முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்...!!?

தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்...!!?

அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயிரினங்கள் கடிகளுக்கான எளிய இயற்கை மருத்துவம்...!!
மிக முக்கிய குறிப்பு குறிப்பெடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள்.....!!
எந்த விஷ கடிக்கும் உடனே அலோபதி மருத்துவத்தை நாடும் சூழலில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய அனுபவ மருத்துவ குறிப்புகளை தொகுத்துள்ளேன்.. பயன்படுத்தி பலன் பெறுங்கள்...எளிதில் கிடைக்காத சில மூலிகை செடிகள் இருந்தால் அவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லது.
■ தேனீ,குளவிகொட்டியதற்கு.. தேய்க்க கூடாது விஷம் இறங்கி வலி அதிகமாகும்.முள்ளை எடுத்துவிட்டு கொடுக்கு இருந்தாலும் எடுத்துவிட்டு மண்ணெண்ணெய் கடித்த இடத்தில் தேய்க்கவும்...
■ பூரான்கடிக்கு... பூராண் கடித்து விட்டால் விஷம் பரவி தடிப்பு ஏற்படும் அரிப்பு எடுக்கும்....சுண்ணாம்பு மஞ்சள், உப்பு  3 ஐயும் சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் தேய்த்து கொண்டே இருந்தால் விஷம் இறங்கும்...
■ பூனை கடித்துவிட்டால்.. பூனை கடித்து விட்டால் மஞ்சள் சுண்ணாம்பு இவைகளை சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் பூச குணமாகும்...


■ கம்பளிபூச்சிகடி...ரோமம் பட்ட இடத்தில் அரிப்பு விக்கம் ஏற்படும்.நல்லெண்ணெய் தேய்த்து வர அரிப்பு குறையும்.
அல்லதுமுருங்கை இலை சாறு தேய்க்கவும் அல்லது வெற்றிலை சாறு தேய்க்க குணமாகும்
■ எறும்புகடிக்கு கடித்த இடத்தில் வெங்காயத்தை தேய்த்து வர குணமாகும்.
■ வண்டுகடித்துவிட்டால்...
பப்பாளி இலையை கசக்கி கடித்த இடத்தில் தேய்த்து  தடிமனாக பற்று போல குணமாகும்..3 நாட்கள் செய்ய வேண்டும்...
அல்லது துளசி சாறு எலுமிச்சை சாறு சம அளவு எடுத்து தடவ குணமாகும்.
■ சிலந்திகடித்துவிட்டால்..
தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்.ஆடாதோடை இலை 25 கிராம் எனில் பச்சை மஞ்சள்+ மிளகு இரண்டும் சேர்த்து 25 கிராம் அரைத்து கடித்த இடத்தில் தேய்க்க குணமாகும்...
■ தேள் கொட்டியதற்கு மற்றும் பொதுவான விஷ முறிவு
இரண்டு வெற்றிலை 6 மிளகு மென்று சாப்பிட உடன் விஷம் இறங்கும்.
■ எலிகடித்தால்.... உடல் அரிப்பு இருக்கும் கண் சிவந்து காணப்படும்.
குப்பைமேனி இலையை நன்றாக அரைத்து எலி கடித்த இடத்தில் தினமும் காலையும் மாலையும் பூசி வந்தால், எலி கடி விஷம் இறங்கும்.


■ பெருச்சாளிகடிவிஷம்குறைய..
திப்பிலி, செஞ்சந்தனம் இவ்விரண்டையும் இடித்துப் பொடித்துச் சலித்து சூரணத்தை பத்திப்படுத்திக் கொண்டு அதில் கால் டீஸ்பூன் அளவாகத் தேனில் குழைத்து ஒருநாள் இருவேளை வீதம் ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் பெருச்சாளி கடி விஷம் குறையும்.
■ அரணைகடித்தால்..பனை வெல்லம் 100 கிராம் சாப்பிட விஷம் முறியும்
■ குரங்குகடித்தால்  கொழுஞ்சி வேர் ,சுக்கு சம அளவு எடுத்து 5 கிராம் 3 நாட்கள் சாப்பிட குணமாகும்.
■ குதிரைகடி அமுக்கிரா கிழங்கு சூரணம் செய்து 2 வேளை சிட்டிகை அளவு தேனில் கலந்து சாப்பிடவும்...அவுரி சமூலம் எடுத்து அரைத்து சாறு எடுத்து கடித்த  இடத்தில் பற்று போட  சில நாட்களில் குணமாகும்.
■ நாய்கடி சுக்கு 10 கிராம், மிளகு 10 கிராம், வசம்பு 10 கிராம், முருங்கை ஈர்க்கு 10 கிராம் ஆகியவற்றை 500 மில்லி தண்ணீரில் போட்டு எட்டில் ஒன்றாய் கஷாயம்  செய்து எடுத்து குடித்து வந்தால் வாந்தி நின்று நாய் கடி விஷம் குறையும்.
அல்லதுவெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி பிறகு வெங்காய சாறை குடிக்க நாய்க்கடி விஷம் குறையும்.
■ பாம்புகடிக்கு... கடித்த பாம்பை பொறுத்து மருந்தும் மருத்துவமும் மாறுபடும்.
பொதுவாக கடிபட்ட இடத்தில் பாம்பின் ஒரு பல் பதிந்திருந்தால் அது தோலை மட்டும் தான் பாதித்திருக்கிறது என்றும், இரண்டு பல்லும் பதிந்திருந்தால் அது சதையை பாதிக்கும் என்றும், மூன்று பல் பட்டால் அது எலும்பை பாதிக்கும் என்றும், நான்கு பல் பட்டால் மூளையை பாதிக்கும் என்றும் சொல்வார்கள்.
பொதுவாக பற்குறி அழுத்தமாக தெரிந்தாலோ, கடிபட்ட இடம் கூர்மையான தீக்கனலில் காட்டிய ஊசியை இறக்கியது போல் எரிச்சலாக இருந்தாலே கடியின் வேகம் அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம்.
இப்படி இருக்கும் நிலையில் கிராமப்புறங்களில் விரலி மஞ்சளை நெருப்பில் காட்டி அது தணலாக இருக்கும் போது இந்த மஞ்சளின் எரிந்து கொண்டிருக்கும் பகுதியை வைத்து கடிவாயில் அழுத்துவார்கள். இதனால் பாம்பின் நஞ்சு முறிந்து விடும் என்கிறார்கள் அனுபவ வைத்தியர்கள்.
பாம்பு கடிபட்டவருக்கு ஆமணக்கு இலைகளுடன், ஏழு மிளகை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் பாம்பின் நஞ்சு ஏறாது. மணிக்கு ஒரு தடவை இந்த மருந்தை கொடுத்து வரவேண்டும். இந்த பச்சிலை மருந்து வாந்தியை ஏற்படுத்தி நச்சை நீங்க செய்யும்.
பாம்பு கடித்த நபரை எக்காரணம் கொண்டும் தூங்க விடக்கூடாது. உப்பு, புளி, காரம், எண்ணெய் நீக்கிய வெறும் பச்சரிசியும், பாசிப்பயறும் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட தரவேண்டும். பாம்பு கடித்த மனிதருக்கு...!!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...