முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

LPG திருடன் LPG thief...For attention

Subbiahpatturajan

#LPGthiefForattention

#LPGthief...Forattention
.

இல்லதரசிகள் சிலிண்டர் வாங்கும் போது அவசியம் பார்க்க வேண்டிய விஷயங்கள்..

LPG சிலிண்டர் வாங்குவோர் கவனத்திற்க்கு...

சமீப காலமாகவே இந்தியாவில் இந்த நூதன திருட்டு நடைப்பெறுகிறது., வட இந்தியாவில் தொடர்ந்து  தற்போழுது தமிழகததிலும் இந்த திருட்டு அரங்கேறி உள்ளது...

சிலிண்டர் மூலம் இன்னோரு சிலிண்டர்களுக்கு கேஸ் ஏத்தும் காணோலியை காண்க..


#LPGthief...Forattention 

அது மட்டும் அல்லாமல் சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர்கள் உதவியுடன், மான்ய விலை சிலிண்டர்களை திடுட்டுத்தனமாக பயன்படுத்துகின்றனர். வீடுகளுக்கு உடனடியாக சிலிண்டர்களை சப்ளை செய்யாமல் காலம் தாழ்த்தி, கடைகளுக்கு கொடுத்து, பின் இரண்டொரு நாள் கழித்து, அதை சப்ளை செய்கின்றனர்..

கேஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்படுவது, பகலில் தான். பெரும்பாலும், பெண்களே வீட்டில் இருப்பதால், எடையை சரிபார்ப்பது என்பது இயலாத காரியம். இதை பயன்படுத்தி, காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர்கள் முறைகேடில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது

இல்லதரசிகள் சிலிண்டர் வாங்கும் போது அவசியம் பார்க்க வேண்டிய விஷயங்கள்..

✔ சிலிண்டர் வாங்கும் சகோதரிகள் சிலிண்டரில் பிளாஸ்டிக் ரப்பர் பொருந்தி உள்ளதா என்று பார்க்க வேண்டும்..

✔ கேஸ் லீக்கேஜ் வாசம் வருகிறதா என்று பார்க்க வேண்டும்..

✔ காலியான சிலிண்டரின் எடை 16.2, கேஸ் எடை 14.2 மொத்தம்  30.4 எடை உள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ளவும்..

✔ கண்டிப்பாக சிலிண்டர் காலியான பிறகு அதனுடைய எடை 16.2 ஆக இருக்கிறதா என்று பாருங்கள்., எனனில் சிலிண்டரில் கேஸ் திருடிய பிறகு அதில் தண்ணீர் நிரப்பி எடையை சரி செய்கிறார்கள்.. கேஸ் தீர்ந்த பிறகு தண்ணீர் அப்படியே இருக்கும்..

*சமையல் கேஸ் சிலிண்டர்களை, வீடுகளுக்கு சப்ளை செய்யும்போது, அதன் எடை சரியாக உள்ளது என்பதை, வாடிக்கையாளர் முன்னிலையில் உறுதிப்படுத்த வேண்டும்*

*சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர், எடை போடும் கருவியை கையுடன் எடுத்து செல்ல வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.* எனவே சிலிண்டர் காரர்களிடம் வைட் போட சொல்ல நமக்கு உரிமை உண்டு..

எனவே மக்கள் கவனத்தில் கொண்டு மேற்கொண்டவைகளை சரி பார்த்து வாங்கவும்..

*இனியும் ஏமாற வேண்டாம்..*

கேஸ் சிலிண்டர் லிக்கேஜ் சரிசெய்ய...

சிலிண்டரில் இருந்து கேஸ் அடுப்புக்கு இணைப்பு கொடுத்த பின்னர் லிக்கேஜ் பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் பயப்பட வேண்டாம்...
சிலிண்டரின் வாய் பகுதியில் உள்ளே  ரப்பர் போன்ற ஒரு வாசர்  ஒன்று உள்ளது.
அதனை வெளியே எடுத்துவிட்டு நம்முடைய பழைய அதாவது காலி சிலிண்டரில் உள்ள ரப்பர் வாசரை கழட்டி நமது புதிய சிலிண்டரில் உபயோகித்து பாருங்க உங்க பிரச்சினை சால்வ்...

ஆன்லைனில் சிலிண்டர் புக்கிங் செய்பவர்கள் கவனத்திற்கு நீங்கள் ஒருபோதும் சிலிண்டர் கொண்டு வரும் சிலிண்டர் மேனுக்கு டிப்ஸ்கள் வழங்க தேவையில்லை.இது ஆஃப் லைன் போன் சேவைக்கும் பொருந்தும் மனிதாபிமானம் என்ற பெயரில் லஞ்சத்தை உக்குவிக்காதீர்கள்... நன்றி


கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
இப்போது உள்ள அவசரத்தில் இதையெல்லாம் பார்த்து வாங்க யாருக்கு பொருமை இருக்கிறது இயந்திர உலகில்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...