முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕

Subbiahpatturajan

தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕

தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕

பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர். மேலும் யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது அரசு .

அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு பெருகியது.

ஆனால் இலங்கை அரசு இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை. 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து கடத்திச் சென்றனர். புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர்.

உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்கள் விடுதலைப்புலிகள் பாசறையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு தமிழகத்திற்கு சென்றனர்.

மாணவிகள் ஜெயா, லலிதா, வினோஜா மற்றும் மதிவதனி உட்பட நான்கு பேரும் ஆண்டன் பாலசிங்கமும், அடேலும் தங்கியிருந்த சென்னை திருவான்மியூர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 முதல் காதல் மலர்கிறது 

அன்று தமிழ்நாட்டில் ஒரு ஹோலிப் பண்டிகையின் பொழுது பிரபாகரன் மீது  கலர் நீரை ஊற்றி விளையாடினார் மதிவதனி, அதற்கு கோபத்தில் கடிந்து கொண்டார் பிரபாகரன். வருத்தம் அடைந்த மதிவதனி அழுது கொண்டே கொண்டிருந்தார், ஆண்டன் அண்ணணிடம் பேசிவிட்டு திரும்பி வந்த பிரபாகரன் அழுது கொண்டிருந்த மதிவதனியை சமாதானம் செய்துவிட்டு தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு சென்றார்.

இதன் பிறகே இருவருக்கும் இடையிலான காதல் மலர்ந்தது, அன்றைய காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தினர் திருமணம் செய்ய தடை இருந்தது, அதை அனைத்து உறுப்பினர்களிடமும் பேசி அந்த தடையை நீக்கி திருமணத்திற்கு அனைவரின் சம்மதத்தையும் ஆண்டன் பாலசிங்கம் வாங்கினார். பிரபாகரன் மதிவதனியின்
திருமணம் மிக எளிமையாக திருப்போரூர் கந்தசாமி கோயிலில் ( தமிழ்நாடு, இந்தியா) 1 அக்டோபர் 1984 அன்று நடைபெற்றது.

தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕

தலைவர் பிரபாகரன்,அவர் பிறந்த காலகட்டத்தில் அவர் பிறந்த தேசத்துக்கு இருந்த ஆபத்தை அவராக உணர்ந்துகொண்டார்.

இது சாத்தியமா? நடக்க வாய்ப்பிருக்கா? மக்கள் தன் பக்கம் வருவார்களா? என்றெல்லாம் அதிகமாக சிந்திக்கவில்லை,உடனடியாக கூட இருந்த மிக சிலருடன் செயலில் இறங்கினார்.சில சூழ்நிலைகள் தானாக அமைந்தன,பலவற்றை தானாக அமைத்துகொண்டார்.தவறுகளில் இருந்து பாடங்களை வேகமாக கற்றுகொண்டார். வெற்றி அல்லது வீரமரணம் என்ற எளிய கோட்பாட்டை மனதில் வைத்து இறுதிவரை போராடினார்.தான் எந்த மக்களுக்காக போராடுகிறேனோ அவர்களில் பெரும்பான்மையினர் பிரக்ஞையற்ற வாழ்வு ஒன்றுக்கு தம்மை ஒப்புகொடுத்துவிட்டு வாழ்வது குறித்து பெரிதாக அவர் அலட்டிகொள்ளவில்லை.

அதிகம் பேசாத,ஆர்ப்பாட்டம்,ஆரவாரமில்லாத சற்று உயரம் குறைந்த அந்த மனிதர்,தமிழ் மக்களின் பலவீனங்களை ஒவ்வொன்றாக கண்டறிந்து அதற்கு மாற்றாக தன்னிடம் இருந்த சிறுபடையின் பலமாக மாற்றி வெற்றிகளை குவித்தார்.

தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕

குறித்த காலத்தின் பின்னரான தமிழ் மக்களின் பலவீன- புலிகளின் பலம் சமவிகிதம் சடுதியாக வீழ்ச்சி கண்ட போதும்,சற்றும் மனம் தளராமல் தான் நேசித்த மக்களை கடிந்து கொள்ளாமல்,பெருத்த மெளனம் ஒன்றை தமிழர்களுக்கு இறுதியாக கொடுத்துவிட்டு அவரும் அவர் சார்ந்தவர்களும் விடுதலைக்கான பாதையை வழிகாட்டி வந்த வேலையை நல்லபடியாக முடித்துவிட்டு சென்றுவிட்டனர்.அவரை புரிந்தவர்கள் மெளனமாகினர்,புரியாதவர்கள் உளறிகொட்டினர்.புரிந்தும் புரியாதவர்கள் வியந்து நின்றனர்.வெற்று வார்த்தைகளால் அவரை ஆராதிப்பதை விடுத்து விடுதலையை தவறவிட்ட இடத்தில் தேடுங்கள் "அவர் கிடைப்பார்"

தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕

உலகத்தின் எங்காவது ஒரு மூலையில் விடுதலை காற்றை சுவாசிக்க போராட தயாராக இருக்கும் மக்களிடையே மீண்டும் பிறப்பார்கள் பல பிரபாகரன்கள்,போரிடுவார்கள். அவர்கள் வேலை வழிகாட்டுவதுதான்.ஏனெனில் அவர்கள் ஏற்கனவே விடுதலையடைந்தவர்கள்...!

வெட்டி வீழ்த்தப்பட்டிருப்பது மரம் தான் விதைகள் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கின்றன.

விரைவில் தமிழிழம் பிறக்கும்.

தமிழர்களே ஒன்றுபடுங்கள் நமக்கான தமிழிழ தாயகத்தை உருவாக்க...


கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் கொடி உறவுகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...