*அதட்டி உருட்டி மிரட்டி....நம்மை காத்து நிற்க.....!?
*நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத் தேவை ?*
*தடுமாறும் போது* தாங்கிப்பிடிக்க ஒரு நண்பன் தேவை !
*தடம்மாறும் போது* தடம்மாறாமல் உடன் இருக்க ஒரு நண்பன் தேவை !
*ஆறுதல் சொல்ல* அருகிலேயே சில நண்பர்கள் தேவை !
*அன்புடன் பேச* எப்போதும் சில நண்பர்கள் தேவை !
*அவ்வப்போது* *அரவணைத்துச்*
*செல்ல*
சில நண்பர்கள் தேவை !
*அதட்டி உருட்டி மிரட்டி நம்மை காத்து நிற்க*
ஒரு முரட்டு நண்பனும் தேவை !
*துன்பத்தில் தோளில் சாய்ந்து கொள்ள,*
சாய்ந்து அழ ஒரு உற்ற நண்பன் தேவை !
*ஊர் சுற்றிவர* உருப்படியான, உலகம் தெரிந்த சில நண்பர்கள் தேவை !
*நாம் எது சொன்னாலும்* நம்பிக்கை விசுவாசத்துடன் அப்படியே ஏற்றுக்கொள்ள சில நண்பர்கள் தேவை !
*எதிர்த்துப்பேசி*, பின் பக்குவமாய் எடுத்துச் சொல்லும் எதார்த்தமான சில நண்பர்கள் தேவை !
*இவை எல்லாம் ஒட்டுமொத்தமாய் உள்ள சிலர் நமக்கு நண்பர்களாக இருந்தால் உலகில் இதைவிட சிறந்தது ஏதும் இல்லை*
_*அந்த சிலரை தேடுங்கள் ! கிடைத்தால் அவருடன் காலமெல்லாம் கைகோர்த்துக் கொள்ளுங்கள் !*_
கருத்துகள்