முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகின் எட்டாவது அதிசயம் உங்களுக்கு தெரியுமா...?!

Subbiahpatturajan

உலகின் எட்டாவது அதிசயம்

சினார்தமிழன்



ஐன்ஸ்டீனின் எட்டாவது அதிசயம்

உலகத்தில் எட்டாவது அதிசயம் ஒன்று உள்ளது என்பது, பலரும் அறியாத ஒன்று.

அந்த எட்டாவது அதிசயம் தான் கூட்டுவட்டி (Compound Interest).

இதைக் கூறியது, 1921-ம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

ஒரு முதலீட்டில் ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டியை மீண்டும் முதலீடு செய்து வட்டிக்கு வட்டி கிடைத்தால், அது கூட்டு வட்டி.

உதாரணத்துக்கு, நாம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறோம் என வைத்துக்கொள்வோம்.

வட்டி (Interest) 10 சதவிகிதம் என்றால், வருடக் கடைசியில் அந்த முதலீட்டின் மதிப்பு 1,10,000 ரூபாய் (முதலீடு 1,00,000 + வட்டி 10,000).

அடுத்த வருடம் இதே 10 சதவிகிதம் வட்டி கிடைத்தால், வருடக் கடைசியில் 1,21,000 ரூபாய் என்று வளர்ந்திருக்கும் (முதலீடு 1,10,000+ வட்டி ரூ.11,000).

முதல் வருடம் 10,000 ரூபாய் வட்டி என்றால், இரண்டாம் வருடம் 11,000 ரூபாயாக வட்டி உயர்ந்திருக்கும்.

உங்கள் முதலீடு ஒரு லட்சம் ரூபாய் என்றாலும், வட்டிக்கு வட்டி கிடைத்ததால் அடுத்த அடுத்த வருடம் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

நம்மில் பலர், என்ன சார், ஆயிரம் ரூபாய்தானே அதிகமாகக் கிடைக்கிறது' என அலட்சியமாக இதை எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது.

ஆனால், இதேபோல் பத்து வருடங்களுக்குத் தொடர்ந்தால், பத்தாவது வருடத்தின் உங்கள் முதலீட்டின் வட்டி 23,579 ரூபாய்.இருபதாவது ஆண்டின் வட்டி 61,159 ரூபாய்.

முப்பதாவது ஆண்டின் வட்டி 1,58,630 ரூபாய்.

இதில் அதிசயம் என்னவென்றால், வட்டி என்னவோ அதே 10 சதவிகிதம்தான்.

நம் முதலீடும் ஒரு லட்சம் ரூபாய்தான்.

ஆனால், வருடங்கள் கூடக்கூட வட்டியும் கூடிக்கொண்டே இருக்கும்.

இதை Exponential Growth' என்பார்கள்.

ஒரு லட்சம் ரூபாய், 10 சதவிகிதம் வட்டியில் 30 வருடங்களுக்குப் பிறகு 17,44,940 ரூபாயாக வளர்ந்திருக்கும்.

அதே ஒரு லட்சம் ரூபாய், அதே 30 வருடங்களில் 20 சதவிகிதம் வட்டியில் 2,37,37,631 ரூபாயாக ஆக உயர்ந்திருக்கும்.

ஆம், இரண்டு கோடி ரூபாய்க்குமேல் வளர்ந்திருக்கும்.

இதனால்தான் கூட்டுவட்டியை ஐன்ஸ்டீன் உலகத்தின் எட்டாவது அதிசயம் என்றார்."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...