முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்.!

Subbiahpatturajan




இஞ்சினீயரிங் படிச்சிட்டு ரொம்ப, வருசமா வேலை கிடைக்காத ஒருத்தர்,டாக்டர் ஆகிடலாம் என்று  கிளினிக் ஒன்றைத் திறந்தார்..
*
வாசலில் ஒரு போர்டு எழுதி வைத்தார்.
*
 எந்த வியாதியாக  இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும்.
*
உங்கள் வியாதி குணமாகவில்லையெனில், 1000 ரூபாயாகத் திருப்பித் தரப்படும் "
*
இதைக் கவனித்த,கிளினிக் வைக்க வசதியும்,வேலையும் இல்லாத மருத்துவர் ஒருவர், 
*
நம்ம போலி இஞ்சினீயர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயைப் பறிக்க உள்ளே சென்றார்.
*
"டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடியல .."
*
நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலில் இருக்குற மருந்தை,இவர் வாயில மூனு சொட்டு விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர்.
*
நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு, " அய்யோ டாக்டர், இது மாட்டு மூத்திரம் ஆச்சே" என்று அலறினார் இவர்.
*
"Very Good,இப்ப உங்க Taste Buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு! உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது..! 500 ரூபாய் ஃபீசை எடுங்கள் "
*
உண்மையான டாக்டர் வேறு வழி இல்லாமல், 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார்.
*
ஆனாலும்,ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை..சில நாட்கள் கழித்து,மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார்.
*
" டாக்டர்,எனக்கு ஞாபகமறதி ரொம்ப ஜாஸ்தியாயிருக்கு குணப்படுத்துங்க "என்றார்.
*
" நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலைத் திறந்து இவர் வாயில் மூன்று சொட்டுக்கள் விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர்.
*
" அய்யோ டாக்டர்,அது மாட்டு மூத்திரம் ஆச்சே " என்று அலறினார் இவர்..
*
"Very Good,உங்க Memory Power (மெமரி பவர்) நல்லாய்டுச்சு! 500 ரூபா எடுங்க " 
*
இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர், சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார்!
*
" எனக்கு கண் பார்வை சரி இல்லை .மருந்து தாங்க டாக்டர்",என்றார்.
*
" Sorry ! இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை! இந்தாங்க ஆயிரம் ரூபாய் " என்று, ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீயர் டாக்டர் 
*
"இது 500 ரூபாய் நோட்டாச்சே! " என்று பதறினார் இவர்.
*
" Very Good ! உங்க பார்வையும் நல்லாய்டுச்சு! எடுங்க 500 ரூபாய் " 
*
பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்.!
*
இந்தப் பதிவு நல்லவர்களின் மனதை புண்படுத்தும் படி இருக்கலாம்.

சமிபத்தில் நான் APB நாடு எனும்
 YouTube சேனலின் பதிவு.போலி டாக்டர் பார்த்து தான் இந்த பதிவை
ஒரு நகைச்சுவை க்காக பதிவு செய்கிறேன்.
வருத்தப்படுவோர் மன்னிக்கவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...