முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

#நிலத்தடிநீர்_சேமிப்பு_ஒன்றே_தீர்வு.

Subbiahpatturajan

#நிலத்தடிநீர்_சேமிப்பு_ஒன்றே_தீர்வு.





#பொதுநல_விழிப்புணர்வு

தமிழகத்தின் வருட மழையளவு 9 50mm .
nearly 1 meter.தமிழகத்தின் பரப்பளவு 1,30,000 சதுர கிலோமீட்டர்.

2,30,00,00,00,000 கன மீட்டர் மழை நாம் பெறுகிறோம்.ஒரு கன மீட்டர் என்பது ஆயிரம் லிட்டர்.

ஒரு TMC என்பது THOUSAND MILLION CUBIC FEET of water.அதாவது சுமார் 8,000 TMC மழையை நாம் பெறுகிறோம்.

ஒரு ஏக்கருக்கு சுமார் 46 லட்சம் லிட்டர் தண்ணீர்  ஒரு வருடத்திற்கு மழை மூலம் கிடைக்கிறது.சுமார் ஆறாயிரம் ஏக்கர் நிலத்திற்கு ஒரு TMC மழைநீர் கிடைக்கிறது.

அதை மிகச் சரியாகத் திட்டமிட்டுச் சேமித்துப் பயன்படுத்தினால் எந்த அண்டைமாநிலத்திடமும் கெஞ்சிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால், ஏரிகள் ,குளங்கள் போன்று சேமிக்கப்படும் தண்ணீரில் 90% வெயிலில் ஆவியாகிவிடுவதையும்,10% மட்டுமே தரைக்குக் கீழ் ஊடுறுவி நிலத்தடி நீராக மாறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சேமிக்கப்படும் நீரை , அப்படியே மொத்தமாக nearly 100% நிலத்தடி நீராக மாற்றும் BOREWELL RECHARGING TECHNIQUES  மிக எளிதானவை. குறைந்த செலவே பிடிக்கக் கூடியவை. 

இப்போதும் சில இடங்களில் நான் 
ஊருக்கு சென்ற இடங்களில் எல்லாம் கண்கூடாக பார்க்க நேர்ந்தது வீடு கட்டும்பணி நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருந்தேன்.
வீட்டிற்கு போர்வேல் போடும் பணி நடந்தது.கிட்டத்தட்ட 100அடி ஆழம் வரைக்கும் போர்போட்டு பார்த்தும்
அங்கு தண்ணீர் வந்தபாடில்லை.
போர்துழையில் துளையிடும் கருவி மாட்டிக்கொண்டதுதான் மிச்சம்.

ஒரு சமயத்தில் எங்கள் வீட்டிற்கு செப்டிக் டேங்க் தோண்டும் பணியின் போது 15அடியில் வந்த ஊற்று இப்போது 100 அடிவரை தண்ணிரை காணோம்.

       
நிலத்தடி நீர் முழுமையாக வற்றிப்போய், AQUEDUCTS அனைத்தும் முழுமையாக EMPTY ஆகி விட்ட இத்தருணத்தில் UNDERGROUND AQUEDUCT RECHARGING THROUGH BOREWELLS என்பது மிகப் பொருத்தமான வழிமுறையாக இருக்கும் .

விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன் என்ற முறையில் கேட்கிறேன்.ஒரு போருக்கு லட்ச ரூபாய் செலவு செய்து பதினைந்து போர் போட்ட விவசாயி, PIT குக் முப்பதாயிரம் செலவு செய்து நான்கு RAIN WATER HARWESTING AND BOREWELL RECHARGING PITS தன் நிலத்தில் அமைத்திருந்தால் ஒவ்வொரு ஏக்கருக்கும் தமிழ்நாட்டில் வருடத்திற்கு கிடைக்கும் 46லட்சம் லிட்டர் தண்ணீர் நிலத்தடி நீராக மாற்றப்பட்டு இருக்குமே ????

#ஏன்_செய்யவில்லை????




எனது விவசாய உறவினர் தோட்டங்களில், போர்களில் 24 மணி நேரமும் 5HP MOTOR ஓடிக்கொண்டே இருக்கிறது. சிறு குழந்தை ஒன்றுக்குப் போவதைப் போல கொஞ்சம் தண்ணீரைச் சுரண்டி எடுத்து கிணற்றுக்குள் கொட்டுகிறது.
1 HP மோட்டர் ஒரு மணி நேரம் ஓட .746 KWH (unit) மின்சாரம் தேவை.

5×.746×24=90

90×365=32674 .

ஒரு வருடத்திற்கு 32 000 யூனிட் இலவச மின்சாரத்தை செலவழித்து,கமர்ஷிய்ல் கட்டண மதிப்பில் வருடம் 3.2 லட்ச ரூபாயும்,அரசு மின்சாரம் விலைக்கு வாங்குகிற சராசரி மதிப்பிலேயே 1.6 லட்ச ரூபாயும் மதிப்புள்ள மின்சாரத்தை இலவசமாப் பெற்று ,அது அனைத்தையும் நிலத்தடி நீரை உறிஞ்சித் தள்ளுவதிலேயே செலவழிக்கிறார்கள் நம் விவசாயிகள்.

 100% மானியத்தில் மழைநீர் சேகரிப்புக் குளம் அமைத்துக் கொடுக்க அரசுகள் அறிவித்தும் அதை மிகப் பெரும்பாலோர் கண்டுகொள்ளவேயில்லை.
உண்மையாகவே விவசாயிகளுக்கு நன்மை நடக்க வேண்டுமானால், அவர்களின் தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டே தீர வேண்டும்.

மானியமே இல்லாவிட்டாலும் , ஒரு போர் போடுகிற செலவில் நான்கு RAINWATER HARWESTING PITS எடுக்கலாம்.அது நான்கு ஏக்கர் நிலத்துக்குப் போதுமானது.

ஆனால், பிரச்சனை என்னவெனில், ஒருவர் கஷ்டப்பட்டு மழைநீர் சேகரித்தால் உயரப்போவது அவரது நிலத்தின் நிலத்தடி நீர்மட்டம் மட்டுமல்ல.அக்கம்பக்கத்து அனைவர் நிலத்தின் நீர்மட்டமும் தான்.

நாம் கஷ்டப்பட்டு செலவு செய்து , பக்கத்துக் காட்டுக்காரன் உட்கார்ந்த இடத்தில் அனுபவிப்பதா என்கிற தயக்கம்தான் நிறையப் பேரைத் தடுக்கிறது.
அக்கம்பக்கத்துக் காட்டுக்காரர்கள் அனைவரிம் அமர்ந்து பேசி ஒருங்கிணைந்து செயல்பட்டால், மிக எளிதாக முடிகிற விஷயம் இது.

அவிழ்த்துப் போட்டுவிட்டு, டெல்லித் தெருவில் ஓடுவதில் இல்லை தீர்வு.உலகத்திலேயே அதிக மழை பொழியும் இடம் இந்தியாவிலுள்ள சிரபுஞ்சி என்பதை பள்ளிப் பாடத்தில் படித்திருக்கிறோம்.

ஆனால், அந்த சிரபுஞ்சியிலேயே கோடைக்காலத்தில் குடிநீர்ப் பிரச்சனை என்பது எவ்வளவு பெரிய அவமானம்.

பெய்கிற எல்லா மழைநீரையும் வீணடித்துவிட்டு, நம்மைத் தவிர எல்லோரையும் குறை சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி?????

முக்கியமான விஷயம்.

நம் ஊர் தெருக்களில் இப்போது இருப்பது தார்சாலைகள் தானா சிந்தித்துப் பாருங்கள். ஏன் நிலத்தடி நீர் இல்லை. காரணம் உங்களுக்கு நன்றாகவே புரியும்.

தார்சாலையில் மழைபெய்தாலும் குறைந்தபட்ச நீராவது நிலத்தடி நீராக மாறும்.ஆனால் இப்போது தார் சாலைகளுக்கு பதில் சிமெண்ட் சாலைகள் இது போதாதென்று பிளாஸ்டிக் சாலைகள் வேறு.  சரி தொழில் நுட்பம் தேவைதான் ஆனால் சாலையின் இரண்டு பக்கங்களிலும் குறைந்தபட்சம் சரியான வடிகால் அமைத்து அந்த நீரை சேமிக்க ஏதாவது ஒருவகையில் சட்டம் இயற்றப்பட்டதா
இவர்களின் ஒரே குறிக்கோள் மக்களை எப்போதும் கையேந்தும் நிலையில் வைத்திருக்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் ஆடும் ஆட்டத்திற்கெல்லாம் கேள்வி கேட்க துணிவு யாருக்கும் இருக்காது.

முடிந்த வரையில் நிலத்தடி நீரை சேமிக்க வழிமுறைகள் செய்து கற்றுக் கொண்டால் மனித இனம் வாழும் இனியும் சிந்திக்க தவறினால் வரும் காலங்களில் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

விழிப்போம்...
நன்றி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...