முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan




#சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா


#இந்திரவிழா
#bestarticalstamil2021
#cinartamilan

தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது.

சென்னி வெண்குடை நீட நபாயன்
திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின்
மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு
வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப்
பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து
புணரி தன்னையும் புனிதமாக் 
குவதோர்
நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய
நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம்
என்கிறது அந்தப் பாடல்.

அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு.

தைப்பொங்கல் திருநாள் 

அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம் என்று குறிப்பிடுகிறது அந்தப் பாடல்.

காவிரிப்பூம் பட்டினத்திலே நிலைத்து நின்று வாழும் மக்களை ‘பதியெழு அறியாப் பழங்குடியினர்’ என இளங்கோவடிகள் கூறுகிறார். படைப்புக் காலந்தொட்டே வாழும் குடியினர் என அதற்கு உரை கூறுவர்.

சேர சோழ பாண்டியர் என மூவேந்தர் தென்னிந்தியப் பகுதியை ஆண்ட காலத்திலே சோழப் பேரரசின் தலைநகராக காவிரிப்பூம் பட்டினம் இருந்தது. கி.பி. 850 களின் பின்பு, பிற்காலச் சோழர்களின் ஆட்சி ஏற்பட்டபோது பூம்புகார் என்ற காவிரிப்பூம் பட்டினத்தைக் கடல் கொண்டதால், பேரரசின் தலைநகரம் தஞ்சாவூராகியது.

 காவிரிப்பூம்பட்டினத்தை மையமாகக் கொண்ட ஐம்பெருங் காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இந்திர விழாவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

சங்க காலம் தொட்டு தட்சணாயன காலத்தின் ஆரம்பத்தை இந்திர விழாவாகக் கொண்டாடும் வழக்கம் இருந்து வந்தது. மணிமேகலையின் ஆரம்பமான விழாவறை காதையிலே ‘இந்திர விழா’ பற்றிக் கூறப்படுகிறது. அதன்படி, காவிரிப்பூம்பட்டினத்தில் ஏறத்தாழ 28 நாட்கள் இந்த விழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.


சோழகுல மன்னர்களுள் ஒருவனான தூங்கெயில் எறிந்த தொழத்தோள் செம்பியன் என்பவன் காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்புறச் செய்ய ஆசைப்பட்டான். அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி இந்திரனை வணங்கித் தவமிருந்தான்.

இந்திர விழாவை ஆண்டு தோறும் காவிரிப்பூம்பட்டினத்தில் நடத்தவும் அதற்கு இந்திரன் வருகை தரவேண்டும் எனவும் வேண்டினான். இவ்விழா 28 நாட்கள் நடைபெற இந்திரன் ஆசியளித்தான்.

தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் தொடக்கிவைத்த விழா ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வந்தது. இந்திரனின் கரும்பு வில்லை நினைவுகூரும் வகையிலே இந்திர விழாவில் கரும்பு முக்கிய இடத்தைப் பெற்றது. வீதிகளிலும் கோயில் வாசல்களிலும் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டன.

பொன்னாலான பாலிகைகளால் நகரம் அலங்கரிக்கப்பட்டது. பாக்கு, வாழை மரத் தோரணங்கள் கட்டப்பட்டன. கோயில்களிலெல்லாம் சிறப்பாகப் வழிபடுகள் நடாத்தப்பட்டன.

இப்படிக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்திரவிழா கைவிடப்பட்டமையால் தான், காவிரிப்பூம்பட்டினத்தின் ஒரு பகுதியைக் கடல் கொண்டதாகவும் குறிப்பிடுவர்.

மழை, இடி, மின்னல்களின் கடவுளாக இருப்பவன் இந்திரன். அவனை வழிபட்டால் மாதம் மும்மாரி பொழிந்து பயிர் செழிக்குமென மக்கள் நம்பினர். மழைக்கடவுளான இந்திரனை வழிபட்டனர்.

சங்க காலத்திலேயே இந்திர வணக்கமும் அவனுக்கு விழா எடுக்கும் வழக்கமும் தமிழர்கள் மத்தியில் இந்திருக்கிறது. இதை சங்க இலக்கியமான ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை காலத்தில் இவ்வழக்கம் ஆழ வேரூன்றியிருந்தது.

இந்திரவிழா கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கமே மழையாகும். மழைக்கடவுளான இந்திரனை விழா எடுத்து வணங்கி அவனது அருளாகிய மழையைப் பெறுவது என்பதே. மழை பெய்தால் விவசாயம் சிறக்கும். உணவு உற்பத்தி பெருகும். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வர் என்பதாகும்.

ஆயினும் காலப் போக்கில் வைணவ ஆதிக்கம் மேலோங்க இந்திர விழா எடுக்கும் வழக்கம் அருகி மறைந்துவிட்டது. கண்முன்னே தெரியும் சூரியனே காலநிலையை நிர்ணயிப்பவன் என்ற நம்பிக்கை வந்தது.

விவசாயம் சிறக்க வழிவகுக்கும் முதற்காரணி காலநிலை. அந்த வகையிலே சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தாம் அறுவடை செய்த புது நெல்லை தை முதல் நாளன்று சமைத்தனர். சூரியனுக்குப் படைத்து நன்றி செலுத்தினர். அது தைப் பொங்கலாகியது.

ஆகையால்தான் இந்திர விழா பொங்கலுக்கு வழி சமைத்தது என்பர். தமிழகத்திலே பொங்கல் 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் முதலாவது நாள் போகியாகும். போகிபோகம் துய்ப்பவனாகிய இந்திரனுக்காக இந்த நாள் ஒதுக்கப்பட்டது என்றும் கூறுவர். அன்றைய நாளை வீடு வாசல்களைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தமாக்கும் நாள் என்றும் கூறுவர். இந்திர விழா என்றும் அழைப்பர்.


அறுவடை கண்ட பூரிப்பால் அந்த மகிழ்வைக் கொண்டாடுவதே பொங்கலாகும்.
ஒரு காலத்தில் ஊரே திரண்டு பெருந்திரு விழாவாகக் கொண்டாடிய பண்டிகைகள் எல்லாம் இன்று வீட்டுக்குள்ளேயே கொண்டாடப்படுவனவாகச் சுருங்கிவிட்டன. உலகமயமாதலாலோ என்னவோ முழு உலகுமே கிராமமாகிவிட்டது. ஒவ்வொரு வீட்டையும் தனி உலகமாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டோம். நமது பாரம் பரியங்களும் கலாசார நெறிமுறைகளும் கூட மறக்கடிக்கப்பட ஆரம்பித்துவிட்டன.

புது மண்பானையில் மஞ்சள் கிழங்கு சுற்றி முற்றத்திலே பொங்கல பொங்கிய காலமொன்றும் இருந்தது. அது இன்று எரிவாயு அடுப்பிலே, கறையில் உருக்குப் பானையிலே பொங்கி உண்ணும் காலமாக மாறிவிட்டது. நகரப் பகுதிகளிலே, சூரியனுக்காகப் பொங்கிய பொங்கலை சூரியனுக்குப் படைக்கும் சாத்தியம் காணப்படுவது கூட அரிதாகிவிட்டது.

பொங்கல் திருநாளின் பாரம்பரியத்தையும் தொன்மையையும் முதலில் நாம் உணரத் தலைப்படவேண்டும். அத்திருநாளுக்கே உரித்தான விழுமியங்களைக் கைவிடாது தொடர்ந்து பேணவேண்டும்.

 அன்றேல் நம் அடுத்த சந்ததி இந்திருநாளை அறியாமல் போவதற்கு நாமே காரணமாகிவிடுவோம் என்பது மட்டும் தான் நிதர்சனமான உண்மையாகும்.

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
ம்ம் இப்போது யார் இப்படி கொண்டிருக்கிறார்கள் அதல்லாம் எந்திர காலத்தில் எல்லாம் எந்திரமாக மாறியது சரித்திரம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...