முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Surprising Miracle We are privileged to have this Prime Minister ... ஆச்சரியம் அதிசயம்

Subbiahpatturajan


#சினார்தமிழன் #cinartamilan #kuttystory

நான் எப்போதும் மோடி ஜி யை விமர்சிப்பவனாகவே இருந்து வருகிறேன், ஆனால் இன்று அவரது பிறந்தநாளில் அவரைப் பற்றி அதிகம் அறியப்படாத சில நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

உங்களுக்கு தெரியுமா..!!!
மோடி இரண்டு முறை பிறந்தவர் - முதலில் ஆகஸ்ட் 29, 1949 (அவரது டிகிரி சான்றிதழில் உள்ளது) மற்றும் இரண்டாவது செப்டம்பர் 17, 1950 (பொதுவாக அறியப்படுவது). 1950 இல் பிறந்த மோடி, தனது 6 வயதில் வாட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்றார், 
ஆனால் அந்த காலக்கட்டத்தில் வாட்நகரில் வெறும் ரயில் தடங்கள் மட்டுமே இருந்தன. உண்மையான ரயில் நிலையம் 1973 இல் கட்டப்பட்டது. அப்போது மோடிக்கு வயது 23.

மோடி எமர்ஜன்சி காலத்தில் மறைந்து வாழ்ந்து வந்தார், ஆனால் 1978 இல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாமலேயே 1983 இல் குஜராத் பல்கலைக்கழகத்தில் Entire political science முதுகலை பட்டம் படித்தார். 
Entire political science இல் முதுகலை பட்டம் பெற்ற ஒரே நபர் மோடி மட்டுமே. 
குஜராத் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட இப்படி ஒரு பாடத்திட்டம் இருப்பதை 2014 க்குப் பிறகே அறிந்து கொண்டனர்.

Entire political science பட்டப்படிப்பில் மாஸ்டர்ஸ் தேர்ச்சி பெற்றார், தனியாக தேர்வு எழுதினார், தனியாகவே பட்டமும் பெற்றார். 
இதுவரை மோடியுடன் படித்ததாகக் எந்த மாணவரும் பேராசிரியரும் கண்டுபிடிக்கபடவில்லை. 

இந்தியாவில் கணினிகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே, மோடியின் பட்ட சான்றிதழ் ஒரு கணினியால் அச்சிடப்பட்டது. 
1978 ஆம் ஆண்டில் மோடியின் பட்டத்திற்கு முன்பும், அதன்பிறகான 10 ஆண்டுகளுக்கு பின்பும், சான்றிதழ்கள் பல்கலைகழக ஊழியர்களால் கைகளாலேயே எழுதப்பட்டன. 
1992 இல் மைக்ரோசாப்ட் காப்புரிமை பெற்ற எழுத்துரு (font) 1978 இல் மோடியின் பட்டத்தை அச்சிட பயன்படுத்தப்பட்டது. 
அலுவலங்கங்கள், கல்லூரிகளின் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையில் மோடியின் சான்றிதழ் அச்சிடப்பட்டுள்ளது. 

மோடிஜியின் வாழ்க்கையில் தான் எத்துனை ஆச்சரியங்கள், எத்தனை அதிசயங்கள்..
இப்பேற்பட்ட அதிசயப்பிறவி பிரதமராய் கிடைக்க ஏழேழு ஜென்மத்திலும் புண்ணியம் செய்திருக்க வேண்டும், அப்பேற்பட்ட மகானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமிதமடைகிறேன்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...