பேச்சில் கவனம் செலுத்தினாலே பாதிப் பிரச்சினைகள் ஓடிப் போய் விடும்.

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

"என் இனிய பொன் நிலாவே காப்புரிமை விவகாரம்: ஹைகோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு!"

Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான  தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று  "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...

பேச்சில் கவனம் செலுத்தினாலே பாதிப் பிரச்சினைகள் ஓடிப் போய் விடும்.

Subbiahpatturajan




விட்டுக் கொடுத்தல் வெற்றியே!

வாழ்க்கையை இனிமையாக்குவதும், துயரமாக்குவதும் பெரும்பாலும் சின்னச் சின்ன விஷயங்களே. சின்னச் சின்ன மலர்களின் கைகோத்தல் எப்படி ஒரு மாலையாய் உருவாகிறதோ, அப்படித்தான் வாழ்வின் இனிமைகளும் உருவாகின்றன. மனிதனுக்கே உரிய அடிப்படைப் பண்புகளைக் கொஞ்சம் தூசு தட்டித் துடைத்து வைத்தாலே போதும், வாழ்க்கை பளபளப்பாய் அழகாய் உருமாறிவிடும்.

அத்தகைய குணங்களில் ஒன்று தான் உறவுகளுக்கிடையே நிகழ வேண்டிய விட்டுக் கொடுத்தல். விட்டுக் கொடுத்தல் என்பது ஒரு வகையில் சகிப்புத் தன்மையின் குழந்தையே!

பல முதியவர்கள் தங்கள் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கடந்த காலத்தை அசை போடுகையில் வெப்பப் பெருமூச்சையே வெளி விடுவார்கள். “கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போயிருக்கலாம்” எனும் உச்சுக் கொட்டல் பலருடைய சிந்தனைகளிலும் வந்து ஒட்டிக் கொள்ளும்.

விட்டுக் கொடுத்தல் முன்னேற்றத்தின் முகவரி. மண் விட்டுக் கொடுக்காமல் இருந்தால் முளை உதயத்தைக் காண்பதில்லை. முட்டை விட்டுக் கொடுக்காமல் இருந்தால் ஒரு உயிர் உதயமாவதில்லை. மேகம் விட்டுக் கொடுக்காமல் இருந்தால் பூமியின் முகத்தில் மழையின் முத்தங்கள் இல்லை. எதையும் இறுகப் பற்றிக் கொள்வதிலல்ல, விட்டுக் கொடுப்பதிலேயே இருக்கிறது வாழ்க்கையின் ரகசியம்.

குடும்பத்தில் நிகழும் ஒரு சின்ன நிகழ்வை எடுத்துக் கொள்ளுங்கள். வார இறுதியில் என்ன செய்யலாம் என எல்லோரும் அமர்ந்து பேசுவீர்கள். “புதுப் படம் பாக்க போலாம்” என்பான் தம்பி. “அதெல்லாம் வேண்டாம் கோயில் போகலாம்” என்பார் அம்மா. “பீச் போகலாம்” என்பது உங்களுடைய கருத்தாய் இருக்கும். “எங்கே போலாம்ன்னு முடிவு பண்ணிச் சொல்லுங்க” என ஹாயாக அமர்ந்து விடுவார் அப்பா!

இந்தச் சூழலின் முடிவு என்ன? இங்கே ஒவ்வொருவரும் எப்படிச் செயல்பட்டார்கள் என்பதை வைத்தே விட்டுக் கொடுத்தலைப் புரிந்து கொள்ளலாம்.

பெரும்பாலும் விட்டுக் கொடுத்தல் என்பது அன்பின் வெளிப்பாடே! யார் விட்டுக் கொடுக்கிறார்களோ அவர்கள் அடுத்த நபர் மீது அபரிமிதமான அன்பு வைத்திருக்கிறார் என்று அர்த்தம். முதலில் விட்டுக் கொடுப்பது பெரும்பாலும் பெற்றோர் தான்! அவர்களுடைய அன்பு நிபந்தனைகளற்ற அன்பு என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

நமது உரையாடல்கள் பெரும்பாலும் ஒரு குத்துச் சண்டை போலவே நடக்கும். சண்டையில் எதிராளி தாக்கப்படுவதில் நமது வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் குடும்ப விவாதங்களில் அடுத்த நபர் காக்கப்படுவதில் தான் வெற்றி இருக்கிறது.

விட்டுக் கொடுப்பது என்பது நமது ஈகோவை விட்டுக் கொடுப்பதிலிருந்து துவங்குகிறது. விட்டுக் கொடுக்காத மனநிலைக்குள் “நான் பெரியவன்” எனும் கர்வம் ஒளிந்திருக்கிறது. “என் மகிழ்ச்சியே முக்கியம்” எனும் சுயநலம் அதற்குள் விழித்திருக்கிறது. ‘நான் தோற்று விடக் கூடாது” எனும் பிடிவாதம் அதற்குள் படுத்திருக்கிறது.

அமெரிக்காவின் பல பள்ளிக்கூடங்களில் ஒரு பழக்கத்தைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதாவது, இரண்டு குழந்தைகள் விளையாடுகின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு குழந்தை வெற்றி பெறும். ஒரு குழந்தை தோல்வியடையும். வெற்றியடைந்த குழந்தை “நான் தான் ஜெயிச்சேன்” என்றோ, தோல்வியடைந்த குழந்தை “நான் தோற்று விட்டேன்” என்றோ சொல்லக் கூடாது. இருவரும் கைகளைக் குலுக்கிக் கொண்டு “விளையாட்டு நல்லா இருந்தது” என்று தான் சொல்ல வேண்டும்! சின்ன வயதிலேயே வெற்றியின் மமதையோ, தோல்வியின் அவமானமோ மனதில் ஆக்கிரமிக்காமல் இருக்க அவர்கள் சொல்லும் வழி இது!

இத்தகைய பாடங்கள், அடுத்தவருடைய உணர்வுகளை மதிக்க குழந்தைகளைப் பக்குவப்படுத்தும். விட்டுக் கொடுத்தலின் அடிப்படை அடுத்தவர்களுடைய உணர்வுகளை மதிப்பதே!

விட்டுக் கொடுத்தல் என்பது தோல்வி என்பதே பொதுவான கருத்து. உண்மையில் விட்டுக் கொடுத்தல் என்பது தோல்வியல்ல! விட்டுக் கொடுத்தல் என்பதே வெற்றி. “வாழ்வின் உயர்ந்த மகிழ்ச்சி அடுத்தவர்களை மகிழ்ச்சிப் படுத்துவதில் தான் இருக்கிறது” என்பார்கள். விட்டுக் கொடுத்தல் அந்த மகிழ்ச்சியை உங்களுக்கு வழங்குகிறது.

“நான் விட்டுக் கொடுத்ததால தான் அவன் இன்னிக்கு இந்த நிலைமைல இருக்கான். இல்லேன்னா இன்னிக்கு அவன் அடையாளம் தெரியாம போயிருப்பான்.” என்றெல்லாம் பலர் புலம்புவதுண்டு. தயவு செய்து அதை நிறுத்துங்கள்!

விட்டுக் கொடுத்தலின் மிக முக்கியப் பண்பே அதை ஆனந்தமாய்ச் செய்ய வேண்டும் என்பது தான். சிலர் பிறருடைய பாராட்டைப் பெற வேண்டும் என்பதற்காகவே விட்டுக் கொடுப்பதுண்டு. உண்மையான விட்டுக் கொடுத்தல் அடுத்தவர்களுடைய பாராட்டையோ, அங்கீகாரத்தையோ எதிர்பார்க்காது.

ஒரு சின்ன விட்டுக் கொடுத்தல், ஒரு நாளையோ, ஒரு வருடத்தையோ, ஒரு வாழ்க்கையையோ அழகாய் எழுதி விட முடியும். பெரும்பாலான மண முறிவுகளையோ, நட்பு முறிவுகளையோ எடுத்துப் பாருங்கள். கோபமாய் வீசும் வார்த்தைகள். பிடிவாதமாய் பிடித்துத் தொங்கும் ஈகோ. விட்டுக் கொடுக்க மறுக்கும் மனநிலை. இவையே காரணமாய் இருக்கும்.

விட்டுக் கொடுத்தல் இரண்டு தரப்பிலிருந்தும் வரும். “நாம ஒரு படி கீழே இறங்கிப் போனால், எதிராளி இரண்டு படி கீழே இறங்கி வருவான்” என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

நாம் ஒரு படி கீழே இறங்க மறுத்து ஒரு படி மேலே ஏறினால், எதிராளி இரண்டு படி மேலே ஏறுகிறார். கடைசியில் ஒரு சின்ன விஷயம், இறங்கி வர முடியாத ஈகோவின் உச்சத்தில் நம்மைக் கொன்டு போய் நிறுத்தி விடுகிறது. எனவே விட்டுக் கொடுத்தலுக்கான முதல் சுவடை எடுத்து வைக்க தயங்கவே தயங்காதீர்கள்.

பெரும்பாலான சண்டைகளின் முதல் புள்ளி மிகவும் சின்னதாகவே இருக்கும். ஒரு சின்ன நெருப்பு ஒரு வைக்கோல் காட்டையே பொசுக்குவது போல, சண்டை பற்றிப் படர்ந்து விடுகிறது. துளியாக இருக்கையில் நெருப்பை அணைப்பது எளிது. விட்டுக் கொடுத்தல் அந்த வித்தையைக் கற்றுக் கொடுக்கிறது.

“நான் செய்வதெல்லாம் சரி” எனும் மனநிலையை விட்டு வெளியே வருவது விட்டுக் கொடுத்தலுக்கு முக்கியமான அம்சம். நாம் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் அல்ல எனும் சிந்தனை நமக்கு இருக்க வேன்டும். அடுத்தவர் சரியானவற்றைச் செய்வார் எனும் சிந்தனையை அது தான் கற்றுத் தரும். தனக்கு பலவீனம் உண்டு என்பதை உணரும் போது தான், பிறருடைய பலவீனங்களை ஒத்துக் கொள்வதும் எளிதாகும்.

பல சண்டைகள் தேவையற்ற காரணங்களுக்காக நடப்பவையே. கருத்து வேறுபாடு நிகழும் போது, இந்த விஷயம் சண்டையிடுவதற்குத் தகுதியுடையதா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். சண்டைக்கான விஷயத்தைத் தான் நீங்கள் பார்க்க வேண்டுமே தவிர, சண்டையிடும் நபரை வைத்து அந்த விவாதத்தை எடை போடக் கூடாது. அடடா “இந்த விஷயத்துக்கா இவ்ளோ எனர்ஜி வேஸ்ட் பண்ணினேன்” என்று தான் பல வேளைகளில் உள்மனசு சொல்லும்.

அது உண்மையிலேயே மிக மிக முக்கியமான விஷயமெனில் இருவருக்கும் பயனளிக்கும் வகையில் அந்த விவாதத்தை நடத்தலாம். இதை வின் – வின் அதாவது வெற்றி – வெற்றி விவாதம் என்பார்கள். இருவருக்கும் வெற்றி எனும் விவாதங்களில் விட்டுக் கொடுத்தல் சர்வ நிச்சயம்.!

நமது பேச்சில் கவனம் செலுத்தினாலே பாதிப் பிரச்சினைகள் ஓடிப் போய் விடும். பலரும், அடுத்தவர்களைக் காயப்படுத்தவேண்டும் எனும் ஒரே நோக்கத்தில் சுருக் சுருக் என பேசுவார்கள். அப்படிப்பட்டவர்கள் விட்டுக் கொடுத்தலைக் கற்றுக் கொள்வது பிரபஞ்சத் தேவையாகும். பரபரவென பேசிக் கொண்டே இருக்காமல் ஒரு முப்பது வினாடிகளேனும் அமைதி காப்பது விட்டுக் கொடுத்தலுக்கான முதல் படியாய் அமையும்.




சாலையில் வாகனம் ஓட்டும் போது யாராவது உங்களை முந்திச் சென்றால் மனதில் சுருக்கென கோபம் வருகிறதா? அடுத்த சிக்னலுக்குள் அவனை முந்திச் செல்லும் ஆவேசம் எழுகிறதா? கொஞ்சம் ஆர அமர, இதனால் என்ன பயன் விளையப்போகிறது என்பதை யோசித்துப் பாருங்கள். ஒன்றுமே இல்லை. முந்திச் செல்பவர் முந்திச் செல்லட்டும் என விட்டுக் கொடுத்தால், பல்வேறு விபத்துகளை நாம் தவிர்க்கவும் முடியும்.

விட்டுக் கொடுத்தலை பலவீனத்தின் அடையாளமாகவே பலரும் பார்க்கிறார்கள். உண்மையில் அது ஆன்ம பலத்தின் அடையாளம். மன உறுதியற்றவர்களால் விட்டுக் கொடுக்க முடியாது. பலவீனருடைய மனம் அடுத்தவர்களின் விமர்சனங்களுக்காகக் கவலைப்படும், அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ? தன்னை இளக்காரமாய் நினைத்து விடுவார்களோ என்றெல்லாம் சஞ்சலப்படும். மன உறுதி படைத்தவர்களுக்கு இத்தகைய கவலைகள் இருப்பதில்லை. எனவே அவர்களுக்கு விட்டுக் கொடுத்தல் சாத்தியமாகிறது.

விட்டுக் கொடுத்தல் நமது மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கிறது. மன பாரத்தை அகற்றி நம்மை இலகுவாக்குகிறது. மன்னிப்பும், விட்டுக் கொடுத்தலும் இருக்கும் நபர்களிடம் மன அழுத்தம் வந்து குடியேறுவதில்லை. மன அழுத்தமில்லாத உடல் ஆரோக்கியமானது என்பது மருத்துவம் அடித்துச் சொல்லும் உண்மையாகும்.

உறவுகள் வளர்ந்திட விட்டுக் கொடு
பிறர்க்கும் அதையேக் கற்றுக் கொடு.

தொடரும்...


கருத்துகள்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...

LPG திருடன் LPG thief...For attention

Subbiahpatturajan #LPGthief...Forattention   #LPGthiefForattention . இல்லதரசிகள் சிலிண்டர் வாங்கும் போது அவசியம் பார்க்க வேண்டிய விஷயங்கள்.. LPG சிலிண்டர் வாங்குவோர் கவனத்திற்க்கு... சமீப காலமாகவே இந்தியாவில் இந்த நூதன திருட்டு நடைப்பெறுகிறது., வட இந்தியாவில் தொடர்ந்து  தற்போழுது தமிழகததிலும் இந்த திருட்டு அரங்கேறி உள்ளது... சிலிண்டர் மூலம் இன்னோரு சிலிண்டர்களுக்கு கேஸ் ஏத்தும் காணோலியை காண்க.. #LPGthief...Forattention  அது மட்டும் அல்லாமல் சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர்கள் உதவியுடன், மான்ய விலை சிலிண்டர்களை திடுட்டுத்தனமாக பயன்படுத்துகின்றனர். வீடுகளுக்கு உடனடியாக சிலிண்டர்களை சப்ளை செய்யாமல் காலம் தாழ்த்தி, கடைகளுக்கு கொடுத்து, பின் இரண்டொரு நாள் கழித்து, அதை சப்ளை செய்கின்றனர்.. கேஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்படுவது, பகலில் தான். பெரும்பாலும், பெண்களே வீட்டில் இருப்பதால், எடையை சரிபார்ப்பது என்பது இயலாத காரியம். இதை பயன்படுத்தி, காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர்கள் முறைகேடில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது இல்லதரசிகள் சிலிண்டர் வாங்கும் போது அவசியம் பார்க்க வேண்ட...

பிறப்பு மற்றும் இறப்பு இரண்டும் இப்போது மிகவும் விலை உயர்ந்ததாகிவிட்டது

Subbiahpatturajan உங்கள் வாழ்க்கைக்கு அருமையான மேற்கோள்கள்.  இவை நான் குறிப்பிட்ட காலப்பகுதியில் பெற்ற மேற்கோள்களில் இருந்து எடுக்கப்பட்டவை, வாழ்க்கைப் பயணம்  I) முந்தைய நாட்களில், நம் உறவினர்கள் சில நாட்கள் எங்களைச் சென்று பார்த்துவிட்டு வீட்டை விட்டு வெளியே வரும்போது நம் கண்கள் ஈரமாகிவிடும்.  அதேசமயம், இப்போதெல்லாம் இறுதிச் சடங்குகளின் போது கூட கண்ணீரைக் காண முடியாது; பிறப்பு மற்றும் இறப்பு இரண்டும் இப்போது மிகவும் விலை உயர்ந்ததாகிவிட்டது ;  அறுவைசிகிச்சை இல்லாமல் பிறப்பு இல்லை, காற்றோட்டம் இல்லாமல் இறப்பு இல்லை; கண்ணீரும் புன்னகையும் பொய்யாகிவிட்ட நிலையில், உண்மையான மனிதனை அடையாளம் காண்பது இன்றைய நாட்களில் மிகவும் கடினம். உறவைப் பேணுங்கள்  II) உங்கள் கையில் டச் ஃபோன் மொபைலை வைத்திருப்பது நமது நிலைக்கு நல்லது;  ஆனால் அனைவருடனும் தொடர்பில் இருப்பது நமது அன்றாட வாழ்க்கைக்கு நல்லது;  III) வாழ்க்கை மாறுவதற்கு நேரம் எடுக்கும் என்று தோன்றியது ஆனால் காலம் மாறுவது நம் வாழ்க்கையையும் மாற்றிவிட்டது என்பதை மறந்து விடுகிறோம்; மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்  ...

First realize that not all Indian citizens are fools ...?!இந்திய பிரஜைகள் எல்லோரும் முட்டாள்கள் இல்லை என்பதை உணருங்கள்...?!

Subbiahpatturajan இந்திய பிரஜைகள் எல்லோரும் முட்டாள்கள் இல்லை என்பதை உணருங்கள்...?! மோடிக்கு_காவல்துறை உயர் அதிகாரியின் பதில்... கடந்த 60 வருடங்களாக காங்கிரஸ் என்ன செய்தது ? என்ற பிரதமர் திரு.மோடி அவர்களின் குற்றச்சாட்டுக்கு... #திரு. #ஜூலியஸ்ரெபைரோ, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி அவர்களின் பதில்... Mr. JULIUS REBERIO I.P.S., Ex Director General of Police - Maharashtra Ex Police Commissioner - Mumbai Ex Director General of Police - Gujarat Ex Director General of Police - Punjab ஒரு சாதாரண இந்திய பிரஜையாகிய நான் சொல்லிய இவைகள் அவர்களுக்கு போய் சேர வேண்டும்... மோடிஜி, இப்படி சொல்லுவதை நிறுத்திவிட்டு, 60 வருடங்களில் என்ன சாதித்தோம் என்பதை பாருங்கள்... இந்திய பிரஜைகள் எல்லாரும் முட்டாள்கள் இல்லை என்பதை முதலில் உணருங்கள்... நீங்கள் பிரதம மந்திரியாக இருக்கும் நம் இந்தியாவை 200 வருடங்களுக்கு மேலாக ஆங்கிலேயன் ஆட்சி செய்தார்கள். இந்தியர்கள் அனைவரும் அவனுக்கு அடிமைகளாகத்தான் இருந்தார்கள். 1947 இல் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சி ஆரம்பித்தபோது ஆங்கிலேயன் துடைத்து வைத்துவிட்டுப்போன பூஜ்யமான பொருளாதாரம்.....

“ஒரு விஷயத்தை சொல்றேன் யாருகிட்டேயும் சொல்லாதீங்க...

Subbiahpatturajan “ஒரு விஷயத்தை சொல்றேன்  யாருகிட்டேயும் சொல்லாதீங்க... நேர்மை பழகு... “எப்போதும் உண்மையைப் பேசுபவர்கள் பேசிய எதையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை” நூற்றாண்டுக்கு முன்னால் சாம் ரேபன் சொன்ன வார்த்தையின் அடத்தி அதிகமானது. எது முக்கியமானதோ அதைப்பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. அந்த முக்கியமான பட்டியலிலுள்ள அதி முக்கியமான விஷயம் இந்த நேர்மை.... நாம் பொருளாதாரம், இலட்சியம், புகழ் எனும் விஷயங்களுக்காய் அன்றாடம் ஓடுகிறோம். ஆனால் நேர்மையைக் குறித்துப் பேசுவதற்கு மறந்து போய்விடுகிறோம்.... அதிகபட்சம் நமது குழந்தைகள் நேர்மையை அறிவது ஆரம்பப்பாடசாலை புத்தகங்களில் மட்டுமே என்று கூடச் சொல்லலாம். சின்ன வயதில் குழந்தைகளுக்கு நேர்மையையும், உண்மையையும் பற்றிப் பேசிவிட்டு நாமே அதை நிறைவேற்றாமல் இருக்கிறோம். அப்போது நமது அறிவுரைகளும் குழந்தைகளின் மனதுக்குள் சென்று தங்குவதில்லை. நாட்டில் இன்று நேர்மைக்குப் பஞ்சம். நேர்மை இயல்பாகவே மனிதர்களிடம் இருக்க வேண்டியது. ஆனால் இன்றைய உலகில் நேர்மையாளர்கள் அருகி வரும் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் தான் தவற விட்ட ...

*இந்தக் கட்டுரையை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்...??!

Subbiahpatturajan #savethisartical # savethisarticals இந்தக் கட்டுரையை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.....* *ஒவ்வொரு கஷ்ட சமயங்களில் படித்து தேறுதல் பெருங்கள்.....* *இது  ஆத்மார்ந்த மூத்தோரின் அறிவுரை* *ஆத்மவிலாசம்* *உன்னை வாழ்த்த* *மனம்*  *இல்லாதவர்கள் இருப்பார்கள்* *அவர்களைப் பற்றி கவலைப்படாதே*. *நீ* *எதை செய்தாலும்* *அதில் ஒரு குறையை* *கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும்* *இருந்து கொண்டுதான் இருப்பார்கள்*. *அதையும் பெரிது பண்ணாதே*. *உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ*. *ஒன்றை மட்டும் தெரிந்து கொள்*. *ஒவ்வொரு மனிதனும்* *தனித்தனி* *ஜென்மங்கள்*. *அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்*.  *அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்*. *அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே*. *அவர்கள் போகும் வரை போகட்டும்* *போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள்* . *அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும்*. *அந்த உண்மையை நீ முன்கூட்டிய...

அதிகாரம் ஆபத்தானதாக சென்று கொண்டிருப்பது தான் உள்ளாட்சி அமைப்புகளின் பிரச்சனையாக இருக்கிறது

Subbiahpatturajan அதிகாரம் ஆபத்தானதாக சென்று கொண்டிருப்பது தான் உள்ளாட்சி அமைப்புகளின் பிரச்சனையாக இருக்கிறது.... கிராம பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?  கோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி?.... அதை தடுக்க என்ன செய்யலாம்?..... 🤔 இந்தியாவின் ஆணிவேராக கிராமங்களும், கிராம பஞ்சாயத்துகளும் கருதப்படுகிறது. கிராமங்களுக்கு அரசியல் அதிகாரமளித்தல் என்பது மிகவும் தவிர்க்க முடியாத ஒன்று.  அந்த அதிகாரம் ஆபத்தானதாக சென்று கொண்டிருப்பது தான் உள்ளாட்சி அமைப்புகளின் பிரச்சனையாக கருதப்படுகிறது.  தாசில்தார் கடமை தவறினால் தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பாக உள்ளாட்சித்தேர்தல் வேலைகள் வெளியாகி வருகிறது.  இந்திய பிரதமர் ஆனது போல சிலர் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் புகைப்படத்தை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஆரவாரம் செய்வதை காணமுடிகின்றது.  ஏன் அவர்களுக்கு இந்த வெற்றி இவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதை பொதுமக்களும், வாக்காளார்களும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.  ஒரு சாதாரண கிராம ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு வருவதால் சம்பந்தப்பட்ட நபருக்கு எ...

Behave with civility in public ...நாகரிகம் கருதி பொதுவெளியில் சற்று இங்கீதத்தோடு நடந்துகொள்ளுங்கள்.

Subbiahpatturajan நடத்தையில்தெளிவுவேண்டும் ஏது நாகரிகம்... ஏது அநாகரிகம் நீங்களே முடிவு செய்யுங்கள்... ★ முழுவதும் படித்துவிட்டு, விடுபட்ட முக்கியமான விடயங்களை கமெண்ட் பண்ணுங்க...!! ★ 1. அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீங்க ..(பண்ணவும் நினைக்காதீங்க) 2. முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேட்காதீர்கள் ... 3. கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள் ... 4. பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டு விடுங்கள் ..செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்வி கேக்காதீர்கள் .. 5. பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள் .. குறிப்பாக பொது இடம்,சிக்னல் 6. நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள் ... (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! - ( none of your business !). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள் ... அவர்கள் போனைக் கேட்காதீர்கள...