லஞ்சம் வாங்கி விட்டு அடித்துக்கொள்ளும் போலீஸ்காரர்களை விட ராணுவ வீரர்கள் மதிக்கத்தக்கவர்கள் ...!

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

"என் இனிய பொன் நிலாவே காப்புரிமை விவகாரம்: ஹைகோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு!"

Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான  தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று  "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...

லஞ்சம் வாங்கி விட்டு அடித்துக்கொள்ளும் போலீஸ்காரர்களை விட ராணுவ வீரர்கள் மதிக்கத்தக்கவர்கள் ...!

.   லஞ்சம் வாங்கி விட்டு அடித்துக்கொள்ளும் போலீஸ்காரர்களை விட ராணுவ வீரர்கள்  மதிக்கத்தக்கவர்கள் ...!

ஏறக்குறைய ஒரு வருடம் கடக்கப் போகும் நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தின் ஒரு குக்கிராமத்திலிருந்து  பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் வருகிறது. அதை எழுதியவர் தான் ஒரு கிராமத்து பள்ளிக்கூட வாத்தியார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறார் .
......
அதாவது தனது ஒரே மகன் கார்கில் யுத்தத்தில் வீர மரணம் அடைந்து விட்டதாகவும் அவனது முதலாமாண்டு இறந்த தினம் அதாவது நினைவு நாள் இன்னும் சில நாட்களில் அதாவது இன்றைய தேதி (22/05/2000) யில்  வரப்போவதாகவும் அவருடைய மகன் இறந்த நினைவு நாளில் அவரது மகன் இறந்து வீழ்ந்த இடத்தை தானும் தன் மனைவியும் பார்க்க விரும்புவதாகவும் முடிந்தால் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள். முடியாவிட்டால் பரவாயில்லை . நாங்கள் அந்த இடத்தை பார்க்க விரும்புவது தேச பாதுகாப்புக்கு தொந்திரவாக இருந்தால் வேண்டாம். எனது விண்ணப்பத்தை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என்ற விண்ணப்ப கடிதம் வந்தது .
.......
கடிதத்தை படிக்க நேர்ந்த ஒரு உயரதிகாரி என்ன செலவு ஆனாலும் பரவாயில்லை. பள்ளிக்கூட வாத்தியார் வந்து போகும் செலவை (டிபார்ட்மென்ட் தராவிட்டால்) நான் எனது சம்பளத்திலிருந்து தருகிறேன். அந்த வாத்தியாரையும் அவரது மனைவியையும் அந்த பையன் இறந்த இடத்திற்கு அழைத்து வாருங்கள் என்ற கட்டளை பிறப்பிக்க ப்பட்டது.
......
இறந்த மாவீரனின் நினைவு நாளன்று அந்த மலைமுகட்டிற்கு அந்த வயதான தம்பதிகளை இந்திய ராணுவத்தினர் தக்க மரியாதையுடன் கொண்டு வந்தனர்.  மகன் இறந்து வீழ்ந்த இடத்திற்கு அருகே அழைத்துச்சென்ற போது அங்கே டூட்டியில் இருந்த அனைவரும் அட்டன்ஷனில் விறைப்பாக நின்று சல்யூட் செய்தனர் .
........
ஒரே ஒரு வீரர் மட்டும் அந்த வயதான கிராமத்து பள்ளிக்கூட வாத்தியாரின் கால்களில் கைப்பிடி மலர்களை தூவி குனிந்து வணங்கி அவர் பாதத்தை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டார் . பின்னர் நிமிர்ந்து ஏனையோரை போல அட்டன்ஷனில் விறைப்பாக நின்று சல்யூட் செய்தார்.
.......
வாத்தியாரோ பதறிப்போய் என்னப்பா இது ...நீ எவ்ளோ பெரிய ஆஃபீசர்.. நீ போய் என் காலை தொட்டு வணங்கலாமா ? மத்தவங்களை போல நீயும் சல்யூட் மட்டும் பண்ண கூடாதா ? நானும் பதிலுக்கு வணக்கம் சொல்லியிருப்பேனே . என்று கேட்க ..."இல்லை சார். இங்கே நான் அவர்களை விட நான் கொஞ்சம் மாறுபட்டு இருக்கிறேன். அதாவது இங்கே இருப்பவர்கள் போன மாதம் தான் இந்த போஸ்டுக்கு டூட்டியில் வந்திருப்பவர்கள் . நான் உங்க பையனோடு அதே படைப்பிரிவில் இதே மலை முகட்டில் பாகிஸ்தானியரோடு சண்டையிட்டவன். உங்கள் பையனின் வீரத்தை களத்தில் நேரடியாக பார்த்தவன் . அதுமட்டுமல்ல "...என்று சொல்லி நிறுத்தினார்.
.......
வாத்தியார் அந்த ஜே.ஸி.ஓ வின் கைகளைப்பிடித்துக்கொண்டு "சொல்லுப்பா ..எதுவா இருந்தாலும் பயப்படாமல் சொல்லு ...நான் அழமாட்டேன் " என்று கூற "நீங்க அழ மாட்டீங்கன்னு தெரியும் சார்.. நான் அழாமல் இருக்கணும்ல " என்று சொல்லி விட்டு தொடர்ந்தார் ...
....
"அதோ அங்கே தான் பாகிஸ்தானியர் அவர்களின்  எச்.எம்.ஜியால்  வினாடிக்கு நூற்றுக்கணக்கான குண்டுகளை தெறிக்கவிட்டுக் கொண்டிருந்தனர் . முப்பதடி தூரம் வரைக்கும் நாங்க ஐந்து பேரும் முன்னேறிட்டோம் , அதோ பாருங்க அந்த பாறைக்கு பின்னாடி தான் பதுங்கி இருந்தோம். பாகிஸ்தானிகளும் பாறைக்கு பின்னாடி நாங்க இருக்குறத பாத்துட்டாங்க . கொஞ்சம் கையோ காலோ அல்லது எங்களது கிட் பையோ வெளியே தெரிஞ்சா போதும் . குண்டுகளை படபட வென்று தெறிக்கவிட்டானுங்க.  பிரிகேட் ஸ்ட்ரன்த் அளவிலான இந்திய முன்னேற்றம் இன்னும் கொஞ்ச நேரத்துல ஆரம்பிக்க போவுது . என்ன பண்ணுறதுனே தெரியல..... அப்போதான் ...." என்று சொல்லி அந்த ஜே.ஸி.ஓ  கொஞ்சம் பெருமூச்சு விட்டார்.
.......
"என்னப்பா ஆச்சு சொல்லு?" என்று அந்த வாத்தயார் கேட்க ... ஜே.ஸி.ஓ தொடர்ந்தார். "இவனுங்க சுட்டுகிட்டே தான் இருப்பானுங்க ...இது வேலைக்காவாது ... நான் இந்த முப்பதடிக்கு டெத் சார்ஜ் (death charge) பண்ணப்போறேன். அதாவது அவனுங்க சுடுற குண்டுகளை உடம்பில் வாங்கிக்கொண்டு அவனுங்க பங்கர் வரை ஓடி பங்கருக்குள் இந்த வெடிகுண்டை வீசப்போறேன் . அவனுங்களை ஒழிச்சப்புறம் நீங்க பங்கரை புடிச்சிருங்க ன்னு சொல்லிட்டு கிரெனேடோட ஓட தயாரானேன் .
......
அப்போதுதான் உங்க பையன் என்னைப்பார்த்து . "பைத்தியமாடா நீ ? உன்னை நம்பி வீட்ல பொண்டாட்டியும் ரெண்டு சின்ன குழந்தைகளும் இருக்கு . நான் இன்னும் கல்யாணமாகாதவன் .நான் அந்த டெத் சார்ஜ் பண்ணுறேன் . நீ கவரிங் ஃபயர் கொடுடா போதும்"ன்னு சொல்லிட்டு என் கையிலிருந்த கிரெனெடை பிடுங்கிக்கொண்டு டெத் சார்ஜ் பண்ணார் சார் .
....
பாகிஸ்தானியர் எச்.எம்.ஜி யிலிருந்து மழை போல குண்டுகள் பாஞ்சது . உங்க பையன் வளைந்து வளைந்து டாட்ஜ் பண்ணி பாகிஸ்தானியரின் பங்கரை அடைந்து வெடிகுண்டின் பின்னை எடுத்துவிட்டு வெடிகுண்டை பங்கருக்குள் சரியாக வீசி பதிமூணு பாகிஸ்தானியரை மேலுலகிற்கு அனுப்பி வைத்தார் சார். எச் எம் ஜி செயலிழந்து பகுதி எங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தது .
.......
உங்க பையனின் உடலை நான்தான் முதலில் தூக்கி எவாக்குவேஷன் செய்தேன். நாப்பத்திரெண்டு குண்டுகளை உடம்பில் வாங்கியிருந்தார் சார் . அவரோட தலையை என் கையில் தான் சார் தூக்கினேன். என் கையில் இருக்கும் போதுதான் சார் உயிர் போச்சு . அவரோட சவப்பெட்டியை உங்க கிராமத்துக்கு கொண்டு போகும் பொறுப்பு டூட்டியை மேலதிகாரியிடம் அப்போ கேட்டுப்பார்த்தேன் சார்  . இல்லை என்று சொல்லி வேறு முக்கிய டூட்டி போட்டுட்டாங்க சார் .
....
ஒருவேளை அந்த சவப்பெட்டியை தூக்கும் பாக்கியம் கிடைச்சிருந்தா இந்த மலர்களை அவனோட காலடியில் தான் போட்டிருப்பேன் . அது கிடைக்கல . ஆனால் உங்கள் பாதங்களில் மலரை போடும் பாக்கியம் கிடைத்தது சார் ." என்று பெருமூச்சுடன் முடித்தார். (i)
.......
கிராமத்து வாத்தியாரின் மனைவியோ புடவை தலைப்பால் வாயை பொத்திக்கொண்டு சத்தம் வராமல் அழுதுகொண்டிருந்தாள் . வாத்தியார் அழவில்லை. அந்த ஜெ.ஸி.ஓ வீரரை தீர்க்கமாக பார்த்தார் , வீரரும் அழவில்லை. வாத்தியாரை பார்த்தார். 
........
வாத்தியார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. தன்னுடைய தோளில் தொங்கிக்கொண்டிருந்த ஜோல்னா பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து ஜெ.ஸி.ஓ வீரரின் கையில் கொடுத்துவிட்டு "என் பையன் லீவில் ஊருக்கு வந்தால் போட்டுக்கட்டும்னு ஒரு சட்டை வாங்கி வச்சிருந்தேன். ஆனால் அவன் வரல .. அவனது வீர மரணம் பற்றிய செய்தி தான் அப்போ வந்துச்சு..
.....
இனிமேல் அந்த சட்டையை யார் போடப்போறாங்க ..அதான் அவன் உயிர் விட்டஇடத்துலேயே வச்சிறலாம்.ஒரு வேளை அவன் அந்த இடத்துக்கு ஆவியாவாகவாவது வந்து போட்டுக்கட்டும்னு  கொண்டு வந்தேன் . ஆனால்  இந்த சட்டையை யார் போட்டுக்கணும்னு இப்போ தெரிஞ்சுது மாட்டேன்னு சொல்லாம இதை வாங்கிக்க என்று கொடுத்தார் .
.......
கை நீட்டி வாங்கிக்கொண்ட வீரரின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது சத்தியம்.
.......
*பின்குறிப்பு : ஆகவே என் இனிய  நண்பர்களே.... நமக்கு  இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள்.வீணாப்போன அரசியல்வியாதிகளையும், சினிமா கூத்தாடிகளையும் கொண்டாடாமல் உண்மையான செயல்வீரர்களை கொண்டாடுங்கள்....
நல்லோர்கள் ஷேர் செய்யுங்கள்!!!


கருத்துகள்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...

LPG திருடன் LPG thief...For attention

Subbiahpatturajan #LPGthief...Forattention   #LPGthiefForattention . இல்லதரசிகள் சிலிண்டர் வாங்கும் போது அவசியம் பார்க்க வேண்டிய விஷயங்கள்.. LPG சிலிண்டர் வாங்குவோர் கவனத்திற்க்கு... சமீப காலமாகவே இந்தியாவில் இந்த நூதன திருட்டு நடைப்பெறுகிறது., வட இந்தியாவில் தொடர்ந்து  தற்போழுது தமிழகததிலும் இந்த திருட்டு அரங்கேறி உள்ளது... சிலிண்டர் மூலம் இன்னோரு சிலிண்டர்களுக்கு கேஸ் ஏத்தும் காணோலியை காண்க.. #LPGthief...Forattention  அது மட்டும் அல்லாமல் சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர்கள் உதவியுடன், மான்ய விலை சிலிண்டர்களை திடுட்டுத்தனமாக பயன்படுத்துகின்றனர். வீடுகளுக்கு உடனடியாக சிலிண்டர்களை சப்ளை செய்யாமல் காலம் தாழ்த்தி, கடைகளுக்கு கொடுத்து, பின் இரண்டொரு நாள் கழித்து, அதை சப்ளை செய்கின்றனர்.. கேஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்படுவது, பகலில் தான். பெரும்பாலும், பெண்களே வீட்டில் இருப்பதால், எடையை சரிபார்ப்பது என்பது இயலாத காரியம். இதை பயன்படுத்தி, காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர்கள் முறைகேடில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது இல்லதரசிகள் சிலிண்டர் வாங்கும் போது அவசியம் பார்க்க வேண்ட...

First realize that not all Indian citizens are fools ...?!இந்திய பிரஜைகள் எல்லோரும் முட்டாள்கள் இல்லை என்பதை உணருங்கள்...?!

Subbiahpatturajan இந்திய பிரஜைகள் எல்லோரும் முட்டாள்கள் இல்லை என்பதை உணருங்கள்...?! மோடிக்கு_காவல்துறை உயர் அதிகாரியின் பதில்... கடந்த 60 வருடங்களாக காங்கிரஸ் என்ன செய்தது ? என்ற பிரதமர் திரு.மோடி அவர்களின் குற்றச்சாட்டுக்கு... #திரு. #ஜூலியஸ்ரெபைரோ, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி அவர்களின் பதில்... Mr. JULIUS REBERIO I.P.S., Ex Director General of Police - Maharashtra Ex Police Commissioner - Mumbai Ex Director General of Police - Gujarat Ex Director General of Police - Punjab ஒரு சாதாரண இந்திய பிரஜையாகிய நான் சொல்லிய இவைகள் அவர்களுக்கு போய் சேர வேண்டும்... மோடிஜி, இப்படி சொல்லுவதை நிறுத்திவிட்டு, 60 வருடங்களில் என்ன சாதித்தோம் என்பதை பாருங்கள்... இந்திய பிரஜைகள் எல்லாரும் முட்டாள்கள் இல்லை என்பதை முதலில் உணருங்கள்... நீங்கள் பிரதம மந்திரியாக இருக்கும் நம் இந்தியாவை 200 வருடங்களுக்கு மேலாக ஆங்கிலேயன் ஆட்சி செய்தார்கள். இந்தியர்கள் அனைவரும் அவனுக்கு அடிமைகளாகத்தான் இருந்தார்கள். 1947 இல் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சி ஆரம்பித்தபோது ஆங்கிலேயன் துடைத்து வைத்துவிட்டுப்போன பூஜ்யமான பொருளாதாரம்.....

“ஒரு விஷயத்தை சொல்றேன் யாருகிட்டேயும் சொல்லாதீங்க...

Subbiahpatturajan “ஒரு விஷயத்தை சொல்றேன்  யாருகிட்டேயும் சொல்லாதீங்க... நேர்மை பழகு... “எப்போதும் உண்மையைப் பேசுபவர்கள் பேசிய எதையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை” நூற்றாண்டுக்கு முன்னால் சாம் ரேபன் சொன்ன வார்த்தையின் அடத்தி அதிகமானது. எது முக்கியமானதோ அதைப்பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. அந்த முக்கியமான பட்டியலிலுள்ள அதி முக்கியமான விஷயம் இந்த நேர்மை.... நாம் பொருளாதாரம், இலட்சியம், புகழ் எனும் விஷயங்களுக்காய் அன்றாடம் ஓடுகிறோம். ஆனால் நேர்மையைக் குறித்துப் பேசுவதற்கு மறந்து போய்விடுகிறோம்.... அதிகபட்சம் நமது குழந்தைகள் நேர்மையை அறிவது ஆரம்பப்பாடசாலை புத்தகங்களில் மட்டுமே என்று கூடச் சொல்லலாம். சின்ன வயதில் குழந்தைகளுக்கு நேர்மையையும், உண்மையையும் பற்றிப் பேசிவிட்டு நாமே அதை நிறைவேற்றாமல் இருக்கிறோம். அப்போது நமது அறிவுரைகளும் குழந்தைகளின் மனதுக்குள் சென்று தங்குவதில்லை. நாட்டில் இன்று நேர்மைக்குப் பஞ்சம். நேர்மை இயல்பாகவே மனிதர்களிடம் இருக்க வேண்டியது. ஆனால் இன்றைய உலகில் நேர்மையாளர்கள் அருகி வரும் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் தான் தவற விட்ட ...

முக்கியமான விஷயம் நிலம் அல்லது வீடு வாங்குபவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும்.

சுப்பையாபட்டுராஜன் ஒரு வேளை. பழைய பட்டா காரணமாகவே பலர் சிக்கலை சந்திக்கிறாரக்ள் பல்வேறு காரணங்களால் குடும்ப ரீதியாக பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்துக்கு முறையான உட்பிரிவு பட்டா வாங்காமல் இருக்கும். ஒரு வேளை, ஒரு வேளை. ஒரு வேளை, ஒரு வேளை, இல்லை. சிக்கல் வரும் அவ்வாறு குறிப்பிட்ட வீடு அல்லது மனை வாங்கப்பட்டிருந்தாலும், பட்டா வி‌ஷயத்தில் எவ்விதமான கால தாமதமும் கூடாது. காரணம், சொத்தை விற்பனை செய்தவர் ஒருவேளை இறந்துவிடும் பட்சத்தில் அவர் பெயரில் உள்ள பழைய பட்டாவை புதியதாக வாங்கியவர் பெயருக்கு மாற்றுவது சிரமமானதாகி விடும். அதன் பிறகு, இறந்தவரது வாரிசுகள் இருப்பின் அவர்களது உதவி தேவைப்படும் நிலையில், பெயர் மாற்றம் செய்வது சிக்கலான வி‌ஷயமாகி விடும். ஆகவே பாகப்பரிவினை மூலம் கிடைத்த ஒரு சொத்துக்கு உரிய உட்பிரிவு பட்டா இருக்கும் நிலையில், அந்த சொத்தை வாங்கும் முடிவை எடுக்கலாம். அப்போது தான் சொத்தை கிரயப்பத்திரம் செய்த பிறகு, பட்டாவை புதியதாக வாங்கியவர் பெயருக்கு மாற்றம் செய்வது சுலபமாகி விடும். பட்டா அவசியம் ஏன் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நிலம் அல்லது வீடு வாங்குபவர்கள் கட்டாயம் செய்...

பிறப்பு மற்றும் இறப்பு இரண்டும் இப்போது மிகவும் விலை உயர்ந்ததாகிவிட்டது

Subbiahpatturajan உங்கள் வாழ்க்கைக்கு அருமையான மேற்கோள்கள்.  இவை நான் குறிப்பிட்ட காலப்பகுதியில் பெற்ற மேற்கோள்களில் இருந்து எடுக்கப்பட்டவை, வாழ்க்கைப் பயணம்  I) முந்தைய நாட்களில், நம் உறவினர்கள் சில நாட்கள் எங்களைச் சென்று பார்த்துவிட்டு வீட்டை விட்டு வெளியே வரும்போது நம் கண்கள் ஈரமாகிவிடும்.  அதேசமயம், இப்போதெல்லாம் இறுதிச் சடங்குகளின் போது கூட கண்ணீரைக் காண முடியாது; பிறப்பு மற்றும் இறப்பு இரண்டும் இப்போது மிகவும் விலை உயர்ந்ததாகிவிட்டது ;  அறுவைசிகிச்சை இல்லாமல் பிறப்பு இல்லை, காற்றோட்டம் இல்லாமல் இறப்பு இல்லை; கண்ணீரும் புன்னகையும் பொய்யாகிவிட்ட நிலையில், உண்மையான மனிதனை அடையாளம் காண்பது இன்றைய நாட்களில் மிகவும் கடினம். உறவைப் பேணுங்கள்  II) உங்கள் கையில் டச் ஃபோன் மொபைலை வைத்திருப்பது நமது நிலைக்கு நல்லது;  ஆனால் அனைவருடனும் தொடர்பில் இருப்பது நமது அன்றாட வாழ்க்கைக்கு நல்லது;  III) வாழ்க்கை மாறுவதற்கு நேரம் எடுக்கும் என்று தோன்றியது ஆனால் காலம் மாறுவது நம் வாழ்க்கையையும் மாற்றிவிட்டது என்பதை மறந்து விடுகிறோம்; மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்  ...

திருப்பித் தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் If you give for free not to refund ...?!

Subbiahpatturajan *பணமே* உனக்குத் தான் எத்தனைப் *பெயர்கள்* !... பணம் பற்றிய கருத்து  அர்ச்சகருக்குக் கொடுத்தால் தட்சணை என்றும்... கோயில் உண்டியலில் செலுத்தினால் காணிக்கை என்றும்... யாசிப்பவருக்குக் கொடுத்தால் பிச்சை என்றும்...   கல்விக் கூடங்களில் கட்டணம் என்றும்... திருமணத்தில் வரதட்சணை என்றும்...  திருமண விலக்கில் ஜீவனாம்சம் என்றும்... விபத்துகளில் இறந்தால் நஷ்டஈடு என்றும்... ஏழைகள் கேட்டுக் கொடுத்தால் தர்மம் என்றும்... நாமாக விரும்பி ஏழைகளுக்குக் கொடுத்தால் தானம் என்றும்... திருமண வீடுகளில் பரிசாக மொய் என்றும்...       திருப்பித் தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால் அது  கடன் என்றும்... திருப்பித் தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் அது அன்பளிப்பு என்றும்... விரும்பிக் கொடுத்தால் நன்கொடை என்றும்...       நீதிமன்றத்தில் செலுத்தினால் அபராதம் என்றும்...        அரசுக்குச் செலுத்தினால் வரி என்றும்... அரசுப் பொது தர்ம ஸ்பானங்களுக்கு கொடுத்தால் அது நிதி என்றும்...        செய்த வேலைக்கு மாதந்தோறும் கிட...

உன் மனைவி அழகான பெண்ணாக இருந்தாலும் இல்லையென்றாலும் உன் மனைவியை தவிர வேறு எந்த பெண்ணும் வேண்டாம் என்ற மனம் வந்துவிடும்

Subbiahpatturajan ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலிக்கும் மனைவிக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். அதற்கு அந்த ஞானி, “அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை . நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது .” என்றார். கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, “எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? ” என்று கேட்டார். சீடன் சொன்னான், “குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.” புன்முறுவலோடு ஞானி சொன்னார், “இது தான் காதலி !” உனக்கு ஒரு அழகிய பெண் காதலியாக கிடைத்தாலும் இவளை விட அந்த பெண் அழகாக...