முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்றும் உலகமே கொண்டாடக் கூடிய அதி அற்புதன்! சேகுவேரா...!

Subbiahpatturajan





🔥🔥🔥🔥
கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன் 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ், சிசிலியா டெ ல செர்னா தம்பதியர்களுக்கு முதல் மகனாக பிறக்கின்றார். அவர்கள் தங்களுக்கு பிறந்த தலைப்பிள்ளையை முத்தமிட்டு மகிழ்ந்தனர். அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து "ஏர்னெஸ்டோ குவேரா டி ல செர்னா" என பெயர் சூட்டினர்.


அப்போது குவேரா தம்பதிக்கு தெரிந்திருக்கவில்லை தனது மகனுக்கு வரலாற்றில் வேறு பெயர் பதிவு செய்யப்படும் என்பது.

எங்கோ அர்ஜெண்டினாவில் பிறந்து மருத்துவராக வளர்ந்து பின்னர் காடுகளில் அலைந்து திரிந்து லத்தீன் அமெரிக்க தேசத்து நாடுகளின் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் போராடி மரணித்துப் போன மாபெரும் போராளியாக இன்றும் உலகமே கொண்டாடக் கூடிய அதி அற்புதன்!




39 வயதிற்குள் எத்தனை எத்தனை அவதாரங்கள் எவ்வளவு அனுபவங்கள்.

மருத்துவராக, மோட்டார்சைக்கிள் பயணியாக, செஸ் விளையாடுபவராக, போட்டோகிராபராக, கொரில்லா போராளியாக, மழை ஏறுபவராக, விமானம் ஓட்டியாக,  

பத்திரிகையாளராக எழுத்தாளராக, வங்கித் துறையின் தலைவராக, அமைச்சராக, கரும்பு வயல்களில் அறுவடை இயந்திரம் இயக்குபவராக, சுரங்கத் தொழிலாளியாக, இன்னும் இன்னும் உண்டு. 

"சேகுவேரா"
☀☀☀☀☀☀☀☀☀☀☀☀
💥அர்ஜெண்டினாவில் பிறந்து, ஃபிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து, கியூபா நாட்டில்  சர்வாதிகார ஆட்சி செய்த  பாடிஸ்டாவை வீழ்த்தி கம்யூனிஸ்ட் ஆட்சி அமைய காரணமானவர்...

🌟லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்த,சர்வாதிகார ஆட்சிகளை அகற்ற, தான் வகித்த கியூபா நாட்டின் நிதியமைச்சர் பொறுப்பை துறந்து, காங்கோ, பொலிவியா நாடுகளில் புரட்சி படைகளை வழிநடத்தியவர்..

🌠1967 அக்டோபர் 9ல் CIAவால் சுட்டுக் கொல்லப்படும் வரையில் அமெரிக்க  ஏகாதிபத்தியத்துக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய....,

🌟தேசம் மதம் இனம் மொழி எல்லைகளை கடந்து  அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுத்த...
காலத்தை வென்ற ஒப்பில்லா கெரில்லா"போராளி"

 🌠புரட்சிகரதன்மைக்கும் தைரியத்துக்கும் அடையாள சின்னமாக இருக்கின்ற
 "புரட்சியாளன்"

❇அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெறத் துடிக்கின்றவர்களின் "நாயகன்"






எல்லாரையும் போல தாய்க்கு மகனாக, மனைவிக்கு கணவனாக, பிள்ளைகளின் தந்தையாக, நண்பர்கள் தோழர்கள் சூழ்ந்தவராக, கம்யூனிஸ்டாக புத்தகக் காதலராக, அறிவைத் தேடிக் கொண்டே இருந்தவராக,அநீதியை எதிர்த்துக் கொண்டே இருந்தவராக, 

நாடுகளைத் தாண்டி மொழிகளைத் தாண்டி இனங்களைத் தாண்டி மதங்களைத் தாண்டி மானுடத்தை நேசித்த மானுடம் வாழப் போராடியவர் அவர் தான் சேகுவாரா

மரணிக்கும் முன் சேகுவேரா வின்
கடைசி வார்த்தைகள்...

‌‌“ "என்னைக் கொல்வதற்காகவே இங்குள்ளாய், என்பதெனக்குத் தெரியும். சுடு, கோழையே.., ஓர் ஆளைதான், நீ கொல்லப் போகிறாய்"
("I know you are here to kill me. Shoot,coward, you are only going to kill a man")
🌠தனது வாழ்வினாலும்,
39 வயதினிலே தனது மரணத்தாலும், போர்க்குணத்தால்
உலக மக்கள் நெஞ்சில்
நீங்காது நிலைபெற்ற..
மங்காத புகழ்பெற்ற...
"மாவீரன்"
🌟✨ *சேகுவேரா* ✨🌟
நினைவுதினம் 

 (9 அக்டோபர் 1967)

பிறப்பு 14 ஜூன் 1928

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...