முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரயில் பயணம் இனி மெல்ல மெல்ல கசக்கும்.?


காலத்தின் பயணம்


ரயில் பயணம் இனி மெல்ல மெல்ல கசக்கும்.?

*வேதனையோடு பதிவிடுகிறோம்.


*ரயில் விற்பனை டென்டர் 83 பக்கம். 12 cluster க்கு 12  டென்டர். படிச்சு முடிச்சாச்சு.*

*ரயிலை விற்காமா விடமாட்டாங்க போல இருக்கு. தேதி நிர்ணயம் பண்ணிட்டாங்க. நாலு இந்திய கம்பேனிகள் களத்தில் இறங்குவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. ஜப்பான், ஸ்வீடன், ஜெர்மன், சீனா, பிரான்ஸ், அமெரிக்க கம்பேனிகள் விசாரிச்சுக்கிட்டு இருக்காங்களாம்.*

 *இரண்டு மாதத்தில் எந்த நாட்டு கம்பேனிகள்  வாங்க வரும் என்பது தெரிஞ்சிடும்.*

500 பயணிகள் ரயில்கள் விரைவு ரயில்களாக  மாற்றியது கூட அடுத்தக்கட்ட ரயில்கள்  விற்பனைக்குத் தானாம். அதில் மீதமுள்ள 3000 பயணிகள் ரயில்களில் 1000 ரயில்கள்  படிப்படியாக எக்ஸ்பிரஸ் ஆக்கி விட்டு, மற்ற  பயணிகள் ரயில்கள் நஷ்டம்னு சொல்லி  கைவிடலாம்னு யோசிக்குது அமைச்சகம்.

 *கொரானா நல்ல சாக்கா போச்சு.*

 தனியார் ரயில்களில்  Un reserved  கிடையாது. எல்லாமே டைனமிக் கட்டணம்தான். 
குப்பனும், சுப்பனும் டெல்லி, மும்பை, பாட்னா, அவுரா போக பாதையோரம் நடக்க வைத்து விடுவார்கள் என்றே தோன்றுகிறது.

 *தமிழகத்தின் அடையாளங்களான  நெல்லை, கன்னியாகுமரி, பல்லவன், வைகை, தமிழ்நாடு போன்ற விரைவு ரயில்கள் எல்லாம் கைமாறுது.*

*தாத்தா, பாட்டிக்கு "டிக்கெட் கன்ஷெசன்" எல்லாம் கிடையாது.*

பேரன், பேத்திங்கள பார்க்க, 2000, 3000 செலவு செய்யனும். 

ரயில் பயணம் இனி மெல்ல மெல்ல கசக்கும்.

*வேதனையோடு பதிவிடுகிறோம்.*

பாரத் மாதா கி ஜே...
என்று.. போலியாய்
 கோஷமிடும் பாவிகளே
 பாரதத்தாயின் ஒவ்வொரு உறுப்புகளும்..
 அன்னியனுக்கு இன்று விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள்!!
 கொடுமையிலும் கொடுமை !!உலகிலேயே அதிகமான 
 பயணிகளையும்..
 அதிகமான ரயில் பாதைகளையும்..
 கொண்ட பாரதத்தாயின் ...நாடி
 நரம்புகள் இன்று
பாவி..காவிகளால்
 அறுக்கப்படுகின்றன!!
 இந்த கோவிட்..
 பஞ்சகாலத்தில் இவர்களுக்கு ..என்ன
 கொள்ளைநோயா
 வந்தது !!

ஒரு ரயிலை சரியாக ஓடவைக்க ..துப்பு
 இல்லையா உனக்கு!!
 மக்கள் நாங்கள் சாக
 வேண்டுமா ??

ஓடுகின்ற ரயில்களும்..
 போட்ட இருப்பு பாதைகளும் ...
எங்களது பணத்தில்..
 அல்லவா ...நாங்கள்
 கட்டிய வரிப்பணத்தில் அல்லவா ..!!???
அரசே திருந்து..

 இல்லையேல்...பாரதத்தாய் உன்னை
 மன்னிக்க மாட்டாள்😡😡😡😡😡😡😡😡😡

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...