முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தின்று கொளுத்தவர்களுக்கு *மக்களின் அருமையும், வறுமையும் தெரிவதில்லை*


தின்று கொளுத்தவர்களுக்கு
*மக்களின் அருமையும், வறுமையும் தெரிவதில்லை*



தன் தந்தையை மிதிவண்டியாலேயே 1000 கிலோ மிட்டர்களை கொரோணாவால் கடந்தவளால்

சராசரியான 60 ஆண்டு கால மனித வாழ்கையை கடக்க இயலவில்லை
காமக் கொடூரர்களாலும்

தீய சுயநல சமூகத்தினாலும்
அரசியல் தலைவர்களாலும் தொண்டர்களாலும்

எது எதுக்கோ சட்டம் வருது
இதற்கு ஒரு சட்டமில்லையா..???

மனிதா நீயும் திருந்த ஏதும் வழியுமில்லையா...???

வஞ்சம் தீர்க்க சட்டம் வருது
மனிதனை மனிதன் அடிமைப்படுத்த .
மனிதனை மனிதன் உயர்ந்தவன் எனக்  தம்பட்டம் அடிச்சிடிச் பிறரைத் தாழ்த்திட அதில் வாழ்ந்திட சட்டம் வருது

இதற்கு ஒரு சட்டமில்லையா..???

பெண்ணைத் தீண்டும், சீண்டும், சீரழிக்கும்
வன்கொடுமைச் செய்து
காமத் தீயில் குளிர் காயும்
வக்கிரப் புத்திகளுக்கு
கொடுங்கோலனுக்கு அவனைக் கடுமையாக தண்டிக்க ஒரு சட்டமில்லையா...???

இனி புதிதாக உருவாகும், உருவாகப் போகும் எந்தச் சட்டமும் மக்களின் ஒப்புதலின்றி தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது,
முடிவெடுக்க இயலாத வகையில்
சட்ட வரையறைகள் இருக்க வேண்டும்,

மக்களுக்கு நன்மை தராத
தன் சுயநலனிற்காகவும்
சுய ஆதாயத்திற்காகவும்
மக்கள் வரிப் பணத்தை
இலாபமாக்கும் அரசியல் வியாபாரங்களை இனிச் செய்ய இயலாது செய்ய வேண்டும்,

நிதி சம்மந்தப்பட்ட எந்த ஒரு முடிவையும், ஒப்பந்தத்தையும் மக்களின் ஆதரவின்றி செய்ய இயலாததாகவும், மக்களை நிதி நெருக்கடியில் ெகாண்டு போய் விடாத தாகவும்

மக்கள் ஆதரவுடனேயே கையெப்பமிடனும்,
அந்த ஒப்பத்தங்கள் மக்களுக்கு வெளிப்படையானதாகவும் இருத்தல் வேண்டும்

அப்படி எல்லாம் இல்லாததனாலும்
மக்கள் அறியாததனாலுமே

தின்று கொளுத்தவர்களுக்கு
*மக்களின் அருமையும், வறுமையும் தெரிவதில்லை*

செருக்குக் கொண்டு பெண்கள் மீது கை வைக்கும் காமக் கொடூரன்களாகவும், வெறியர்களாகவும், குண்டர்களாகவும்
கொள்ளையர்களாகவும்,
திருடர்களாகவும்
படித்திருந்தும் பண்பற்றவர்களாக
வலம் வருகின்றனர்

இவர்கள் இப்படி வளரவும், உருவாகவும்
இவர்களது பணத்திற்கும்,
பதவிக்கும்
இவர்களுக்கு துணை நிற்பது மக்களாகிய நாமே,

நாம் திறுத்தாது,
நாம் திறுந்தது,
இப்படிப்பட்ட தவறுகளை
தடுத்து நிறுத்த முடியாது,
இது போன்றோர்கள் உருவாவதை தடுக்கவும் முடியாது,

சட்டையை பிடிக்க வேண்டிய சட்டமே
எப்படியும் வாழ
கள்ள உறவில் வாழ அனுமதிக்கிறது

எது எதுக்கோ பாதுகாப்பு தருது
மகளுக்கு, மகளிருக்கு பாதுகாப்பில்லையா...???

சுய ஒழுக்க முறையே
மனிதனின்
நமது வாழ்கை முறையை சீர் செய்யும்

நாம் பிறரிடம் எதிர்பார்க்கிறோமே தவிர
*நாம் அறத்தோடு வாழ்கிறோமா..???*
நாம் நமக்கேற்றாற் போலவே வாழப் பழகுகிறோம்

பொய் பேசுகிறோம்,
வஞ்சம் தீர்க்கிறோம்,
லஞ்சம் வாங்குகிறோம்,
லஞ்சம் வாங்கி பஞ்சம் போக்குகிறோம்,
மஞ்சம் பகிர்கிறோம்
அடுத்தவர் மனைவியிடத்து
தரங்கெட்டு
மானங்கெட்டு மஞ்சக் குளிக்கிறோம்,

ஆதலால்
இந்தத் தவறுகளை
எளிதாகப் பழகியதால்
எளிதாய்
சிறுமியை,
பெண்களை
வன்புணர்வு செய்கிறோம்,
படுகொலை செய்கிறோம்,
இப்படிப்பட்ட பாதக செயல்களைச் செய்து
பாவத்தைச் சுமக்கிறோம்,

மனிதராய் பிறவியெடுத்து
மனிதரையே வாழ தகுதியற்றவராய்
மரணிக்க வைக்கிறோம்
பெண் மானம் கெடுத்து
மானங்கெட்டவராய் வாழ்கிறோம்,

பிறந்ததும்,
வாழ்வதும் ஒரு முறை,
இறப்பதும் அவரவர் காலவரையறை,

பிறர் வாழ்வை மானத்தை பறிப்பதும்
பிறரது உரிமையைக் கையில் எடுப்பதும்
பிறரை அடக்கியாள நினைப்பதும் எம்மாதிரியான தரக்குறைவான
தரங்கெட்ட செயல்...???

தமிழா தமிழர் அறம் பழகு
தூய வாழ்வை வாழ விரும்பு
உனக்கான தூய அரசியலையும்
தூய அரசையும் நீயே நிறுவு - தமிழ் தேசிய(தீவிர)வாதி



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...