முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நினைத்தபடி, நினைத்தவற்றைச் சாப்பிடுவதுதான் மொத்த ஜீரண நிகழ்வுகளும் தடம்புரளக் காரணங்கள்.*

Subbiahpatturajan

✍ *இயற்கை வாழ்வியல் முறை*
*ஜீரணத்தை சீராக்கும் வழிமுறைகள்!*

நினைத்தபடி நினைத்தவன் கை சாப்பிடுவது

*சிலருக்கு நெஞ்சு எலும்புக்குக் கீழே ஒருவித எரிச்சலுடன்கூடிய வலி, மாரை அடைப்பது போன்ற உணர்வு வரும். காரணம், நாம் சாப்பிட்ட உருளைக்கிழங்கு போண்டா, சாம்பாருடன் கூடிய பொங்கல் என ஏதோ ஒன்று செரிமானம் ஆகாததால் வந்த நெஞ்செரிச்சலாக இருக்கலாம். ஜீரணம் என்பது, உமிழ்நீரில் ஆரம்பித்து மலக்குடல் வரை நடக்கிற செயல்பாடு. இலையில் பிடித்த பதார்த்தத்தைப் பார்த்ததும், உமிழ்நீர் சுரப்பதில் ஆரம்பிக்கும் ஜீரணம் சரியாக நடைபெற, பல சுரப்புகள், நுண்ணுயிரிகள் என ஏராளமான விஷயங்கள் சரியாக நடைபெற வேண்டும். நினைத்தபோது, நினைத்தபடி, நினைத்தவற்றைச் சாப்பிடுவதுதான் மொத்த ஜீரண நிகழ்வுகளும் தடம்புரளக் காரணங்கள்.* *செரிமானக் கோளாறுகள் பல்வேறு நோய்களுக்கு வழிவகுப்பவை என்பதை கவனத்தில் கொள்வோம்.*
*இனி, ஜீரணத்தை சீராக்க சில வழிமுறைகள்...*🦨🦨🦨🦨🦨🦨
*ஆரோக்கியமான உடலுக்கு இரு நேர சிற்றுண்டியும், ஒரு வேளை பேருண்டியும் போதுமானது. இரு சிற்றுண்டிகளில் ஒரு வேளை (இரவு அல்லது காலை) பழ உணவும் இயற்கையில் விளைந்த சமைக்காத உணவும் இருப்பது சிறப்பு.*

🦨🦨🦨🦨🦨🦨
*காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்கு காலையில் உடல் பித்தத்தைக் குறைக்கும்படியான குளிர்ச்சியான உணவு அவசியம். அவல் பொங்கல் அல்லது உப்புமா, கைக்குத்தல் புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிறு குழந்தைகளாக இருந்தால் நவதானிய / சிறு தானிய / பயறு நிறைந்த கஞ்சி நல்லவை. வளரும் குழந்தைக்கு ஒரு வாழைப்பழத்துடன் இட்லி அல்லது தானியக் கஞ்சி கொடுக்கலாம். இளைஞர்கள் பழத்துண்டுகளுடன் அவல் பொங்கல் அல்லது வெண்பொங்கல் சாப்பிடலாம். பெரியவர்கள் சிவப்பரிசி அவலுடன், பப்பாளித் துண்டுகள், இளம் பழுப்பில் உள்ள கொய்யா இவற்றுடன் புழுங்கல் அரிசி உணவு அல்லது கேழ்வரகு உணவு சாப்பிடலாம். ஜீரணத்தை சீராக்கும்.*
🦨🦨🦨🦨🦨🦨
*மதிய உணவில் நிறையக் காய்கறிகள், கீரைக் கூட்டு / கடைசல் இவற்றுடன் அரிசி உணவை அளவாகச் சாப்பிட வேண்டும்.*
🦨🦨🦨🦨🦨🦨
*அதிகக் காரத்தைத் தவிர்க்கவும். காய்ந்த மிளகாய் பயன்படுத்தவேண்டிய உணவுகளில், அதற்குப் பதிலாக மிளகைப் பயன்படுத்த வேண்டும்.*
🦨🦨🦨🦨🦨🦨
*ஜீரணத்தை எளிதாக்க, எண்ணெயில் பொரித்த உணவைத் தவிர்ப்பது நல்லது.*
🦨🦨🦨🦨🦨🦨
*சரியான நேரத்துக்கு உணவைச் சாப்பிட்டுவிட வேண்டும்.*
*அவசியமின்றி வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.*
🦨🦨🦨🦨🦨🦨
*எப்போதும் டென்ஷனுடன் இருப்பவர்களுக்கு ஜீரணக் கோளாறு வந்துவிடும். மனதை லகுவாக வைத்திருக்கவும்.*
🦨🦨🦨🦨🦨🦨
*புகை, மது இரண்டும் கேன்ஸரை வயிற்றுப்புண் வழியாக அழைத்து வருபவை. இரண்டையும் தவிர்க்கவும்.*
🦨🦨🦨🦨🦨🦨
*காலை உணவில் இட்லிக்கு பிரண்டைத் துவையல் நல்லது.*
🦨🦨🦨🦨🦨🦨
*துவரம்பருப்பு சாம்பாருக்கு பதிலாக பாசிப்பருப்பு சாம்பார் செய்து சாப்பிடலாம்.*
🦨🦨🦨🦨🦨🦨
*வெள்ளைக் கொண்டைக்கடலைக்குப் பதில், சிறு சிவப்புக் கொண்டைக்கடலை பயன்படுத்தலாம்அதுவும்கூட குறைந்த அளவில், மிளகு சீரகம் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும்.*
🦨🦨🦨🦨🦨🦨
*காலை 11 மணிக்கு நீர் மோர் இரண்டு டம்ளர் அருந்தலாம்.*
🦨🦨🦨🦨🦨🦨
*மதிய உணவில் காரமில்லாத, பாசிப் பயறு சேர்த்த கீரைக் குழம்பு, தேங்காய்ப் பால் குழம்பு (சொதி), மிளகு-சீரக ரசம், மணத்தக்காளி கீரை என சாப்பிடவும். சாப்பிட்டு முடித்ததும் இரண்டு குவளை சீரகத் தண்ணீர் அருந்துவது ஜீரணத்தை எளிதாக்கும்.*
🦨🦨🦨🦨🦨🦨
*இரவில் வாழைப்பழம், ஆவியில் வேகவைத்த அல்லது சமைக்காத இயற்கை உணவு சாப்பிடவும்.*
🦨🦨🦨🦨🦨🦨
*கொத்தவரை, காராமணி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு ஆகிய காய்கறிகளைத் தவிர்க்கவும். அதிக அளவிலான மாம்பழமும் பலாப்பழமும்கூட வாயுவை உண்டாக்கும்.*
🦨🦨🦨🦨🦨🦨
*சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், பெருஞ்சீரகம், ஏலம், பெருங்காயம், கறிவேப்பிலை சம பங்கு, உப்பு பாதிப் பங்கு சேர்த்து லேசாக வறுத்து பொடியாக்கி, சூடான உணவில் முதலில் பருப்புப் பொடிபோல் போட்டு சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படாது. சாப்பிட்டதும் வயிற்று உப்புசம் வருபவர்களுக்கு இந்த அன்னப்பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, மோருடன் சாப்பிடக் கொடுக்க வேண்டும். உடனடியாக வாயு விலகி, வயிற்று உப்புசம் நீங்கும்.*
🦨🦨🦨🦨🦨🦨
*சித்த மருத்துவரிடம் கிடைக்கும் ஜீரண சஞ்சீவி, சீரக விவாதி மருந்துகள் அஜீரணத்தை அகற்ற* *உதவுபவை.*
 *தினமும் நடைப்பயிற்சி மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.*
*அடுப்பங்கரையில் கொஞ்சம் அக்கறை காட்டினால் அஜீரணத்தை வெல்லலாம்*
🦨🦨🦨🦨🦨🦨
🌷🌷🌷🌷🌷🌷
*உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்*
🦚🦚🦚🦚🦚🦚
*_நன்றி_*
_*வணக்கம்*_
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...