முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உடல் உறுப்புகள் தானம் செய்ய விரும்பினால்....

Subbiahpatturajan 


உடல் உறுப்புகள் தானம் செய்ய விரும்பினால்...

உடல் உறுப்பு தானம்

இந்தியாவில் ஒருவர்‌ உடல் உறுப்பு தானம் செய்ய விரும்பினால் அவர் உள்ள மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு நேரில் சென்று அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும்

அல்லது

Donar Card எனும் தமிழக அரசின் அடையாள அட்டையை www.tnos.org அல்லது www.transtan.org என்ற இணையதளப் பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இதன்மூலம் அரசு / தனியார் என எந்தவொரு மருத்துவமனையில் ஒருவர் மூளைச்சாவு அடைந்தாலும் அவரது உறுப்புகள் தானம் செய்யப்பட்டால் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் வழியாகத்தான் உறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்படும்.

உறுப்பு தானத்தில் ஏற்படும் குளறுபடிகளைத் தடுக்கவும் இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் இருக்கவும் தமிழக அரசின் உறுப்பு தான திட்டம் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 60க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இணைந்துள்ளன.

இந்த மருத்துவமனைகளில் யாருக்காவது மூளைச்சாவு ஏற்பட்டால் உடனடியாக உறுப்புதான ஒருங்கிணைப்புக் குழுவுக்குத் தெரிவிப்பார்கள்.

இக்குழுவில் உள்ளவர்கள் அந்த மருத்துவமனைக்கு சென்று மூளைச்சாவு ஏற்பட்டவரின் உறவினரிடம் பேசி அவர்களின் அனுமதி கிடைத்ததும் அதற்கான உறுதி மொழி கடிதத்துடன் உறுப்புகளைப் பெற்றுக் கொள்வர்.

மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், இணையம், இரைப்பை, சிறுகுடல், கண்கள், எலும்புகள், நரம்புகள், கைகள், விரல்கள், தோல் ஆகியவற்றை தானமாகப் பெறலாம்.

இயற்கையாக மரணமடைந்தவர்களிடம் இருந்து கண் விழித்திரை, இதய வால்வுகள், தோல்கள், எலும்புகள், தசை நார்கள், நரம்புகள் ஆகியவற்றை தானமாகப் பெறலாம்.

இப்படி ஒருவரிடமிருந்து 25 வகையான திசுக்களையும் உறுப்புகளையும் தானமாகப் பெற முடியும்.



ஓர் ஆரோக்கியமான மனிதனால் 10 நபர்களுக்கு தமது உறுப்புகளை தானமாகத் தர முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இறந்தவரின் உடல் உறுப்புகளைப் பெறுவதைவிடவும் மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து உறுப்புகளைப் பெறுவது மிகவும் கடினமானது.

விபத்தில் சிக்கியவரின் மூளை செயலிழந்த நிலையில் ஒருவரின் உடல் செயலற்றுப் போவதை கோமா நிலை என்பர்.

இதிலிருந்து மீண்டுவர முடியாத நிலைதான் மூளைச்சாவு எனப்படுகிறது.

மூளைச்சாவுக்கு பெரிதும் சாலை விபத்துக்களே காரணமாகின்றன.

மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் துடித்தாலும் அவரால் சுயமாக சுவாசிக்க முடியாது.

ஆகையால்தான் மூளைச்சாவு அடைவது மரணத்துக்குச் சமம் என்கிறார்கள மருத்துவர்கள்.

மூளைச்சாவு அடைந்தவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படாவிட்டால் சில மணி நேரங்களில் அவர் இறந்துவிடுவார்.

எனவே அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு மூளை தவிர பிற உறுப்புகள் தற்காலிகமாக பாதுகாக்கப்படுகின்றன.

இந்த இடைவெளி நேரத்தைப் பயன்படுத்தித்தான் ஒருவரின் உடலிலிருந்து உறுப்புகள் எடுக்கப்பட்டு பிறருக்குப் பொருத்துகிறார்கள்.

அதே நேரத்தில் ஒருவர்‌ மூளைச்சாவு அடைந்துவிட்டார் என மருத்துவர் ஒருவரால் மட்டும் தன்னிச்சையாக அறிவித்துவிட முடியாது.

பலகட்ட சோதனைகளுக்குப் பிறகுதான் ஒருவர் மூளைச்சாவு அடைந்தாரா இல்லையா என்பதை உறுதி செய்ய முடியும்.

அவ்வாறு மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து பெறப்படும் உறுப்புகள் குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்குள்ளாக கட்டாயம் பிறருக்குப் பொருத்தப்பட வேண்டும்.

அதனால்தான் விமானம் மூலம் உடல் உறுப்புகள் பலவும் நேர விரயமின்றி எடுத்து வரப்படுப்படுகின்றன.



கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லது சார்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...