முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

*கர்ப்ப காலத்தில் பெண்கள் உணவை நன்றாக வேகவைத்து சாப்பிடுங்கள் .

கர்ப்ப காலத்தில் பெண்கள் உணவை நன்றாக வேகவைத்து சாப்பிடுங்கள் . 

சினார்தமிழன்

பெண்கள் கர்ப்ப காலத்தில் தங்கள் ஆரோக்கியத்தின் மீதும், குழந்தையின் வளர்ச்சியின் மீதும் கவனமாக இருக்க வேண்டும். 

எந்த வகையான உணவுகளை சாப்பிட வேண்டும், எந்த வகையான உணவுகளை சாப்பிடக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பது நல்லது. அப்படி கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் பற்றி அறிந்து கொள்வோம்.

கருவுற்ற பெண்கள் எந்தவொரு விஷயத்திலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். இல்லையென்றால் அது வயிற்று வளரும் குழந்தையையும் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பமான பெண்கள் குறிப்பாக உணவு விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும். ஏனெனில் கருவுற்ற பெண்கள் சாப்பிடும் உணவுகள் குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கக் கூடிய உணவுகளை உண்ண வேண்டும். இல்லையென்றால் அது உங்களுக்கும் உங்க குழந்தைக்கும் தீங்கு விளைவிக்க வாய்ப்பு உள்ளது.

அதிலும் முழுமையடையாத உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். கருவுற்ற காலத்தில் பெண்கள் எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும் வாங்க தெரிஞ்சுக்கலாம்.

​சமைக்காத அல்லது பாதி வேகவைத்த முட்டைகள்
கர்ப்ப காலத்தில் முட்டை எடுத்துக் கொள்வது ஆரோக்கியமானது என்பார்கள். ஏனெனில் முட்டையில் நிறைய அளவு புரோட்டீன் காணப்படுகிறது. ஆனால் வேக வைக்காத அல்லது பாதி மட்டுமே வேக வைத்த முட்டைகளை சாப்பிடுவது உங்க வயிற்று வளரும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். முட்டையில் உள்ள சால்மோனல்லா தொற்றுநோயை ஏற்படுத்த வல்லது.

காய்ச்சல், குமட்டல், வாந்தி, வயிற்றுப் பிடிப்பு போன்ற உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. நோய் சில சமயங்களில் நஞ்சுக்கொடியைக் கடந்து கருப்பை செப்சிஸ் அல்லது கருவுக்கு தொற்று ஏற்பட வழிவகுத்து விடும். எனவே கருவுற்ற பெண்கள் முட்டையை நன்றாக சமைத்து சாப்பிடுங்கள்.

கலப்படமில்லாத பால் மற்றும் பால் பொருட்கள்
கர்ப்ப காலத்தில் ஒரு டம்ளர் பால் குடிப்பது உங்க கால்சியம் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும். ஆனால் பதப்படுத்தப்பட்ட பால் மட்டுமே சிறந்தது. பதப்படுத்தப்படாத பாலை குடிக்கும் போது அதில் உள்ள பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று லிஸ்டெரியோசிஸ் அபாயத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

உண்மையில் இந்த பாதிப்பு கருவுறாத பெண்களை விட கருவுற்ற பெண்களுக்கு 20 மடங்கு ஆபத்து அதிகம். கர்ப்ப காலத்தில் உங்க நோய் எதிர்ப்பு சக்தி எல்லா நேரத்திலும் குறைவாக இருப்பதால் தொற்று எளிதாக ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பாக்டீரியா தொற்று நஞ்சுக் கொடியை கடந்து கருவை அடைந்தால் அதன் பிறகு பிரசவம், தன்னிச்சையான கருக்கலைப்பு, முன்கூட்டிய பிரசவம் மற்றும் குழந்தை பிறந்த பிறகு ஆரம்ப கால நோய்த்தொற்றுக்கு வழி வகுக்கும்.

சமைக்காத கடல் உணவுகள்

பாதி அல்லது சமைக்காத கடல் உணவுகளும் கருவுக்கு தீங்கு விளைவிக்கக் கூடும். இது கருவுற்ற பெண்களை சில ஒட்டுண்ணி நோய்களுக்கு ஆளாக்கும். சில மீன்களில் அதிக அளவு பாதரசம் இருப்பதால் அவை கருவின் மூளை வளர்ச்சியில் சேதத்தை ஏற்படுத்துகிறது.


கர்ப்ப காலத்தில் மீன்களைத் தேர்ந்தெடுக்கும் போது, உங்க பட்டியலில் இருந்து மத்தி மீன்களை தேர்ந்தெடுங்கள். அதன் பின்னர் டூனா போன்ற உயர்ந்த பாதரசம் கொண்ட மீன்களை தேர்ந்தெடுங்கள். மீனில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறையவே காணப்படுகிறது. இது கருவின் மூளை வளர்ச்சி மற்றும் தாய்வழி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

எனவே கர்ப்ப காலத்தில் மீன் சாப்பிடும்போது ரோஹு, கட்லா, ப்ரோம் ஃப்ரெட் போன்ற மீன் வகைகளைத் தேர்ந்தெடுங்கள். இவற்றில் பாதரசம் குறைவாக இருக்கும். அதே மாதிரி மீனை நன்றாக சமைத்து சாப்பிடுங்கள்.

மூலிகை டீ

ஆளி விதை, மிளகுக்கீரை, கெமோமில், கிரீன் டீ போன்ற மூலிகை தயாரிப்புகள் கொண்ட தேநீர்கள் நிறைய நன்மைகளைக் கொடுத்தாலும் கர்ப்ப காலத்தில் பிறப்பு எடை குறைவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என்று ஊகிக்கப்படுகிறது.

2012 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கடைசி 2-3 மாதங்களில் கூட மூலிகை தயாரிப்புகள் குறைந்த எடை பிறப்பு குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை. எனவே இது குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.

பச்சை காய்கறிகள் மற்றும் முளைக்கட்டிய பயிறு வகைகள்
பச்சை காய்கறிகளை சாப்பிடுவது தவறில்லை. ஆனால் பச்சை காய்கறிகளை உண்ணும் போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பச்சை காய்கறிகளை அதிக நேரம் திறந்த வெளியில் வைக்காமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் அவற்றின் மேல் பாக்டீரியா பெருக்கத்தை ஏற்படுத்தும். கழுவப்படாத முளைக்கட்டிய பயிறு வகைகளில் கூட பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. இந்த முளைக்கட்டிய பயிறு வகைகளை உட்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். அவை உங்க உடலின் உள் தொற்றுக்கு வழி வகுக்கும். இது கருவுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே முளைக்கட்டிய பயிறு வகைகள் மற்றும் காய்கறிகளை நன்றாக கழுவி சமைத்து சாப்பிடுங்கள்.

தேன்

கர்ப்ப காலத்தில் வழக்கமாக தேனை சாப்பிடுவது கருவுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேன் உணவு உடைப்பட்டு நஞ்சுக்கொடியைக் கடக்க வாய்ப்புகள் மிகக் குறைவு.

இருப்பினும் கர்ப்ப காலத்தில் அதிக தேன் குழந்தைகளுக்கு போட்யூலிசம் என்ற ஒரு வகை ஒட்டுண்ணி நோயால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உணவுப்பொருட்களை நீங்கள் பரிசோதிக்க கர்ப்ப காலம் சரியான நேரம் கிடையாது. எனவே உங்களுக்கு சில உணவுகள் அழற்சியை ஏற்படுத்தும் என்றால் அதை கர்ப்ப காலத்தில் முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இந்த உணவுகள் வளரும் கருவில் ஒரு எதிர்வினையை ஏற்படுத்தும். எனவே அவற்றில் இருந்து விலகியே இருங்கள்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...