முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோரோனாவிற்கு நாமும் நமக்கு கோரானாவும் கற்றுக் கொடுத்த பாடங்கள்...!!!

Subbiahpatturajan



கோரோனாவிற்கு நாமும் நமக்கு கோரானாவும் கற்றுக் கொடுத்த பாடங்கள்...!!!

எப்படி இருந்தாலும் என்னவாக இருந்தாலும், ஏதோ ஒரு வழியில் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருந்தது.

 கிடைத்ததை சாப்பிட்டுக்கொண்டும், பிடித்த இடத்திற்கு போய்க் கொண்டும், தெரிந்தவர்களிடம் பேசிக்கொண்டும், சாதாரணமாகவே இருந்தாலும் வாழ்க்கையின் வண்ணம் அங்குமிங்குமாய் சிதறிக் கிடந்தது.

 சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக இல்லை என்றாலும் சோகங்களே வந்து புரட்டிப் போட்டாலும் வாழ்க்கையின் அழகு வழி மாறிவிடவில்லை.

உயிருக்கும் உணர்வுக்கும் ஒரு பங்கமும் வந்து விடவில்லை.

கடினங்கள் ஆகவே இருந்தாலும், கண்ணீராக இருந்தாலும், ஆனந்தமாகவே இருந்தாலும், ஆர்ப்பாட்டம் ஆகவே இருந்தாலும், அவஸ்தையாக கூட இருந்தாலும்  பகிர்ந்து கொள்ளவும் பங்களிக்கவும் உறவுகளும் நேசங்களும் ஒட்டிக் கொண்டும் உறவாடிக் கொண்டும் இருந்தன.


எல்லாம் தானாக அதுவாய் நகர்ந்திட, எங்கோ யாரோ ஏதோ ஒரு வைரஸ் பூமியில் உலாவுவதாக பேசிட, நமக்கென்ன என்று நாமும் இருந்திட, ஒரு நாள் நம் வீட்டிலும் அந்த இருமல் சத்தமும், உடற் சூடும் விபரீதமாக  மாறின. எவ்வாறு சுனாமி வந்து போன பிறகு தான் சுனாமி என்றால் என்ன என்று புரிந்து கொண்டோமோ அதுபோல் பலவித வார்த்தைகளின் அர்த்தம் கொரோனாவிற்கு பிறகு மனதின் ஆழத்தில் அடி சேர்ந்தது.


சாதாரண இருமல் என்று கசாயம் கொடுத்த காலம் போய், இருமல் தேச குற்றம் எனும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டது.


முன்பெல்லாம் எங்கோ ஒரு தேசம் ஏதோ ஒரு வைரஸால் பாதித்துவிட  பெரிதாய் ஒன்றும் நான் பேசிக் கொண்டதே இல்லை. ஆனால் இன்று ஒட்டுமொத்த உலகமும் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்துக்கொண்டு யார் தான் இங்கு நலமாக இருக்கிறார்கள் என்று, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்கின்றனர்.
நாடுகள் எல்லாம் ஏதாவது செய்து எப்படியாவது செய்து தப்பித்து விடலாம் என்று இருக்க, கடைசி ஒரு மனிதனிடமிருந்து கூட கொரோனா வெளியேறினால்தான் இந்த பூமி பாதுகாப்பாக இருக்கும் என்ற ஒரு நிலையை நாம் உணர்ந்துகொள்ள நமக்கு நாட்கள் தேவைப்பட்டன.

இன்று  அது வருடங்களாக மாறிவிட்டன சிதறிப்போன குடும்பங்கள், மறைந்து போன நண்பர்கள், காணாமல் போன உறவுகள், கசக்கப்பட்ட சமூகத்தினுடைய என்ன நடக்கிறது என்று தேடிப்பார்த்தால் வாழ்க்கையின் அழகு ஒரு ஓரத்தில் விம்மி அழுது கொண்டிருந்தது.

 காரணம் எது  என்று சொல்லத் தெரியவில்லை ஆனால் கொரோனா மட்டுமே காரணம் அல்ல என்று புரிந்தது. தோள் கொடுக்க முடியவில்லை, கைபிடித்து ஆறுதல் கூற முடியவில்லை, கண்ணீர் துடைக்க கரம் கொடுக்க முடியவில்லை, உயிர் பிரியும் வேளை அருகில் இருந்து ஆறுதல் சொல்ல முடியவில்லை, மூச்சுக்காற்றின் கடைசி வெப்பம் தணியும் வேளையில் ஒட்டி உறவாடிய உயிரோடு கடைசி நொடியை பகிர்ந்து கொள்ள இயலவில்லை.

கொரோனா நோயாக மட்டும் இருந்திருந்தால் மருந்தின் மூலம் சரி செய்து இருக்கலாம். ஆனால் அது மனிததிற்கும்  மனிதர்களுக்கும் இடையே ஒரு பிளவை ஏற்படுத்தியது. ஏனெனில் இவ்வேளையில் காப்பாற்றுவது என்பது கரம் கொடுக்காமல் இருப்பதுதான் என்று சொல்லப்பட்டது. இடைவெளியால் இடம் மாறிப் போனோம் இன்று.


வேதனையின் வடிவம் இவ்வாறுதான் இருக்குமோ என்று ஒவ்வொரு குடும்பமும் உணர்ந்து கொண்டது.ஒருபுறம் கொரோனா உயிர்களை பலி வாங்க, பசியும் தன் பங்கினை ஆற்ற தொடங்கியது. இதுவரை இவ்வாறான எந்த ஒரு அனுபவத்தையும் கொண்டிராத நாம் என்ன செய்வது என்று தெளிந்து எழுவதற்குள் பல பக்கத்து வீடுகள் காணாமல் போயிருந்தன. பல உறவுகள் மக்கிப் போயிருந்தன. 


நாம் இருந்தும் இருக்க இயலவில்லையே என்ற குற்ற  உணர்ச்சியில் தன் குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்ள, தன்னை தனிமைப்படுத்தி தன் குடும்பத்தை தனிமைப்படுத்தி வாழ்வை நடத்துவதைத் தவிர வேறொன்றையும் செய்ய இயலாத நிலைக்கு தள்ளப்பட்டது சமூகம். இவ்வாறு கூட நம்மால் வாழ முடியுமா என்ற கேள்விக்கு நாமே பதில் சொல்லிக் கொண்டோம். 

வருடங்கள் இப்படி ஓடிப்போகும் என ஒருவரும் நினைக்கவில்லை. முகக் கவசம் ஆடையின் வடிவமாக மாறும் என எவரும் உணர்ந்திடவில்லை. கை கழுவுவது கட்டுப்பாடாக மாறும் என நாம் என்றும் யோசித்ததே இல்லை. இருந்தும் நாம் நம்மை பழகிக் கொண்டோம்.

இதுதான் மனித இனம் ஒவ்வொரு அழிவிற்கு  பின்னாலும் தன்னைத்தானே நியாயப்படுத்தி, நிம்மதி அடையச் செய்து இவ்வுலகில் வாழ்ந்திட காரணம். மனித இனம் பூமியில் வாழ தேவையான தகவமைப்பு  பெற்றுள்ளதா என்றால், இல்லை என்று கூறலாம். ஆனால் ஒவ்வொரு முறை ஒரு அழிவு ஏற்படும் போதும் தப்பித்துக் கொள்ளும் முறையை நாம் கற்று  இருந்தோம். ஒவ்வொரு தவறுகளுக்கு பின்னாலும் காயங்களோடு முன்னேறுவது எப்படி என்று நாம் நமக்கு சொல்லிக் கொண்டிருந்தோம். எது வந்து தடுத்தாலும் எப்படி தடுத்தாலும், வழியை கண்டு பிடிப்பதில் நாம் சிறந்தவர்களாக இருந்தோம், இருக்கிறோம். 


கொரோனா நமக்கு எவ்வளவோ பாடங்களை கற்று கொடுத்திட,  நாமும் கொரோனாவிற்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்தோம், மனித இனம் தன்னைத் தானே வழுப்படுத்திக் கொள்ளும் மற்றும்  வளப்படுத்திக் கொள்ளும் என்று. காயங்கள் பெரிதுதான், வடுக்களும் வலிமையானது தான், சோகங்கள் சுமக்க முடியாதவை தான், விட்டுப் போன உயிர்கள் திரும்பப் பெற முடியாதவை தான், ஆனால் வரைய வண்ணங்கள் இன்றும் நம்மிடம் உள்ளன.

என்னவாக இருந்தாலும் எப்படியாக இருந்தாலும் மீண்டும் எழுவதும் மீண்டு எழுவதும் மனித இனம் மறையாததற்கு காரணம். மனிதத்தோடு வாழ்வதற்கு காரணம். எனவே என்ன நடந்தாலும் நாம் யாரென்று கொரோனா கற்றுக் கொண்டு போகட்டும்.

பகிர்ந்தளிப்பது பங்களிப்பது நம் இரத்தத்தில் ஊறிப்போன உணர்வுகள். சில காலம் இடைவெளி இருக்கலாம் ஆனால் அதுவே நிரந்தரமல்ல. தோள் கொடுக்கவும் கரம் கொடுக்கவும் நாம் ஒருபோதும் தவறியதில்லை. சில அடி இடைவெளி நம்மைப் பிரித்துவிடப் போவதுமில்லை. காத்திருப்போம் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள.

ஒவ்வொரு தவறுகளுக்கும் பின்னாலும் காயங்களோடு... முன்னேறுவது எப்படி என்று நாம் கற்றுக் கொண்டே இருக்கிறோம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...