. அதில் ஒரு எஞ்சின் சர்வீஸில் இருக்கும் ஒன்று பழுதானாலும் மற்றொன்று உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்.இதையும் மீறி காற்று வேகமாக அடித்தாலோ...
பைலெட் பார்த்தாலோ... காற்றுடன் மழை பெய்யும் போது எமர்ஜென்சி லேண்டிங் செய்ய முடியும்.எமர்ஜென்சி லேண்டிங் செய்யும் போது தரை சமதளமாக இல்லாமல் இருந்தால் ஏதாவது மரங்கள் இருந்தால் விபத்துகள் ஏற்படக்கூடும்.
ஹெலிகாப்டர் ஓட்டுனருக்கான பயிற்சியில், சேஃப் லேண்டிங் என்றழைக்கப்படும் இந்த தரையிறக்கும் முறை கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது.
பயிற்சியின் போது இஞ்சினை மொத்தமாக நிறுத்தி விடாமல், அதன் செயல்பாடுகளைக் குறைத்து சேஃப் லேண்டிங் செய்வது எப்படி என்று சொல்லித் தருகிறார்கள். புதிதாக கற்றுக் கொள்ளும் ஓட்டுனர்கள், ஒருவேளை தரையிறங்க முடியாமல் தவித்தால், மீண்டும் இஞ்சினை இயக்கி பறக்கச் செய்யலாம் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.
ஹெலிகாப்டரின் தலையில் சுற்றிக் கொண்டிருக்கும் விசிறியை இஞ்சினின் உதவியின்றி தானாகவே சுழலச் செய்வதன்(autorotation blades) மூலம் இந்த சேஃப் லேண்டிங் சாத்தியமாகியிருக்கிறது.
நமக்குத் தெரிந்ததெல்லாம் ஹீரோவும் ஹீரோயினும் தப்பித்த பிறகு வில்லனுடன் மலைமீது இடித்து வெடித்துச் சிதறி லேண்ட் ஆகும் ஹெலிகாப்டர்கள் தான்.
கருத்துகள்