முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போலீஸ்காரர்களைக் கொண்டு லத்தியை சுழற்றுவதால், கொரானா வைரஸை...?!

போலீஸ்காரர்களைக் கொண்டு லத்தியை சுழற்றுவதால், கொரானா வைரஸை  ஒழித்துவிட முடியாது...?!


எந்தக் காரணத்திற்காக ஊரடங்கு கொண்டுவரப்பட்டதோ…,அதற்கு எதிரான பலன்களைத் தான் அது தந்து கொண்டுள்ளது!

இது நான் எதிர்பார்த்தது தான்!

அதிகாரவர்க்கத்தில் இருப்பவர்களுக்கு இயற்கைக்கும்,மனித உடலுக்குமான தொடர்பு புரியாத காரணத்தால், தங்கள் சட்டத்தாலும், சர்வாதிகார நடவடிக்கைகளாலும் கொரோனாவை அதிகரித்து வருகிறார்கள்!


இயற்கை வாழ்வியல் அறிஞர்களின் பேச்சும், எழுத்தும் அதிகார வர்க்கத்திற்கு புரியாது.

நிலம் நீர்,காற்று, நெருப்பு,ஆகாயம் ஆகியவற்றின் தொடர்பில் தான் மனித உயிர்கள் ஒவ்வொன்றும் ஜீவித்திருக்கின்றன! இவற்றின் தொடர்பில் இருந்து மனிதகுலம் தன்னை விடுவித்துக் கொள்ளுமானால் அது உடல் நோயுற்று அழிந்துவிடும்.

அதை தான் இந்த ஊரடங்கு சாதித்துக் கொண்டுள்ளது.

ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன அவசியமோ அவையெல்லாம் இன்று மறுக்கப்பட்டு வருகிறது.


# சுத்தமான காற்றை ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும்
# சூரிய ஒளி தினசரி அரைமணி நேரமாவது நம் உடலில் படவேண்டும்.
# திறந்த வெளியில் ஒருவன் நடக்கும் போது தான் ஆகாயவெளியில் உள்ள பிரபஞ்ச சக்திகளின் ஆற்றல் உடலுக்கு கிடைக்கும்.
# உடல் உழைப்பிற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டால் கூட அந்த உடலில் நோய் தானாகவே வந்து குடியேறிவிடும்.
# மினரல்ஸ் எடுத்து சுத்திகரிக்கப்படாத நல்ல தண்ணீரை குடிக்க வேண்டும்!
# நாலுபேரோடு கலந்து பேசிப் பழகி,இணைந்து வாழும் போது தான் உடலும்,உள்ளமும் புத்துணர்ச்சி பெறும்.

இவற்றையெல்லாம் மறுத்துவிட்டு, நோயை ஒழிக்கப் போகிறோம் என போலீஸ்காரர்களைக் கொண்டு லத்தியை சுழற்றுவதால், கொரானா வைரஸை  ஒழித்துவிட முடியாது
.
இங்கே பல பேருக்கு ஒழுங்காக சுவாசிக்கவே தெரியவில்லை! அப்படிப்பட்டவர்களுக்கு முகக் கவசத்தை கட்டாயமாக்கினால் இன்னும் மோசமாகத் தான் போவார்கள்!

ஒரு அரசு மருத்துவமனையில் அரசு முயற்சியில் யோகா பயிற்சி முகக்கவசம் போட்டபடி கற்றுத் தரப்படுகிறது. இதைவிட ஒரு முட்டாள்த் தனம் இருக்க முடியுமா? வெளித்தள்ள வேண்டிய அசுத்தக் காற்றை ஆழமாக  இழுத்து உள் தள்ளினால் நோய் தான் வரும்!

’’ஆழ்ந்த சுவாசத்திலேயே கொரானா வைரசை அடித்துவிரட்டலாம்..’’ அப்படின்னு மருந்தியலுக்கு நோபல் பரிசு பெற்ற லூயிஸ் ஜே.இக்னரோ தெரிவித்துள்ளார்.(போட்டோ)

காற்றை ஆழ்ந்து சுவாசிக்கும் போது நுரையீரலுக்கு செல்லும்.அப்போது அங்கு உருவாகும் நைட்ரிக் ஆக்சைட் கொரானா வைரஸை அழித்து வெளியே தள்ளிவிடும் என்கிறார் இக்னரோ!

ஒவ்வொருத்தர் உடலுக்குள்ளும் கெட்ட வைரஸ்களை தானாகவே எதிர்க்கும் ஒரு Autoimmune power உள்ளது! நோய் வந்தால் அது தானாகவே அதிகரிக்கும். இதை மருத்துவ உலகம் நன்கறியும். இதைக் கொண்டு தான் பிளாஸ்மா சிகிச்சையே கூட வடிவமைக்கப்பட்டது!

தன் உடலில் உள்ள கழிவுகளை முறையாக வெளியேற்றத் தெரியாத மனிதனை நோய்கள் தேடி வந்து அணைத்துக் கொள்ளும். எத்தனை பேர் தினசரி இரண்டு முறை கக்கூஸ் சென்று முழுமையாக கழிவை வெளியேற்றுகிறீர்கள்! மைதாவில் தயாரான உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு இது சாத்தியமே இல்லை!

தன் உடலையும், சூழலையும், ஆரோக்கியமாகவும், சுதந்திரமாகவும் வைக்க வாய்ப்பு மறுக்கப்படும் சமூகத்தால் எப்படி நோயை விரட்டி அடிக்கமுடியும்?

ஆக,மேலும்,மேலும்,ஊரடங்கை அதிகரித்துக் கொண்டே செல்வதன் மூலம் மேலும்,மேலும் கொரானாவை அதிகரிக்கத் தான் போகிறீர்கள்!

மேலும் ஒன்றை உறுதி செய்யப்பட்ட உளவியல் அடிப்படையில் கூறுகிறேன். நன்மையோ,தீமையோ… நீங்கள் எதில் உங்கள் கவனத்தை குவிமையப்படுத்துகிறீர்களோ..அதை நீங்கள் பெரிதும் வளர்த்து எடுக்கிறீர்கள் என்று பொருள்!

இங்கு அது தான் நடந்து கொண்டுள்ளது. உலகில் எந்த சமாச்சாரமும்  முக்கியமில்லை – கொரானாவைத் தவிர்த்து என்ற அளவுக்கு அதையே,பேசி, எழுதி,விவாதித்து,அதற்கான சூழலை உருவாக்கி, அதை பன்மடங்கு பெருக்கியே தீர்வதென்று அதிகாரவர்க்கம் முடிவெடுத்துவிட்டால்  நாம் கேள்வி கேட்கத் தான் முடியுமா?

உங்களுக்கு மனசாட்சி இருந்தால் இந்த மாற்று சிந்தனைக்கு மதிப்பளிப்பீர்கள்! பார்ப்போம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...