முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

#தண்டச்சோறு #எச்சசோறு இதிலும் அரசியலா?

Cinar619.blogspot.com
காலத்தின் பயணம்
*


"#எச்ச_சோறு "#தண்டச்_சோறு"
#சோறு - #சாதம் இதிலும் #அரசியலா?

#ஆம்‌...🤗 இங்கு #எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது...!✅✅✅😊😊😊

#அதேபோல், இந்த சொற்களுக்கு பின்னால் #மிகப்பெரிய_அரசியல் இருக்கிறது...!!!

👉நம்மில் எத்தனைப் பேர் இன்று
பொதுவெளியில் #சோறு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்?🤔

கல்யாண விருந்தில் #சத்தமாக ⭕"சோறு கொண்டு வாங்க" என்று நாம் #கூப்பிடுகிறோமா? கூப்பிடுவதில்லை...!

#காரணம், நம்மை அறியாமல் சோறு என்ற சொல்லை ஒரு #தாழ்ச்சிக்குரிய ஒன்றாக மாற்றி வைத்திருக்கிறார்கள்.

👉நகைச்சுவைத் துணுக்குகளில், #திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகளில் #பிச்சைக்காரர் கதாபாத்திரம் "அம்மா, தாயே சோறு போடு தாயீ" என்று கூறுவதாக வரும்...

👉எந்த #பிச்சைக்காரனாவது
"அம்மா தாயே சாதம் போடுங்க" என்று வருகிறதா...? அது ஏன்...?

⭕#திட்டமிட்டுச் சோறு கீழான ஒன்றாக காட்டப்படுகிறது; சாதம் உயர்வான ஒன்றாக மாற்றப்படுகிறது...!!!

➡️சோறு என்பது சங்க இலக்கிய காலத்தில் இருந்து நம்முடன் இருக்கிறது✅✅✅

⭕"பெருஞ்சோற்று உதியன்" என்ற அடைமொழியுடன் புறநானூற்றில் #வேந்தர்கள் வந்து போகிறார்கள்...!

⭕"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்" என்று #பாரதி பாடியுள்ளான்...!

#இழிவு_செய்யும் இடங்களில் மறக்காமல் சோறு எனக் குறிப்பிடப்படுகிறது.

👉"#சோத்துக்கு_வழியில்லாத_நாயி" என்று திரைப்படங்களில் பேசப்படுவதை பார்க்கிறோம்...

👉"#சாதத்துக்கு_வழியில்லாத_நாயி" என்று எழுதப்படுகிறதா...? காரணம்...?
அதன் பின்னால் உள்ள அரசியல்.

⭕"#கல்யாண_சமையல்_சாதம்" என்று புகழ்ந்து பாடல் வரும்.

⭕"#எச்ச_சோறு" என்று இகழ்ந்து வசனம் வரும். இதில் இருந்தே இதன் பின்னுள்ள அரசியலை புரிந்து கொள்ளலாம்.

👉உச்சக்கட்டமாக வீடுகளில் பிள்ளைகளை திட்ட "#தண்டச்_சோறு" என்ற இடம் வரை வந்து நிற்கிறது. எங்காவது "#தண்ட_சாதம்" என்று சொல்வதுண்டா?



➡️சாதம் என்ற சொல், பிரசாதம் என்ற சொல்லின் விகுதி. பிரசாதம் என்பது உயர்வான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

➡️கோயில்களில் பூசனைகளுக்குப் பிறகு வழங்கப்படும் தேங்காய் - பழம் போன்றவற்றுக்கு பிரசாதம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

👉மதிப்பிற்குரிய ஒன்றாக பொது இடங்களில் பிரசாதம் பயன்படுத்தப்படுகிறது. அந்த சொல்லின் சரிபாதி சாதம் என்பது ஏதோ ஒரு நன்னாளில் பெயர்சூட்டுவிழா கண்டுள்ளது...😁

#உணவு_விடுதிகளில்

➡️புளியஞ்சோறு,
➡️எலுமிச்சைச் சோறு,
➡️தயிர் சோறு
➡️தக்காளிச் சோறு என்பது

இடமாறி,

➡️புளி சாதம்,
➡️எலுமிச்சை சாதம்,
➡️தயிர் சாதம்,
➡️தக்காளி சாதம் என்று பட்டியல் நீள்கிறது...!!!

👉குழந்தைகளுக்கு ⭕"பருப்புச் சோறு" ஊட்டப்பட்டது போய்...

👉⭕"பருப்பு சாதம்" கொடுப்பது உயர்வாக மாறி நிற்கிறது...!!!

இதுவெறும்
வடமொழிச் சொல் - தமிழ்ச் சொல் வேறுபாட்டை அறிவதற்கான பதிவல்ல.

#தமிழ்ச்_சொற்கள் தாழ்வான ஒன்றாக நம் மனத்திலே பதிய வைத்து நம்மையே அச்சொல்லை #சொல்ல_முடியாமல் போகும் அளவுக்கு மாற்றுவதற்கு பின்னுள்ள அரசியலை விவரிக்கும் பதிவே...✅✅✅✌️✌️✌️



#தாய்மொழியில் பேசவே முடியாத ஒருவன், எப்படி தாய்மொழிக்காக சிந்திக்கச் செய்வான்...?🤔

எனவே, சாதம் என்பதற்கு பதிலாக சோறு என்பதையே #பயன்படுத்துவோம்...!✌️


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...