முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு சிறிய உதாரணம்...

Subbiahpatturajan





M.No.393 அரசாங்க ஊழியர்கள் தங்கள் உரிமைகளை  மட்டுமே பேசுகிறார்கள். கடமையும் உண்டு என்பதை மறந்து விடுகிறார்கள். இதை விளக்குவதுதான் இந்த சிறுகதை.

ஒரு ஊரில் திரிஷா நகர், காஜல் நகர் என இரு ஏரியா. 

திரிஷா நகரில் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த ஒருவர் கடை ஆரம்பித்தார். காலை 6.00 மணிக்கு மனைவி கடையை திறந்து விடுவார். பால் பாக்கெட் வியபாரம் நடக்கும். அதற்குள் மார்கெட் சென்று கணவன் காய்கறி வாங்கி வந்து விற்க்க ஆரம்பிக்க மனைவி சமைத்து வர போவார். மனைவி பின் மதியம் கடையை பார்க்க சிறிது ஓய்வுக்கு பின் கணவன் வர மனைவி ஓய்விற்கு செல்ல....மாலை கணவன் மனைவி இருவரும் இணைந்து வியாபாரத்தை கவனிக்க...சுறுசுறுப்பும் நேர்மையும் பணிவும் வியாபாரத்தில் வெற்றியை தந்தது. பிழைக்க வந்த ஊரிலே நாலு வீடு வாங்கினர். இருப்பினும் தொழில் அதே போலவே.....
இது கற்பனை கதை அல்ல. உங்கள் வாழ்வில் நீங்கள் பார்த்த கதை தான். பார்த்த நபர்கள் தான்.




சரி காஜல் நகருக்கு வருவோம். அங்கே மளிகை கடை கிடையாது. மக்களுக்கு சேவை செய்ய அரசு மளிகை கடை ஆரம்பித்தது.

இரு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். யூனியன் சொன்னது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மட்டுமே வேலை. ஒரு மணி நேரம் ஓய்வு.

எனவே கடை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது. மற்றொரு நபர் மார்கெட் சென்று காய்கறி வாங்க போவார். அதிகாலையில் வித்தது போக மீதி காய்ந்த காய்கறிகள் கடைக்கு 1 மணிக்கு வரும். 1மணி முதல் 2 மணி வரை லஞ்சு இடைவேளை.
அதற்குள் ஏரியா பெண்கள் குழம்பு வைத்து பசி ஆறி இருப்பர். வியாபாரம் நடக்குதோ இல்லையோ 6 மணிக்கு கடையை பூட்டி விட்டு கிளம்பி விடுவார்கள்.

இதில் பணம் வாங்க என பெண் பணியாளர் ஒருவரை அரசு நியமித்தது. கடையை யார் கூட்டுவது என்பது சன்டையாகி யூனியன் மூலம் சமாதானமாகி துப்புரவு தொழிலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இப்போது நான்கு ஊழியர்கள். கடைக்கு வந்த பெண்ணை எடை போடுபவர் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இருவருக்கும் HRA வீட்டு அலவன்ஸ் அரசு தந்தது. ஒரே வீட்டில் இருவரும் இருந்தனர். பெண் பணியாளருக்கு குழந்தை பிறந்ததால் 9 மாதம் விடுப்பு அரசு தந்தது. இதற்கு மாற்றாக வரும நபர் மாலை மட்டுமே வருவதால் 9 மாதங்களும் மாலை மட்டுமே வியாபாரம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது..

திரிஷா நகர் , காஜல் நகருக்கு அருகே இருந்ததால் காஜல் நகர மக்கள் அங்கே சென்று காய்கறி மளிகை சாமான்களை வாங்கிக்கொண்டனர்.

அரசுமளிகை கடை பெரும் நட்டம் சம்பாதிததது. சம்பளம் தரமுடியவில்லை. மூடலாம் என முடிவெடுத்த போது அந்த அரசு மளிகைகடை ஊழியர்கள் சொன்னார்கள். "நாங்கள் மக்களுக்கு சேவை செய்கிறோம். கடையை மூடக்கூடாது"

புரிந்ததா..பொதுத்துறை தனியார் துறை வித்தியாசம். அவ்வளவு தான்.!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...