முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சின்னதா அடகு கடை மட்டும் நடத்திட்டு இருந்தவங்க., அப்படியே கொஞ்சம் கொஞ்சமா...🤔🙆🤦

Subbiahpatturajan

சின்னதா அடகு கடை மட்டும் நடத்திட்டு இருந்தவங்க.,
அப்படியே கொஞ்சம் கொஞ்சமா...🤔🙆🤦



சுமார் 50 வருடங்களுக்கு முன்பு இருக்கும்,
ராஜஸ்தானில் இருந்து தமிழகத்துக்கு வந்த சில குடும்பங்கள் சிறியதாக அவங்க வசதிக்கு ஏற்ப பைனான்ஸ் தொழிலை ஆரம்பிக்கிறாங்க.! 

அப்போ அதைபத்தி இங்க இருந்த யாரும் பெருசா கவலைப்படவும் இல்லை அலட்டிக்கவும் இல்லை.🙄

அவங்களுக்கு அந்த தொழிலை நடத்த ஒரு அமைதியான நிலப்பரப்பும் அதை சார்ந்த எளிமையான மக்களும் தேவை.!

நம்ம மக்களோட 
🔥நேர்மை, 
🔥சரியான படி பணத்தை திருப்பி செலுத்துதல்
🔥காசு விஷயத்தில் கரெக்டா நடந்து கொள்வது,
அப்புறம் முக்கியமா,
🔥நம்ம வீடுகளில் இருந்த தங்கம்.!🙄

இதெல்லாம் பார்த்த அவங்க ரொம்பவே இம்ப்ரஸ் ஆயிட்டாங்க..!
நம்ம தொழில் நடத்த இதைவிட சிறந்த இடம் வேற எதுவுமே கிடையாதுன்னு முடிவு பண்றாங்க..!

"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்பதற்கு பதிலாக
"யாம் பெற்ற இன்பம் பெருக எம் இனம்" என்பது போல இங்கு உள்ள நிலவரம்,தொழில் வாய்ப்புகள் பற்றி

அங்குள்ள அவங்க மக்களிடம் எடுத்து சொல்லுறாங்க. இது நல்லாவே வசதியா கை கொடுத்ததுன்னே சொல்லலாம்.!

இதனால தமிழகத்துக்கு வந்த சில குடும்பங்கள் பல குடும்பங்களாக பெருகியது.! தமிழகத்திலுள்ள குக்கிராமங்களில் கூட ஒரு அடகுக்கடை அவர்களால் திறக்க முடிந்தது.!

இதோட அடுத்த கட்டம், குஜராத் மற்றும் அதை சுற்றியுள்ள பல பகுதிகளில் இருந்தும் அந்த மக்கள் வர ஆரம்பித்தார்கள்.!

சின்னதா அடகு கடை மட்டும் நடத்திட்டு இருந்தவங்க.,
அப்படியே கொஞ்சம் கொஞ்சமா சின்னச்சின்ன தொழில் நிறுவனங்களுக்கு, அப்புறம் சில்லரை வணிகத்திற்கு என கடன் வழங்க ஆரம்பிச்சாங்க.!

"வந்தாரை வாழவைக்கும் தமிழகம்" வழக்கம்போல இவர்களையும் வாழவைத்தது..!
அதுவும் சிறப்பாகவும் அமோகமாகவும்..!

இதனால பல தமிழக கிராமங்களில் ஊருக்குள்ள ஒரு அடகு கடையும் அதை ஒட்டிய மாதிரியே சின்னதா ஒரு ஜவுளி கடையும் ன்னு சின்னதா கிளை பரப்ப ஆரம்பிச்சு இருந்தாங்க..!

'குறிப்பாக கடன் வாங்குவதற்கு அடுத்தன் கிட்ட போய் கை கட்டி நிற்பதற்கு பதிலா, வீட்ல இருக்கிற பெரிய பாத்திரங்கள், சின்ன நகைகள்
இப்படி ஏதாவது ஒன்றை கொண்டுபோய்க் கொடுத்து, பேப்பர்ல ஒரு நாலு கையெழுத்து போட்டா போதும் மிக எளிதாக பணம் கிடைச்சுடும்.'
என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினாங்க.!😊

இன்னொன்னு,
காந்திஜீ சொன்ன 
" வாடிக்கையாளரே நமது தெய்வம்" என்பதற்கு ஏற்ப அவங்க கடன் வாங்க வர்றவங்களை நல்ல முறையில் நடத்தினார்கள்..! அப்புறம்

'நம்மில்,
நிம்மள்,
நான் சொல்லுது,
தர்றான்,
ஆவறது இல்லே'

இப்படியே இவங்க பேசுன தமிழும்.
இதைக்கேட்டு நம்ம மக்கள் அப்படியே பூளாங்கிதம்,

அடைஞ்சு,நீட்டின பேப்பருல எல்லாம் கையெழுத்து போட்டு காசை மட்டும் வாங்கிட்டு வந்தாங்க.!

பண்டிகை காலங்களில் எல்லாம், கைல காசு இல்லைன்னா,
வீடுகளில் இருந்த பெரியசெப்புப் பாத்திரங்களான அண்டா குடம், மோதிரம் இதெல்லாமே அவங்கிட்ட அடகுக்கு போகும்.அந்த காசுல பக்கத்திலேயே அவங்க சின்னதா,

திறந்து வச்சிருக்கிற ஜவுளிக்கடையில் அப்படியே புது துணிமணிகளையும் எடுத்துட்டு வந்துருவாங்க..!

" இது நல்ல பிசினஸ் மாடலாக இருக்குல்ல..!" 

இந்த பிசினஸ் வெற்றியடைய இவங்க பின்பற்றக்கூடிய ஒரே விஷயம் 
"யாருக்கும் அடமானம் இல்லாம கடன் குடுக்க கூடாது என்பது தான்..!"

உதாரணமாக
ஒரு புது பித்தளை குடத்தோட மார்க்கெட் ரேட் 200 ன்னா (அப்போ அந்த ரேட்டு தான்) இவங்க பழசுங்கறதுனால 50-60% ரேட் பிக்ஸ் பண்ணுவாங்க. அதாவது 100-120 க்குள்ள. அதுல பாதி தான் கடன் குடுப்பாங்க.(55 - 60) ரொம்ப பேசி வச்சு கேட்டுப்பார்த்தா ஒரு எக்ஸ்ட்ரா 5% தருவாங்க.! (55+2.25 - 60+3)

இதுக்கு மேல ஒரு இம்மி பைசா கூட நாம் எதிர்பார்க்க முடியாது..!
இதுல அடுத்தடுத்து ஒரு மூணு மாசம் நம்மளால வட்டி கட்ட முடியலன்ன, பெருசா எல்லாம் நம்ம கிட்ட வந்து சண்டை போட மாட்டாங்க. அவங்க எப்பவுமே நல்லா தமிழ் , ஹிந்தி பேசத் தெரிஞ்ச ஒரு பையன வேலைக்கு வச்சிருப்பாங்க.

அவன் வட்டி கட்டாத ஒவ்வொரு மாசமும் வந்து ஒரு பேப்பர்ல கையெழுத்து வாங்கிட்டு போயிடுவான். 
நமக்குத்தான் மானம் பெருசாச்சே..!
வட்டி கேட்டு தெரு வாசல்ல நின்னுகிட்டே அசிங்கமாக கத்துற கடன்காரங்க மத்தியில இது எவ்வளவோ தேவலை என்னு நம்மளும் கையெழுத்து போட்டு கொடுத்திருப்போம்..!🙄

அவ்வளவு தான். மூணு மாசம் வட்டி கட்டலன்னா நாலாவது மாசம் அந்த அடமானம் வச்ச பொருள் அங்களுக்கு சொந்தமாகிவிடும்..!
இப்படி அவங்க கொஞ்சம் கொஞ்சமா உழைச்சு சம்பாதிச்சு சேர்த்த சொத்து ரொம்ப பெருசு.!
இப்படியே படிப்படியா டெவலப் ஆகி பிறகு அவங்க பெரிய நிறுவனங்கள் திரைப் படங்கள்

என அவங்க பைனான்ஸ் பண்ற சர்க்கிள் ரொம்ப பெருசாக்கி கிடுச்சு..! இன்னைக்கு தமிழ்நாட்டுல நிறைய நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள், 
முதலீட்டாளர்கள், 
தொழில் பண்றவங்கன்னு நிறைய பேர் அவங்க கிட்ட தான் கடன் வாங்கி இருக்காங்க.! நிறைய நிறுவனங்களில் அவங்க சைலன்ட் பார்ட்னர் ஆகவும் இருக்காங்க..!🙄

இதுல ஒரு விஷயம் என்னன்னா, நிறைய தமிழ் படங்களில்,
🔥இவங்கள ஒரு அப்பாவி மாதிரியும்,
🔥தமிழ் சரியா பேச வராத மாதிரியும், 
🔥 மத்தவங்க இவங்க கிட்ட போலியான நகைகளை அடகு வச்சுட்டு ஏமாத்துற மாதிரியும்,
🔥கடனுக்கான வட்டி கேட்டு வர்ற இவங்கள கலாய்க்கிற மாதிரியும்,
🔥காமெடி பண்ற மாதிரியும்,

இது மாதிரியான காட்சிப்படுத்துதல் எல்லாம் இவங்க பைனான்ஸ் பண்ற படங்கள்ல திட்டமிட்டே புகுத்தப்பட்டிருக்கும்..!

உண்மை இதற்கு நேர் மாறானது😂 இவங்களுக்கு நல்லா தமிழ் தெரியும், எழுதவும் பேசுவும்,
நல்ல விபரமானவங்க,
அவ்வளவு சாமானியமா எல்லாம் ஏமாற்றவும் முடியாது..!🤔



மார்வாடியைப் போல பணக்கார வியாபாரியாக என்ன வழி என்று கேட்கையில் ஒரு மார்வாடியே இதை நகைச்சுவையாய் சொல்கிறார்: “ஒரு மார்வாடியின் மகளை கட்டிக்கொள்ளுங்கள். அவர்கள் உங்களை பணக்கார வியாபாரியாக மாற்றிக் காட்டுவார்கள்”


இன்றைக்கு அதிகப்படியான தங்கநகை கடன் வழங்கும் நிறுவனங்கள் (Gold Loan Companies)உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.!
இதுக்கெல்லாம் விதை இவங்க போட்டது தான்.
எல்லாம் சரி,யார் இவங்க.!😊

தற்போது போப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்திய பில்லியனர்களில் நான்கில் ஒரு பங்கு மார்வாடிகள் இருக்கிறார்கள். இவர்கள் இல்லாத தொழில்கள் இல்லை எனச் சொல்லலாம். ஏழாவது தலைமுறை காணும் பிர்லாவை அமெரிக்காவின் போர்ட் அல்லது ராக்பெல்லருடன் ஒப்பிடலாம்

இந்தியாவின் உள் நாட்டு வணிகம் முழுவதையும் மார்வாடிகள் எப்படி தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள் 

ஒரு புதிய பொருளை மிக விரைவில் அது பற்றி தெரிந்து கொண்டு அதை வாங்கி, விற்று வணிகம் நடத்தும் இவர்களுக்கு ரிஸ்க் எடுப்பது நிஜமாகவே ரஸ்க் தின்பது போலதான் எனத் தோன்றுகிறது. தந்தி வராத காலத்தில் புறாக்களை வைத்தும், தந்திகளை முதலில் பயன்படுத்தியும், திருட்டுத்தனமாக ரேடியோ கருவிகளை வைத்துக் கொண்டும், லண்டன் பங்குச் சந்தை விலை முதல் உள்ளூர் விலை வரை எல்லாவற்றையும் எப்படி வேகமாக அறியத் துடித்தார்கள் என்று படித்தபோது வியப்பாக இருந்தது.

சேத்தின் வியாபார நிர்வாக வழிமுறைகள் அலாதியானவை. ‘கடி’ என்ற பஞ்சு மெத்தைதான் சேத்தின் அலுவலகம். முனிம் என்கிற கணக்கர்தான் கணக்குகள் எழுதுவார். உள் அறையில் சரக்குகள் இருக்கும். பின் கட்டில் பிராமணர்கள் சமைப்பார்கள்.



புதிதாக வரும் மார்வாடி இளைஞர்களுக்கு அங்கேயே தங்கி, வேலை செய்யும் வசதி செய்து தரப்படுகிறது. முதலில் ஹுண்டி எனும் கணக்கியல் பயிற்சி. பின் சரக்கு பரிமாற்றம். பிறகு ஏதாவது ஒரு கிளையில் வேலை. தனியாக தொழில் செய்ய நினைத்தால் நிதிதாரராக அல்லது பங்குதாரராக சேத்தே உதவி செய்வார்.

முதலாளியின் உள்ளுணர்வு எல்லா முடிவுகளுக்கும் காரணி. நம்பிக்கைதான் வியாபார மந்திரம். கூடி வாழ்தல்தான் பிழைக்கும் வழி என எத்தகைய போட்டி என்றாலும் கூடியே வாழ்தல். எல்லா கணக்கும் அன்றன்றே பைசல் செய்தல். போட்டியாளர், பகையாளி என யாராக இருந்தாலும் கடன் கொடுத்தும் வாங்கியும் தொழில் நடத்துதல் என பிரம்மிக்க வைக்கும் வழிமுறைகள்.

இவர்கள் பிரிட்டிஷ்காரர்களுக்கும் கடன் வழங்கியிருக்கிறார்கள். விடுதலைப் போராட்டத்துக்கும் நிதி வழங்கி யிருக்கிறார்கள். தொழிலில் வரிகள் நெருக்கடி, வெள்ளையரின் சூழ்ச்சி என வரும்போதெல்லாம் பணத்தை நிலத்தில் போட்டு நிலச்சுவான்தார்கள் ஆனார்கள். எந்த புதிய தொழில் வந்தாலும் ஒரு கை பார்த்தார்கள். பிட்ஸ் பிலானி, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் என அமைத்து கல்வி அமைப்பிலும் கால் பதித்துவிட்டார்கள்...!

இந்தியாவில் பிராமணசமுகத்திற்கு பிறகு அதிகார வர்க்கத்தில் இப்போது இருப்பது மார்வாடிசமுகத்தினரே

முக்கிய அறிவிப்பு:

நாட்டுமக்களால் இப்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் நம் நாட்டின் பிரதமர் மார்வாடி சமூகத்தில் பிறந்தவரே....🙆🤔


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...