முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

3 6 9 இது தான் உலகம் நிக்கோலா டெஸ்லா

Subbiahpatturajan

3 6 9 குறியீடு


இந்த 369 எண் முறைமை கண்டுபிடித்தவர் நிக்கோலா டெஸ்லா.
நிக்கோலா டெஸ்லா, இவர் பெயரை பலர் இப்பொழுதுதான் முதன்முறையாக கேள்விபட்டிருக்கலாம். ஆனால் இவர் கண்டுபிடித்த பொருட்களை வாழ்வில் தினந்தோறும் நீங்கள் பயன்படுத்திக்கொண்டே தான் இருப்பீர்கள்

செரிபியா - அமெரிக்காவை சேர்ந்த இவர் மிகப்பெரிய விஞ்ஞானியாக திகழ்ந்தவர். ஐன்ஸ்டீன், நியூட்டன் போன்றவர்களை பற்றி அதிகமாக தெரிந்த கொண்ட நாம் இவரை பற்றி தெரிந்து கொள்ளலாமலேயே போய்விட்டோம் என்பதே உண்மை

கடந்த 1856ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி பிறந்தார் இவர். ஆம் இவருக்கு இன்று தான் பிறந்தநாள். இந்த நாளில் இவரது கண்டுபிடிப்புகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
நிக்கோலா டெஸ்லா பெரும்பாலும் 3 ஆல் வகுபடும் எண்களை கொண்டே வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளார்.
எந்தவொரு கட்டிடத்திற்கு செல்லும் முன் அதை 3 முறை சுற்றி வருவராம்.
உணவு உண்ணும் முன் தட்டை 18 (3 ஆல் வகுபடும்) Tissue தாள்களால் சுத்தம் செய்த பின்னரே உணவு உண்வாராம்.
அப்படி உள்ள போது அவர் ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

அதன் படி,1+1=22+2=44+4=88+8=16 (1+6=7)16+16=32 (3+2=5)32+32=64 (6+4=10=>1+0=1

இதன் படி பார்த்தால் எண்கள் 1,2,4,8,7,5 என தொடர்கிறது.

ஆனால் 3,6,9 ஆகிய எண்கள் எதிலும் வரவில்லை.ஆகையால் 3,6,9 ஆகிய எண்களைப் பற்றி அவர் ஆராய்ச்சி செய்தார்.

3&6 ஆகிய எண்களை 9 என்கிற எண் கட்டுப்படுத்துகிறது / 9 என்ற எண்ணுக்குள் 3 & 6 ஆகிய எண்கள் கட்டுப்படுகிறது.
அப்படி எனில் எண் 9 தான் பிரபஞ்சத்தின் மையம்.
அப்படியெனில் எண் 9 தான் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது.
அதன்படி கொண்டால் 3,6,9 ஆகிய எண்களை தான் ஒட்டுமொத்த பிரபஞ்சமுமே சார்ந்து இயங்குகிறது.
பிரபஞ்சத்தில் நிகழும் ஒவ்வோர் அசைவும் இந்த 3 எண்களை சார்ந்தே இயங்குகின்றன.
ஆகையால் 3 6 9 என்கிற எண்ணே உலகை ஆளும் எண்ணாக டெஸ்லா அறிவித்தார்.
அதுவே காலப்போக்கில் 3 6 9 என்ற குறியீடானது.
இவர் கண்டுபிடித்த பொருட்கள் தான் இன்றளவும் நாம் பயன்படுத்தும் சாதனங்கள் அவை என்னவென்று பார்ப்போம்.
எக்ஸ் ரே
எக்ஸ் ரேவை முதலில் வில்ஹெலம் ரோன்ட்கென் என்பவர் கண்டுபிடித்திருந்தாலும் அதில் அதிநவீனத்தை புகுத்தியவர் டெஸ்லா தான். அவர் தனது நண்பரை அதன் மூலம் புகைப்படம் எடுக்கும் போது ஏற்பட்ட விபத்து தான் இதை கண்டுபிடிக்க வைத்துள்ளது. தற்போது டெஸ்லா கண்டுபிடித்த முறை படிதான் இன்றளவும் உலகளவில் எக்ஸ்ரேக்கள் எடுக்கப்படுகிறது
ரேடியோ
ரேடியோவை கண்டுபிடித்தது மார்க்கோனி என நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால் 1892ம் ஆண்டே ரேடியாவிற்கான மாடலை கண்டுபிடித்தனர் டெஸ்லா, ஆனால் அதற்கான காப்புரிமையை அவருக்கு வழங்க அப்போதைய அமெரிக்க அரசு மறுத்துவிட்டது. அதன்பின் 1901ம் ஆண்டு மார்க்கோணி ரோடியவை விடிவமைத்து அதற்கான காப்புரிமையை பெற்றார்.
ரிமோட் கண்ட்ரோல்
இன்று நாம் வீட்டில் இருந்த இடத்தில் இருந்த ரிமோட் மூலம் வீட்டில் டிவியில் சேனலை மாற்றுகிறோம். ஏசியில் அளவுகளை மாற்றுகிறோம். இந்த வயர்லெஸ் மூலம் செயல்படும் ரிமோட் கண்ட்ரோல் சிஸ்டத்தை கண்டுபிடித்தவர் டெஸ்லா தான்.
நியான் லைட்ஸ்
டெஸ்லா நேரடியாக நியான் லைட்களை கண்டுபிடிக்காவிட்டாலும், அவர் கேத்தோடு கதிர்களில் இருந்து 4 விதமான லைட்களை வெளிப்படுத்தலாம் என்ற கோட்பாட்டை எழுதியிருந்தார். அதை மூலமாக கொண்டே நியான் லைட்ஸ் தயாரிக்கப்பட்டது.
ரோபோக்கள்
நிக்கோலா டெஸ்லா ரோபோக்களை முதலில் கண்டுபிடிக்காவிட்டாலும், கடந்த 1898ம் ஆண்டு இவர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெகு தொலைவில் இருந்து கப்பல் மற்றும் படகுகளை இயக்குவது குறித்து விளக்கம் அளித்திருந்தார். அதன் மேம்படுத்தப்பட்ட விடிவத்தை தான் நாம் இன்று ரோபோக்களில் பயன்படுத்துகிறோம்.
வயர்லெஸ் டெக்னாலஜி
டெஸ்லாவில் இந்த உலகை வயர்லெஸ் மூலம் இணைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காக அவர் 185 அடி உயரத்தில் ஒரு டவர் கட்டி அதன் மூலம் உலகில் உள்ளவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும் வகையில் தொலை தொடர்பை ஏற்படுத்த முயற்சி செய்தார். ஆனால் அதை கட்டமைக்க பணம் இல்லாததால் அவரால் அதை செய்ய முடியவில்லை.
விஞ்ஞான உலகில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் கண்டுபிடித்த விஷயங்களை எல்லாம் அதற்கு முன்னரே கண்டுபிடித்து விஞ்ஞான உலகில் உள்ள அரசியலால் இவரது பெயர் மறைக்கப்படாலும் சமீபகாலமாக இவரது புகழ் ஓங்கிவருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...