‘...என்னைப் பொறுத்தவரையில் அதிகாரம் என்னுடையது என்றோ, அது அனுபவிக்கக்கூடியது என்றோ நான் எண்ணியது கிடையாது.
மாறாக, அதிகாரத்தை அல்லது பலத்தை நியாயமான காரணத்துக்காக, புரட்சிக்கான ஓர் ஆயுதம் என நான் கருதியிருக்கிறேன்.
என் காலம் முழுவதும், ஆரம்பத்திலிருந்தே, ஒருபோதும் தனிநபர் முடிவுகளை அல்ல, குழு முடிவுகளைத்தான் நான் ஆதரித்திருக்கிறேன். இது பற்றிய மிகத் தெளிவான, மிகச் சரியான புரிதல் எனக்கிருந்ததால், முழுமுற்றான அதிகாரத்தை நாடாதபடிக்கு என்னைக் காப்பாற்றிவிட்டது... அமைப்புகள் அனைத்திலும் எனக்கு வரம்பற்ற அதிகாரம் இருந்தது உண்மை. ஆனால் அடிப்படை முடிவுகள் குழுவினரால் ஆழமாக ஆராயப்பட்டு, விவாதிக்கப்பட்ட பின்பே எடுக்கப்படுகின்றன. நான் தனியாளாக அவற்றில் முடிவெடுப்பதில்லை. அடுத்தவர்கள் கருத்துகள் மீது நான் அதிகக் கவனம் செலுத்துகிறேன். பல சமயங்களில் நான் ஒப்புக்கொள்ளாதவற்றைக்கூட அவர்கள் செய்திருக்கிறார்கள்.
நேர்மையாக, உண்மையிலேயே நேர்மையாக இருந்தால், நீங்கள் ஊழல் செய்யமுடியாது. நீங்கள் தலைக்கனம் இல்லாதவராக, உங்களின், மக்களின் மதிப்பு பற்றிய தெளிவான புரிதல் கொண்டவராக இருந்தால் நீங்கள் ஊழல் செய்ய மாட்டீர்கள். வாழ்க்கை முழுவதும் அசராமல் என்னைக் கண்காணித்து வந்ததோடு, சுய விமர்சனமும் செய்து வந்துள்ளேன். செய்த ஒவ்வொரு பணியிலும், நான் செய்தது சரியா தவறா, நான் எப்போதாவது தலைக்கனம் பிடித்தது போல் நடந்துகொண்டேனா, பெருமிதத்துக்கும் அதற்கும் தொடர்பு உண்டா என்றெல்லாம் சிந்திப்பேன். என்னை நானே கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டுவிட்டேன்...’
கருத்துகள்